இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், 17ஆவது ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களுக்கான தேசிய அமர்வு 2026 (NAFLIA) விருதுகள் வழங்கும் நிகழ்வில் நான்கு தேசிய மட்ட கௌரவிப்புகளை சுவீகரித்துள்ளது. இலங்கை காப்புறுதி சம்மேளனத்தினால் (IASL) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, நிபுணத்துவ சிறப்பை கொண்டாடுவதற்கான ஆயுள் காப்புறுதித் தொழிற்துறையின் முன்னணி கட்டமைப்புகளில் ஒன்றாக கருதப்படுவதுடன், சிறந்த வினைத்திறன், வாடிக்கையாளர் நோக்கு, புத்தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களை NAFLIA கௌரவித்திருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பெற்றுக் கொண்ட நான்கு கௌரவிப்புகளினூடாக, அதன் வலிமை மற்றும் பங்காண்மை விநியோகத் தொடர்பின் திறமை ஆகியன வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், உயர் வினைத்திறன் வாய்ந்த திறமையை கட்டியெழுப்புவதில் நிறுவனத்தின் தொடர்ச்சியாக நோக்கு மற்றும் நம்பிக்கை வாய்ந்த வங்கியியல் உறவுகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை அணுகச் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டிருந்தன.
தேசிய மட்டத்தில், NTB பிரிவின் சிரேஷ்ட வலய முகாமையாளர் சரித் அபேவர்தன, சிறந்த பாங்கசூரன்ஸ் விற்பனை மேலதிகாரி/அணித் தலைவர் பிரிவில் தங்க விருதை சுவீகரித்திருந்தார். பாங்கசூரன்ஸ் பிரிவில் சிறப்பை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அவரின் தலைமைத்துவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் சாதனையை மேலும் வலிமைப்படுத்தும் வகையில், NTB பிரிவின் இணை உறவுபேண் முகாமையாளர் கனிஷ்க தேவசிங்கவிற்கு, Fast Starter பிரிவில் வெள்ளி விருது வழங்கப்பட்டிருந்தது. நிறுவனம் இரு வெண்கல விருதுகளையும் சுவீகரித்திருந்தது. NTB பிரிவின் வலய முகாமையாளர் தர்மராஜசிங்கம் கோகுலரமணன், சிறந்த பாங்கசூரன்ஸ் விற்பனை மேலதிகாரி/அணித் தலைவர் பிரிவில் வெண்கல விருதை சுவீகரித்ததுடன், சிறந்த பாங்கசூரன்ஸ் விற்பனை அதிகாரி பிரிவில் NTB பிரிவின் உறவு பேண் முகாமையாளர் தினேஷி பெர்னான்டோ வெண்கல விருதை சுவீகரித்தார். இந்த விருதுகளினூடாக, யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பங்காண்மை விநியோக அணியின் திறமை வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், இலங்கையர்களுக்கு முக்கியமானதை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும் வகையில் அர்த்தமுள்ள வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்திக் கொள்ளும் ஆற்றலையும் வெளிப்படுத்தியிருந்தது.
இந்த சாதனை தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பங்காண்மை விநியோக அதிகாரி வத்சலா அளுத்கெதர கருத்துத் தெரிவிக்கையில், “எமது பங்காண்மை விநியோக அணியுடன் நாம் கட்டியெழுப்பிப் பேணும், நிபுணத்துவம், வாடிக்கையாளர்-மையப்படுத்திய செயற்பாடுகள் மற்றும் ஆலோசகர் நிபுணத்துவம் ஆகியவற்றில் உயர்ந்த நியமங்களை பேணுவதற்கான பிரதிபலிப்புகளாக இந்த கௌரவிப்புகள் அமைந்துள்ளன. எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு எமது ஊழியர்கள் ஏற்படுத்தும் பெறுமதிக்காக தேசியமட்டத்தில் கௌரவிப்பைப் பெற்றுள்ளதை காண்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.
“ஆயுள் காப்புறுதித்துறையில் இந்த வெற்றி என்பது வெறும் விற்பனைத் திறன் என்பதற்கு அப்பால் சென்ற ஒன்றாகும். அதற்கு, வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகள் பற்றிய ஆழமான புரிதல், வலுவான மற்றும் நம்பகமான கூட்டாண்மைகள், மற்றும் நிறுவப்பட்ட வங்கி உறவுகள் மூலம் காப்பீட்டுத் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்கச்செய்யும் ஆற்றல் ஆகியவை அவசியமாகின்றன. NAFLIA 2026 விருது விழாவில் எமக்குக் கிடைத்துள்ள அங்கீகாரமானது, எமது அணியிலுள்ள திறமையாளர்களின் தரத்திற்கும், இலங்கையில் நிதிப் பாதுகாப்பு நிலையை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பிற்கும் சான்றாக அமைகிறது. தகுதியான இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ள எமது வெற்றியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் சாதனைகள், தொழில்சார் சிறப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவையில் தொடர்ந்தும் புதிய உச்சங்களைத் தொடுவதற்கு எமக்கு ஊக்கமளிப்பதுடன், அவர்களின் தொடர்ச்சியான வெற்றியைக் காண்பதற்கும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என மேலும் குறிப்பிட்டார்.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் சுமார் நான்கு தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2026 ஜுன் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 43.1 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 102.1 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.