உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை பெற்றுக் கொள்ளும் சௌகரியத்தை உங்கள் விரல்நுனிகளில் அனுபவியுங்கள்.
Union Life Plus is more than just Life Insurance
—it’s a powerful blend of protection and attractive investment returns.
Discover the features that make it the ideal plan for securing your future and protecting your loved ones.
உங்களின் எதிர்பாராத இழப்பின் போது, உங்களின் அன்புக்குரியவர்களுக்கும், தங்கியிருப்போருக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சவால்கள் நிறைந்த காலத்திலும் அவர்கள் நிதிப் பாதுகாப்புடனும், அரவணைப்புடனும் திகழ்வதை உறுதி செய்யும்.
உங்கள் ஆயுள் காப்புறுதியுடன் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த அனுகூலத்தினூடாக, காப்புறுதி காலப்பகுதியினுள் விபத்தின் காரணமாக ஆயுள் காப்புறுதிதாரர் உயிரிழக்கும்பட்சத்தில் இந்த அனுகூலத்தொகை இரட்டிப்பு கொடுப்பனவை வழங்கும்.
இந்த தெரிவுக்குரிய காப்பீட்டை உங்களின் ஆயுள் காப்புறுதியுடன் மட்டும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், காப்புறுதி காலத்தின் போது புற்றுநோயினால் இனங்காணப்பட்டால் நிதிப் பாதுகாப்பை வழங்குவதுடன், மேலதிக நிதிச் சுமையின்றி சிகிச்சைபெறுவதில் உங்களைச் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக அமையும்.
உங்களின் புற்றுநோய் காப்பீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த அனுகூலம், புற்றுநோயினால் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து 12 மாதங்கள் வரை அத்தியாவசிய நிதி ஆதரவை வழங்கும். அவசியமான தருணத்தில் உங்களுக்கு மேலதிக பாதுகாப்பு உள்ளதை இது உறுதி செய்யும்.
Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit Ut et massa mi. Aliquam in hendrerit urna..
18 வருடங்கள் (அருகிலுள்ள பிறந்ததினம்)
50 வருடங்கள் (அருகிலுள்ள பிறந்ததினம்)
60 வருடங்கள் (சரியாக)
10 ஆண்டுகள்
Clicklife app என்பது இலங்கையின் காப்புறுதித்துறையில் காணப்படும் புரட்சிகரமான புத்தாக்கமான தீர்வாகும். Clicklife app உடன் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் தொலைபேசியினூடாக சில நிமிடங்களில் ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றை கொள்வனவு செய்து கொள்ள முடியும்.
Clicklife app ஊடாக காப்புறுதிதாரர்களுக்கு தமது ஆயுள் காப்புறுதியை நிர்வகித்துக் கொள்ள முடிவதுடன், காப்புறுதி விபரங்கள், கட்டுப்பணம், பிரத்தியேக தகவல் பதிவேற்றங்கள், உரிமைகோரல் சமர்ப்பிப்புகள் மற்றும் பல அம்சங்களை உடனடியாக அணுகக்கூடியதாக இருக்கும்.
app இனுள் காணப்படும் “Pay As You Live Challenge” இல் பங்கேற்று வெகுமதிப் புள்ளிகளை திரட்டிக் கொள்வதற்கான பிரத்தியேக வாய்ப்பு வழங்கப்படும்.
உடற்தகைமை சவாலினூடாக திரட்டிக் கொண்ட வெகுமதிப் புள்ளிகளை, Thayaga இல் பயன்படுத்திக் கொள்ளலாம். 120க்கு அதிகமான பங்காளர் விற்பனை நிலையங்களிலிருந்து விசேட சலுகைகள் வழங்கப்படும்.
Clicklife app ஊடாக மாத்திரம் கிடைக்கும் விசேட நலன்பேணல் சலுகைகளை பெறலாம்.
தெரிவு செய்து கொள்ளக்கூடிய இரண்டு முறைகளினூடாக ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றை கொள்வனவு செய்யலாம்.
தெரிவு 01 - ஆயுள் காப்புறுதி மட்டும்
எதிர்பாராத சந்தர்ப்பங்களில் அன்புக்குரியவர்களை பாதுகாத்துக் கொள்வதற்கான அத்தியாவசிய ஆயுள் காப்புறுதியை வழங்குகின்றது. ஆயுள் காப்புறுதிதாரர் விபத்தொன்றின் காரணமாக உயிரிழக்கும்பட்சத்தில், உயிரிழப்பு அனுகூலத்தை இரட்டிப்பாக்கி வழங்கும் தெரிவையும் கொண்டுள்ளது.
தெரிவு 02 – ஆயுள் காப்பீடு + புற்றுநோய் பராமரிப்பு காப்பீடு
புற்றுநோய் பராமரிப்பு காப்பீடு என்பது Clicklife app ஊடாக பிரத்தியேகமாக கிடைக்கும் தெரிவுக்குரிய மேலதிக உள்ளடக்கமாகும், ஆயுள் காப்புறுதியுடன் மாத்திரமே இதனை கொள்வனவு செய்து கொள்ளலாம். துரதிர்ஷ்டவசமான புற்றுநோய் இனங்காணலின் போது, அத்தியாவசிய நிதிசார் பாதுகாப்பை வழங்கும். இதில், மருத்துவ உதவி அனுகூலமும் அடங்கியிருப்பதுடன், 12 மாதங்கள் வரை மாதாந்த வருமானமாக மேலதிக நிதிசார் உதவியையும் வழங்கும்*.
*நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
தெரிவு செய்து கொள்வதற்காக மூன்று அம்ங்களில் ஆயுள் காப்புறுதி திட்டம் (ஆயுள் காப்புறுதி) கிடைக்கின்றது. அவை வருமாறு:
Option 01 – LKR 1,000,000
Option 02 – LKR 2,000,000
Option 03 – LKR 3,000,000
காப்புறுதி தவணைக் காலப்பகுதியில் புற்றுநோய் இனங்காணப்பட்டதும், இணைந்த மேலதிக காப்பீட்டுத் தொகையிலிருந்து மொத்தத் தொகை கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டு, உடனடி நிதிசார் ஆதரவு வழங்கப்படும்.
மன நிம்மதியை உறுதி செய்யும் வகையில், மருத்துவ உதவி அனுகூலத்தினூடாக மேலதிக நிதிப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
உடனடியாக ரொக்கத் தொகை கொடுப்பனவு:
புற்றுநோய் இனங்காணலுடன், ரொக்கத் தொகை கொடுப்பனவு மேற்கொள்ளப்படுவதுடன், வழங்கப்படும் தொகை நோய் நிலையின் கட்டத்தின் பிரகாரம் தீர்மானிக்கப்படும்.
| புற்றுநோயின் நிலை | நன்மை செலுத்துதல் |
|---|---|
| நிலை 01 | புற்றுநோய் காப்பீட்டு பெறுமதியின் 25% |
| நிலை 02 | கட்டம் 01 இல் ஏற்கனவே செலுத்தப்பட்ட உரிமைகோரல் பெறுமதிகள் நீங்கலாக, புற்றுநோய் பராமரிப்பு காப்பீட்டின் 50% தொகை. |
| நிலை 03 | கட்டம் 01 மற்றும் 02 இல் ஏற்கனவே செலுத்தப்பட்ட உரிமைகோரல் பெறுமதிகள் நீங்கலாக, புற்றுநோய் பராமரிப்பு காப்பீட்டின் 100% தொகை. |
மருத்துவ உதவி அனுகூல கொடுப்பனவு:
தகைமை வாய்ந்த மருத்துவ உதவி அனுகூலத் தொகை என்பது தெரிவு செய்யப்பட்ட புற்றுநோய் பராமரிப்பு காப்பீட்டின் பெறுமதியின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
| புற்றுநோய் காப்பீட்டு பெறுமதி (ரூ.) | நன்மை செலுத்துதல் (ரூ.) (அதிகபட்சம் 12 மாதங்கள் வரை) |
செலுத்த வேண்டிய அதிகபட்ச தொகை (ரூ.) |
|---|---|---|
| 1,000,000 | 20,000 / மாதமொன்றுக்கு | 240,000 |
| 2,000,000 | 40,000 / மாதமொன்றுக்கு | 480,000 |
| 3,000,000 | 60,000 / மாதமொன்றுக்கு | 720,000 |
18 மற்றும் 50 வயதுக்குட்பட்ட எவருக்கும் விண்ணப்பிப்பதற்கான தகைமையை கொண்டிருப்பர். 60 வயது வரை காப்புறுதியை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
ஆயுள் காப்புறுதி மற்றும் புற்றுநோய் பராமரிப்பு 10 வருட காப்புறுதி தவணையை கொண்டிருப்பதுடன், அந்த 10 வருட காலப்பகுதியினுள் கட்டுப்பணங்கள் செலுத்தப்படும்.
கட்டுப்பணத்தை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்த அடிப்படையில் செலுத்தலாம்.
Have many more questions?