நிர்வாக சபை அங்கத்தவர்கள்

கிரிஷான் பாலேந்திரா
(2019 ஜனவரி முதல் பணிப்பாளர் சபை அங்கத்தவர்) திரு. கிரிஷான் பாலேந்திரா யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் தலைவர் (நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்). ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் தலைவராகவும் திரு. பாலேந்திரா திகழ்கிறார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் என்பதுடன், இலங்கையிலுள்ள போலந்து குடியரசின் தூதரகத்தின் கௌரவ ஆலோசகர் நாயகமாகவும் திகழ்கிறார். நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை ஆகியவற்றின் முன்னாள் தலைவராகவும் இவர் கடமையாற்றியிருந்தார். ஹொங் கொங் UBS Warburg இல் முதலீட்டு வங்கியியல் பிரிவில் இவர் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்ததுடன், மூலதனச் சந்தைகளில் பிரதானமாக கவனம் செலுத்தியிருந்தார். லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து சட்ட (LLB) பட்டத்தையும், INSEAD இடமிருந்து MBA பட்டத்தையும் திரு. பாலேந்திரா பெற்றுள்ளார்.

சுரேஷ் ராஜேந்திர
(2011 ஆகஸ்ட் முதல் அங்கம் வகிக்கிறார்) ஆகஸ்ட் 2011 முதல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் ராஜேந்திர திகழ்கிறார். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் குழும நிறைவேற்று கழகத்தின் அங்கத்தவர் என்பதுடன், சொத்துக்கள் குழுமத்தின் தலைவராகவும் திகழ்கிறார். ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் பிஎல்சியின் பணிப்பாளராகவும் திகழ்கிறார். நிதியியல், சொத்துக்கள் மற்றும் ரியல் எஸ்டேட், பிரயாணம் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் வியாபார அபிவிருத்தி போன்ற துறைகளில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் 25 வருட கால அனுபவத்தை சுரேஷ் கொண்டுள்ளார். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்துடன் இணைந்து கொள்ளும் முன்னர், அவுஸ்திரேலியா, சிட்னியின் NRMA மோட்டரிங் அன்ட் சேர்விசஸ் வணிக மற்றும் வியாபார அபிவிருத்தி முகாமையாளராக திகழ்ந்ததுடன், எயிட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல் மனேஜ்மன்ட்ஸ் (பிரைவட்) லிமிட்டெட்டின் பணிப்பாளராகவும் பொது முகாமையாளராகவும் திகழ்ந்தார். எயிட்கன் ஸ்பென்ஸ் குழுமத்தின் ஹோட்டல் நிறுவனங்களின் நிர்வாக சபைகளில் அங்கம் வகித்துள்ளார். பிரித்தானியாவின் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய கல்வியகத்தின் அங்கத்தவராக சுரேஷ் திகழ்கிறார். ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பட்டியலிடப்படாத பல நிறுவனங்களின் பணிப்பாளராகவும் திகழ்கிறார்.

தமிந்த கம்லத்
சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
(2020 ஜுன் மாதம் முதல் பணிப்பாளர் சபை அங்கத்தவர்)
யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக தமிந்த கம்லத், 2020 ஜுன் 10ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார். மொரட்டுவ பல்கலைக்கழகத்திலிருந்து பொறியியலில் B.Sc. பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து MBA பட்டத்தையும் பெற்றுள்ளார். நிதிக் கணக்கீடு, முகாமைத்துவ கணக்கீடு, வியாபார பகுப்பாய்வு, விற்பனைகள், சந்தைப்படுத்தல் மற்றும் பொது முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார். CIMA UK இல் தேர்ச்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோன் கீல்ஸ் குரூப்பின் நுகர்வோர் உணவுத்துறையின் தலைவராக தமிந்த செயலாற்றுவதுடன், சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் மற்றும் கீல்ஸ் ஃபுட் புரொடக்ட்ஸ் பிஎல்சியின் பணிப்பாளராகவும் கடமையாற்றுகின்றார். அத்துடன், இவர் ஜோன் கீல்ஸ் கொம்பியுட்டர் சேர்விசஸ் லிமிடெட் மற்றும் ஜோன் கீல்ஸ் குரூப்பின் தகவல் தொழில்நுட்ப துறையிலும் இணைந்துள்ளார். ஜோன் கீல்ஸ் குரூப்புடன் இணைந்து கொள்வதற்கு முன்னதாக இவர் ஹேலீஸ் இலெக்ட்ரொனிக்ஸ் மற்றும் ஹேலீஸ் இன்டஸ்ரியல் சொலூஷன்ஸ் (பிரைவட்) லிமிடெட் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

துமித் பெர்னான்டோ
(2019 ஜனவரி முதல் பணிப்பாளர் சபை அங்கத்தவர்) திரு. கிரிஷான் பாலேந்திரா யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் தலைவர் (நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்). ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் தலைவராகவும் திரு. பாலேந்திரா திகழ்கிறார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் என்பதுடன், இலங்கையிலுள்ள போலந்து குடியரசின் தூதரகத்தின் கௌரவ ஆலோசகர் நாயகமாகவும் திகழ்கிறார். நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை ஆகியவற்றின் முன்னாள் தலைவராகவும் இவர் கடமையாற்றியிருந்தார். ஹொங் கொங் UBS Warburg இல் முதலீட்டு வங்கியியல் பிரிவில் இவர் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்ததுடன், மூலதனச் சந்தைகளில் பிரதானமாக கவனம் செலுத்தியிருந்தார். லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து சட்ட (LLB) பட்டத்தையும், INSEAD இடமிருந்து MBA பட்டத்தையும் திரு. பாலேந்திரா பெற்றுள்ளார்.

ஸ்டீபன் அந்தனி அப்பிள்யார்ட்
முதன்மை செயல் அதிகாரி

ஜூட் கோம்ஸ்
திரு கோம்ஸ் 1.12.2019 அன்று யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்
முக்கிய ஆசிய சந்தைகளில் பணிபுரியும் 27 ஆண்டுகளுக்கும் மேலான பணக்கார நிதி சேவை அனுபவம் அவருக்கு உள்ளது. முன்னதாக, திரு. கோம்ஸ் மானுலைஃப் சீனா வங்கி லைஃப் அஷ்யூரன்ஸ் கோ. பிலிப்பைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஜனாதிபதியாகவும் இருந்தார். அவர் 2012 முதல் மானுலைஃப் குழுமத்துடன் இருந்து வருகிறார், வியட்நாமில் பான்காஷூரன்ஸ் வி.பியாகவும், கூட்டாளர் விநியோகத் தலைவராகவும் இருந்தார்.
திரு. கோம்ஸ் கனரா எச்எஸ்பிசி ஓபிசி லைஃப் இன்சூரன்ஸ் கோ நிறுவனத்தின் மூத்த வி.பி. மற்றும் சேனலின் தலைவராக இருந்தார், பின்னர் ஹாங்காங்கிற்கு எச்எஸ்பிசி இன்சூரன்ஸ் (ஆசியா-பசிபிக்) பிராந்திய வணிக மேம்பாட்டில் ஏபிஏசி சந்தைகளில் பணிபுரிந்தார்.
இந்தியாவின் முதல் தனியார்மயமாக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டாளர், எச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்ட் லைஃப் நிறுவனத்தின் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார், மேலும் பஞ்சாபின் செஞ்சுரியன் வங்கிக்கான செல்வ மேலாண்மைக்கு தலைமை தாங்கினார்.
திரு. கோம்ஸ் 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மானுலைஃப்பின் குளோபல் ஸ்டார் ஆஃப் எக்ஸலன்ஸ் விருதையும் 1999 இல் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் பிராந்திய விருதையும் பெற்றவர்.
நிறைவேற்று கழகம்

செனத் ஜயதிலக
திரு. ஜெயதிலகே 2007 இல் ஜான் கீல்ஸ் குழுவில் சேர்ந்தார், மேலும் யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சியில் சேருவதற்கு முன்பு ஜான் கீல்ஸ் லாஜிஸ்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். அவர் ஜான் கீல்ஸ் குழுமத்தின் துணைத் தலைவராக உள்ளார், மேலும் வணிக மேம்பாடு, செயல்பாட்டு மேலாண்மை, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், நிதி பகுப்பாய்வு மற்றும் வியூகம் ஆகியவற்றில் 12 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். அவர் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் (யுகே) நிதி மற்றும் கணக்கியலில் பி.ஏ (க Hon ரவம்) பெற்றார், பட்டய நிறுவன மேலாண்மை கணக்கியல் நிறுவனத்துடன் தொடர்புடைய உறுப்பினர் மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பெற்றார்.

ஆஷா பெரேரா
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியில் உப தலைவராக ஆஷா செயலாற்றியுள்ளார். தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் மற்றும் பெருந்தோட்ட சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2005 இல் ஜோன் கீல்ஸ் குழுமத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னர், ஆடைத் தொழிற்துறையில் செயற்பாடுகள் மற்றும் நிதியியல் துறைசார் பொறுப்புகளை கொண்டிருந்தார். முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு கல்வியகத்தின் (PIMA) வணிக முகாமைத்துவம் (MBA) மாஸ்டர்ஸ் பட்டத்தை கொண்டுள்ளதுடன், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திடமிருந்து முகாமைத்துவத்தில் இளமானி பட்டத்தை (மனித வளங்கள் முகாமைத்துவம்) கொண்டுள்ளார். பிரித்தானியாவின் முகாமைத்துவ கணக்காளர்கள் பட்டய கல்வியகத்தின் இணை அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷ சேனநாயக்க
யூனியன் அஷ்யூரன்ஸுடன் ஹர்ஷ 2016 ஒக்டோபரில் இணைந்து கொண்டார்.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இவர் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்திருந்ததுடன், 14 வருட கால அனுபவத்தை தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத்தில் பெற்றுள்ளார். தகவல் தொழில்நுட்ப பிரிவில் இவர் பல பதவிகளை வகித்துள்ளதுடன், வியாபாரத்துக்கு அதன் பங்களிப்பு தொடர்பில் ஆழமான அறிவைப்பெற்றுள்ளார்.
இவர் கணனி விஞ்ஞானத்தில் லன்டன் மெட்ரொபொலிடன் பல்கலைக்கழகத்திடமிருந்து இளமானிப்பட்டத்தை பெற்றுள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து தகவல் கட்டமைப்பு முகாமைத்துவத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

இமதியாஸ் ஆனிஃவ்

மஹேன் குணரட்ன
17 வருட காலங்களுக்கு மேலாக உள்நாட்டிலும் சர்வதேச சந்தைகளிலும் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ள சந்தைப்படுத்தல் நிபுணராக மஹேன் திகழ்கின்றார். இவர் Hilton, AVIVA மற்றும் AIA ஆகிய பல்தேசிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் PIM இன் முதுமானிப்பட்டத்தை இவர் பெற்றுள்ளார். இவர் CIM-UK, மற்றும் SLIM ஆகியவற்றின் அங்கத்தவராக திகழ்வதுடன், பிரித்தானியாவின் பட்டய சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் (CIM-UK) பட்டய சந்தைப்படுத்தல் நிபுணர் எனும் அந்தஸ்தையும் கொண்டுள்ளார். ஆசிய சந்தைப்படுத்தல் சம்மேளனத்தின் சான்றளிக்கப்பட்ட சந்தைப்படுத்தல் நிபுணராகவும் திகழ்கின்றார்.
இவர் CIPM மற்றும் IIHS இல் விரிவுரையாளர் மற்றும் பரீட்சையாளராகத் திகழ்கின்றார்.

ருமேஷ் மோதரகே
யூனியன் அஷ்யூரன்சுடன் 2019 டிசம்பர் மாதம் ருமேஷ் இணைந்தார். சொஃப்ட்லொஜிக் லைஃவ் இன்சூரன்ஸ் பிஎல்சியில் முகாமைத்துவ பயிலுநராக தமது காப்புறுதி தொழில் வாழ்க்கையை இவர் ஆரம்பித்தார். காப்புறுதி, நிதியியல், ஆயுள் செயற்பாடுகள் மற்றும் மாற்று விற்பனைகள் போன்ற பிரிவுகளில் 9 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு கல்வியகத்திடமிருந்து (PIM) வணிக நிர்வாகத்தில் மாஸ்டர்ஸ் பட்டத்தைக் கொண்டுள்ளார். பிரித்தானியா பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் கல்வியகத்தின் (CIMA) இணை அங்கத்தவர் என்பதுடன் பிரித்தானியாவின் பட்டய காப்புறுதி நிறுவனத்தின் (FCII) அங்கத்தவர் மற்றும் பட்டய காப்புறுதிதாரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷுபம் ஜெயின்
ஷுபம் என்பவர், Institute and Faculty of Actuaries (IFoA) மற்றும் Institute of Actuaries of India (IAI) ஆகியவற்றின் அங்கத்தவராவார். இவர் சான்றளிக்கப்பட்ட Enterprise Risk Actuary (CERA) என்பதுடன் CERA சர்வதேச அமைப்பின் அங்கத்தவருமாவார். ஷுபம் டெல்லி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானவியல் (புள்ளிவிவரங்கள்) சிறப்புப்பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இலங்கை, இந்தியா, ஐக்கிய இராஜ்ஜியம், ஜேர்மனி, இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் இதர தென்கிழக்காசிய சந்தைகளைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின் ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் actuarial சேவைகளை வழங்கிய பரந்த அனுபவத்தை இவர் கொண்டுள்ளார். Actuarial மதிப்பிடல்கள், நிதியியல் இடர் முகாமைத்துவம், தயாரிப்பு விருத்தி மற்றும் விலையிடல், உள்வைக்கப்பட்ட பெறுமதி, ஒன்றிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள், IFRS 17, மூலோபாய சொத்து ஒதுக்கீடுகள் மற்றும் ஆளுகைக் கட்டமைப்பு போன்றவற்றை பங்கேற்கும் வியாபாரங்களுக்கு வழங்குவதில் இவர் திறன் படைத்தவராக காணப்படுகின்றார்.

விந்தியா குரே
நிதி மற்றும் முகாமைத்துவ ஆலோசனையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் அதிக அனுபவம் பெற்ற விந்தியாஇ ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அவர் இதற்கு முன்னர் சினமென் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸில் நிதிப்பிரிவின் துணைத் தலைவராகவும் அதற்கு முன்னர் குழுமத்தின் டுநளைரசந ஐnடிழரனெ துறையின் துறை நிதிக் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (FCA) இ சான்றளிக்கப்பட்ட செயல்முறையிலுள்ள கணக்காளர் (CPA) – அவுஸ்திரேலியாஇ இலங்கையின் கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்களின் சங்கம் (FMAAT) ஆகியவற்றின சக அங்கத்துவம் பெற்றுள்ள அவர்இ கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாக முதுமாணி மற்றும் வணிகப் பொருளியல் இளமாணி பட்டதாரியுமாவார். மேலும் அவர் Jane M. Klausman “Women in Business Award” என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

லுசிலி டயஸ்
விளம்பரம், ஆரோக்கியம் மற்றும் விருந்தோம்பல் ஆகிய துறைகளில் 15 வருட கால அனுபவத்தை லுசிலி கொண்டுள்ளார். இவர் வியாபார முகாமைத்துவதில் மாஸ்டர்ஸ் பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், கார்டிஃவ் மெட்ரொபொலிடன் பல்கலைக்கழகத்தின் திட்ட முகாமைத்துவம் சிறப்பு பட்டத்தைப் பெற்றுள்ளார். பட்டய முகாமைத்துவ கணக்கியலாளர் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவ கணக்கியல் டிப்ளோமாவைப் பெற்றுள்ளதுடன், இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்திடமிருந்து சந்தைப்படுத்தலில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். பிரசுர வெளியீட்டுத் துறையில் 2002 ஆம் ஆண்டில் தனது தொழில் வாழ்க்கையை லுசிலி ஆரம்பித்தார். யூனியன் அஷ்யூரன்சுடன் இணைந்து கொள்ளும் முன்னர் இவர் சினமன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் தொடர்பாடல் முகாமையாளர் பதவியை வகித்திருந்ததுடன், குருநாகல் மாலியதேவ பெண்கள் பாடசாலையின் பழைய மாணவியாவார்.

திருமதி விந்தியா குரே
நிதி மற்றும் முகாமைத்துவ ஆலோசனையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் அதிக அனுபவம் பெற்ற விந்தியாஇ ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அவர் இதற்கு முன்னர் சினமென் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸில் நிதிப்பிரிவின் துணைத் தலைவராகவும் அதற்கு முன்னர் குழுமத்தின் டுநளைரசந ஐnடிழரனெ துறையின் துறை நிதிக் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (FCA) இ சான்றளிக்கப்பட்ட செயல்முறையிலுள்ள கணக்காளர் (CPA) – அவுஸ்திரேலியாஇ இலங்கையின் கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்களின் சங்கம் (FMAAT) ஆகியவற்றின சக அங்கத்துவம் பெற்றுள்ள அவர்இ கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாக முதுமாணி மற்றும் வணிகப் பொருளியல் இளமாணி பட்டதாரியுமாவார். மேலும் அவர் Jane M. Klausman “Women in Business Award” என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

நளின் சுபசிங்க
கார்ப்பரேட் மேலாண்மை

ஜயந்த குமார
1999ல் ஜயந்த யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டதுடன் காப்புறுதித்துறையில் 20 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவர் நிறுவனத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளதுடன், வடக்கு, வட மத்தி மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வியாபாரங்களை விஸ்தரிப்பதற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியிருந்தார். களனி பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ கற்கையை இவர் பூர்த்தி செய்துள்ளார். அத்துடன் இவர் அமெரிக்காவின் LIMRA வில் முகவர் முகாமைத்துவத்தின் பட்டய அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஹேஷ் ஜயசூரிய

சமந்த ஹேரத்
ஐக்கிய இராஜ்ஜியத்தின் சந்தைப்படுத்தல் பட்டயக் கல்லூரியின் ”பட்டய சந்தைப்படுத்துநர்” ஆக சமந்த திகழ்கிறார். (ஐக்கிய இராஜ்ஜியத்தின்) லீசெஸ்ட்டர் பல்கலைக்கழகத்தின் வணிக மேற்பார்வை முதுமானிப்பட்டத்தை இவர் கொண்டுள்ளார். சந்தைப்படுத்தல் பட்டயக்கல்லூரியின் சந்தைப்படுத்தல் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவையும் இவர் பெற்றுள்ளதுடன், அமெரிக்காவின் ஆயுள் காப்புறுதி வழங்கல் சம்மேளனத்தின் ஆயுள் காப்புறுதி சந்தைப்படுத்தல் டிப்ளோமா சான்றையும் இவர் பெற்றுள்ளார். மேலும் இவர் இலங்கை வங்கியியலாளர் கல்வியகத்தின் வங்கி முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவையும் பூர்த்தி செய்துள்ளார்.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியில் விற்பனை சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக பணியாற்றிய சமந்த, யூனியன் அஷ்யூரன்ஸுடன் இணைந்து கொண்டுள்ளார். இவர் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் (பிரிஈ) லிமிட்டெட் நிறுவனத்தில் மருத்துப்பொருட்கள் பிரதிநிதியாக இவர் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார். அதன் பின்னர், ஸ்மித்கிளைன் பீச்சம், மெக்வுட்ஸ் லிமிட்டெட் போன்றவற்றில் பணியாற்றியதை தொடர்ந்து 2000 இல் காப்புறுதித்துறையில் இணைந்து கொண்டார். செலிங்கோ இன்சூரன்ஸ் கம்பனி லிமிட்டெட் (ஆயுள் பிரிவு) வர்த்தக நாம முகாமையாளராக இவர் பணியாற்றியிருந்தார். துபாய் நகரில் இவர் 2004 – 2007 வரையான காலப்பகுதியில் கொன்டினென்டல் இன்சூரன்ஸ் அன்ட் ஃபினான்ஷியல் சேர்விசஸ் நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் முகாமையாளராக பணியாற்றியுள்ளார். இலங்கைக்கு திரும்பியிருந்ததைத்தொடர்ந்து இவர் செலிங்கோ சேமிப்பு வழங்கியில் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக இணைந்திருந்தார்.