மேலதிக காப்பீடுகள்

வாழ்வின் சவால்கள் நிறைந்த காலப்பகுதிகளில், உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்ட எமது தெரிவுக்குரிய மேலதிக காப்பீடுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதனூடாக நீங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்து, உங்கள் தினசரி வாழ்க்கையை நம்பிக்கையுடன் முன்னெடுக்கலாம்.

மேலதிக காப்பீடுகள்

இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

உங்களின் தகவல்களை எமக்கு வழங்குங்கள், எமது ஆயுள் காப்புறுதி ஆலோசகர் ஒருவருடன் உங்களை தொடர்புபடுத்துவோம்.








    எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு இங்கே கிளிக் செய்யவும்

    வைத்தியசாலை அனுமதி காப்பீடுகள்

    வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு அவசியமான நிதி ஆதரவை வழங்கி, உங்களுக்கு அவசியமான மருத்துவ சிகிச்சையையும், நிதி உதவியையும் பெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன.

    யூனியன் Health 360

    உங்கள் முழுக் குடும்பத்தின் மருத்துவ தேவைகளை ஈடு செய்து கொள்ளக்கூடிய சகல அம்சங்களையும் கொண்ட தெரிவுக்குரிய ...

    உங்கள் முழுக் குடும்பத்தின் மருத்துவ தேவைகளை ஈடு செய்து கொள்ளக்கூடிய சகல அம்சங்களையும் கொண்ட தெரிவுக்குரிய காப்பீடாக Union Health 360 அமைந்துள்ளது. இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் (அமெரிக்கா மற்றும் கனடா தவிர்ந்த நாடுகள்) சுகயீனம் அல்லது சத்திர சிகிச்சைக்காக மேற்கொள்ளப்படும் வைத்தியசாலை அனுமதிகளுக்கான பரந்த காப்புறுதியை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட நிதிப் பாதுகாப்பிற்காக பிரசவ மற்றும் மூக்குக் கண்ணாடி அனுகூலங்கள் போன்ற மேலதிக காப்பீடுகளை உள்வாங்குவதற்கான தெரிவையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.

    யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ரீமியர்

    இந்தத் தெரிவுக்குரிய காப்பீட்டினூடாக ஆயுள் காப்புறுதிதாரர், வாழ்க்கைத்துணை, 23 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ...

    இந்தத் தெரிவுக்குரிய காப்பீட்டினூடாக ஆயுள் காப்புறுதிதாரர், வாழ்க்கைத்துணை, 23 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மற்றும் ஆயுள் காப்புறுதிதாரரின் பெற்றோர்கள் போன்றவர்களுக்கான மருத்துவ செலவுகளை ஈடுசெய்யப்படுவதுடன், பரந்தளவு மேலதிக அனுகூலங்களும் வழங்கப்படுகின்றன.

    வைத்தியசாலை பண அனுகூலம்

    வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டமையால் எழும் மேலதிக மருத்துவ செலவுகளை ஈடு செய்யும் வகையில், காப்புறுதி ...

    வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டமையால் எழும் மேலதிக மருத்துவ செலவுகளை ஈடு செய்யும் வகையில், காப்புறுதி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய இந்த காப்பீட்டுப் பெறுமதி தினசரி அனுகூலமாக செலுத்தப்படும்.

    வைத்தியசாலை பண அனுகூலம் சிறுவர்

    ஆயுள் காப்புறுதிதாரரின் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டால், காப்புறுதி அட்டவணையில் ...

    ஆயுள் காப்புறுதிதாரரின் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டால், காப்புறுதி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பீட்டு பெறுமதிக்கு நிகரான தினசரி அனுகூலம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில் எழும் மேலதிக மருத்துவ செலவுகளை ஈடு செய்வதற்கு உதவும் வகையில் செலுத்தப்படும்.

    பரிபூரண சத்திரசிகிச்சை அனுகூலம்

    விபத்து அல்லது நோய் ஒன்றை குணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சையை தொடர்ந்து ரொக்கக் ...

    விபத்து அல்லது நோய் ஒன்றை குணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சையை தொடர்ந்து ரொக்கக் கொடுப்பனவை மேற்கொள்ளும் வகையில் இந்தத் தெரிவுக்குரிய காப்பீடு அமைந்துள்ளது.

    சுவமக அனுகூலம்

    இந்தத் தெரிவுக்குரிய காப்பீட்டுடன், பாரதூரமான நோய்நிலையின் போது மருத்துவ செலுகளுக்கு நிதி உதவியை ...

    இந்தத் தெரிவுக்குரிய காப்பீட்டுடன், பாரதூரமான நோய்நிலையின் போது மருத்துவ செலுகளுக்கு நிதி உதவியை வழங்குவதற்காக ஆயுள் காப்புறுதிதாரருக்கு ரொக்கத் தொகையை வழங்கும்.

    சிறுவர் தேகாரோக்கிய அனுகூலம்

    இந்த தெரிவுக்குரிய காப்பீட்டினால் தினசரி பண அனுகூலம் வழங்கப்படுவதுடன், சிறுவர்களில் மேற்கொள்ளப்படும் 244 ...

    இந்த தெரிவுக்குரிய காப்பீட்டினால் தினசரி பண அனுகூலம் வழங்கப்படுவதுடன், சிறுவர்களில் மேற்கொள்ளப்படும் 244 சத்திர சிகிச்சைகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

    அங்கவீன காப்பீடுகள்

    முழுமையான அல்லது பகுதியளவு அங்கவீனத்தின் போது நிதிசார் பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்தக் காப்பீடுகள் அமைந்துள்ளன.

    விபத்தினால் மாத்திரம் ஏற்படும் முழுமையான நிரந்த அங்கவீனம்

    காப்புறுதி காலப்பகுதியில் நிகழும் விபத்தினால் ஏற்படும் முழுமையான மற்றும் நிரந்தர அங்கவீனத்திற்காக, இந்த ...

    காப்புறுதி காலப்பகுதியில் நிகழும் விபத்தினால் ஏற்படும் முழுமையான மற்றும் நிரந்தர அங்கவீனத்திற்காக, இந்த தெரிவுக்குரிய மேலதிக காப்பீட்டினூடாக காப்பீட்டுத் தொகை 5 சமமான வருடாந்த தவணைகளில் வழங்கப்படும்.

    நீடிக்கப்பட்ட பகுதியளவு அங்கவீனம்

    காப்புறுதி காலப்பகுதியில் நிகழும் விபத்தினால் ஏற்படும் பகுதியளவு மற்றும் நிரந்தர அங்கவீனங்களின் போது ...

    காப்புறுதி காலப்பகுதியில் நிகழும் விபத்தினால் ஏற்படும் பகுதியளவு மற்றும் நிரந்தர அங்கவீனங்களின் போது காப்பீட்டுத் தொகையின் சதவீதத் தொகை செலுத்தப்படும்.

    விபத்து அல்லது நோய் காரணமாக ஏற்படும் முழுமையான மற்றும் நிரந்தர அங்கவீனம்

    காப்புறுதி காலப்பகுதியில் நிகழும் விபத்தினால் அல்லது நோய் காரணமாக முழுமையான மற்றும் நிரந்தர ...

    காப்புறுதி காலப்பகுதியில் நிகழும் விபத்தினால் அல்லது நோய் காரணமாக முழுமையான மற்றும் நிரந்தர அங்கவீனங்களுக்கு, இந்த தெரிவுக்குரிய மேலதிக காப்பீட்டினூடாக காப்பீட்டுத் தொகை 5 சமமான வருடாந்த தவணைகளில் வழங்கப்படும்.

    முழுமையான பூரண அங்கவீனத்தின் போது கட்டுப்பண விலக்கழிப்பு

    முழுமையான பூரண அங்கவீனம் ஏற்படுகையில் எதிர்காலத்தில் செலுத்தப்பட வேண்டிய கட்டுப்பணங்கள் ...
    முழுமையான பூரண அங்கவீனம் ஏற்படுகையில் எதிர்காலத்தில் செலுத்தப்பட வேண்டிய கட்டுப்பணங்கள் விலக்கழிக்கப்பட்டு முதிர்வின் போது எதிர்பார்க்கப்படும் வருமதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் பங்கிலாபங்கள் சேர்க்கப்படும்.

    வருமான இழப்பு காப்பீடுகள்

    ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் போது, அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்யும் வகையில் நிதிசார் பாதுகாப்பை இந்த காப்பீடுகள் வழங்கும்.

    குடும்ப வருமான அனுகூலம்

    ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பதால், குடும்ப அங்கத்தவர்களுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமையை ...

    ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பதால், குடும்ப அங்கத்தவர்களுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமையை தணிக்கும் வகையில், காப்புறுதி காலாவதியாகும் வரையில் காலாண்டு ரொக்கப்பணக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும்.

    மேலதிக உயிரிழப்பு காப்பீடுகள்

    ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் போது, அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு நிதிசார் ஆதரவை வழங்கும் வகையில் அடிப்படை காப்புறுதிக்கு அப்பால் மேலதிக நிதிப் பாதுகாப்பை இந்தக் காப்பீடுகள் வழங்குகின்றன.

    நிலை தவணை அனுகூலம்

    சிறிதளவு மேலதிக கட்டுப்பணத்திற்காக உங்களின் அடிப்படை உயிரிழப்பு காப்பீட்டுத் தொகையின் 20 மடங்கு வரை உங்களின் ...

    சிறிதளவு மேலதிக கட்டுப்பணத்திற்காக உங்களின் அடிப்படை உயிரிழப்பு காப்பீட்டுத் தொகையின் 20 மடங்கு வரை உங்களின் உயிரிழப்பு காப்பீட்டை மேம்படுத்தும்.

    விபத்துசார் உயிரிழப்பு அனுகூலம்

    விபத்துசார் உயிரிழப்பின் போது, உயிரிழப்பு காப்பீட்டுக்கு மேலதிகமாக ரொக்கத் தொகை கொடுப்பனவு.

    வாழ்க்கைத்துணை பாதுகாப்பு அனுகூலம்

    வாழ்க்கைத்துணை துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் போது ரொக்கத் தொகை கொடுப்பனவு மேற்கொள்ளப்படும்.

    மரணச் சடங்கு அனுகூலம்

    ஆயுள் காப்புறுதிதாரரின் துரதிர்ஷ்டவசமான உயிரிழப்பின் போது எழும் மரணச் சடங்கு செலவுகள் காப்பீடு ...

    ஆயுள் காப்புறுதிதாரரின் துரதிர்ஷ்டவசமான உயிரிழப்பின் போது எழும் மரணச் சடங்கு செலவுகள் காப்பீடு செய்யப்படும்.

    மேலதிக தகவல்களுக்கு உங்களுக்கான பிரத்தியேகமான நிதி ஆலோசகருடன் தொடர்பு கொள்வதற்கு 1330 (24/7 ஹொட்லைன்) அழைக்கவும்.
    அனுகூலங்கள், தவிர்ப்புகள் அல்லது நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, விற்பனையை பூர்த்தி செய்யும் முன்னர் காப்புறுதி ஆவணத்தை கவனமாக வாசிக்கவும்.