Preloader images
Preloader icon

யூனியன் அஷ்யூரன்சில் உங்கள் பயணத்தை கண்டறியுங்கள்

ஊழியர்களுக்கு வெற்றிகரமாக இயங்கவும், தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மற்றும் இலக்குகளை எய்தவும் யூனியன் அஷ்யூரன்சில் பெருமளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன.

எமது பெறுமதியின் முக்கிய செயற்பாட்டாளர்களாக எமது ஊழியர்கள் அமைந்துள்ளனர் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எமது வாடிக்கையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் எமது வர்த்தக நாமம் உயர்ந்த நிலையில் பேணப்படுவதற்காக பங்களிப்பு வழங்கும் எமது ஊழியர்களின் நிபுணத்துவம் மற்றும் பண்புகளுக்கு உயர்ந்த மட்டத்தில் கௌரவிப்பு வழங்க வேண்டும் எனவும் கருதுகின்றோம்.

எமது மனித வளங்கள் பிரிவை கட்டியெழுப்புவதில் அதிகளவு பெருமை கொள்வதுடன், எமது வர்த்தக நாமத்தின் உறுதி மொழிக்கமைய, ஒவ்வொரு ஊழியரினதும் நிபுணத்துவ மற்றும் பிரத்தியேக தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவமளித்து பணியாற்றக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதில் பெருமை கொள்கின்றோம். பயிற்சிகள், திறன் மேம்படுத்தல் மற்றும் பகிரப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் உயர் கல்வியை தொடர்வதற்கான நிதி உதவிகள் போன்றவற்றினூடாக தொழில்நிலை மேம்பாட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

நிறுவனத்தின் ”ஊழியர் பரிந்துரை திட்டம்” ஊடாக, எமது நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதில் பங்களிப்பு வழங்க எமது ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். எமது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு விற்பனை செயலணிக்காக ஏற்பாடு செய்யப்படுவதுடன், ஊழியர்களின் சிறப்பான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் நாம் முன்னெடுக்கும் பல நடவடிக்கைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

கொடுப்பனவு, அனுகூலங்கள் மற்றும் தனிநபர் விருத்தி போன்றவற்றில் துறையில் உயர்ந்த மட்டத்தில் யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை பேணுவதுடன், நிதிச் சேவைகள் துறையுடன் ஒப்பிட்டு எமது கொடுப்பனவுகளை நாம் அடிக்கடி மீளாய்வு செய்கின்றோம்.

ஊழியர்கள் மீது காண்பிக்கும் அர்ப்பணிப்புகளுக்காக மாத்திரம் எமக்கு துறையில் கௌரவிப்புகள் கிடைக்காமல், பணியாற்றுவதற்கு மிகவும் சிறந்த நிறுவனம் என்பதற்காக விருதுகளை வென்ற நிறுவனமாகவும் பலரால் யூனியன் அஷ்யூரன்ஸ் அறியப்படுகின்றது.