யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி ஆகியன நீண்ட காலமாக பேணி வரும் பாங்கசூரன்ஸ் பங்காண்மையை புதுப்பித்துள்ளதாக அறிவித்துள்ளன. அதனூடாக, நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு நிதிசார் பாதுகாப்பு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றும் இந்தப் பங்காண்மை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கியியல் சௌகரியத்துடன், ஆயுள் காப்புறுதி பாதுகாப்பையும் இணைத்து வழங்கும் பரிபூரண நிதித் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான இரு நிறுவனங்களின் அர்ப்பணிப்பு இந்த புதுப்பிக்கப்பட்ட பங்காண்மையினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கைகோர்ப்பினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது நிதிசார் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தீர்வுகளை சௌகரியமாக அணுகுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் வாழ்வின் இலக்குகளையும், அதிகரித்துச் செல்லும் எதிர்பார்ப்புகளையும் நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த சேவை ஆகியவற்றின் மீது கொண்ட வலுவான அர்ப்பணிப்புடன், இலங்கையின் முன்னணி வங்கி-காப்புறுதிச் கூட்டாண்மைகளில் ஒன்றாக இக்கூட்டணி பரிணமித்துள்ளது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கிளை வலையமைப்பு, வளர்ந்து வரும் டிஜிட்டல் வங்கி கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர் சென்றடைவு ஆகியவற்றை யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டு நிபுணத்துவத்துடன் ஒன்றிணைப்பதன் மூலம், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட விரிவான பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இக்கூட்டாண்மை வழிவகுத்துள்ளது.

இந்த புதுப்பித்தலானது இரு நிறுவனங்களுக்கும் இடையிலான உறவில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதுடன், வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கான அடித்தளத்தையும் அமைக்கிறது. யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி ஆகிய இரண்டும் இணைந்து டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், மேம்படுத்தப்பட்ட ஆலோசனைக் திறன்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகள் ஆகியவற்றின் ஊடாக வாடிக்கையாளர் அனுபவத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தவுள்ளன. இது இலங்கையர்களின் மாறிவரும் நிதி மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ற பதிலளிப்பாக அமையும்.

இந்தப் பங்காண்மை புதுப்பித்தல் தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹேமந்த குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் உடனான எமது கூட்டாண்மையைப் புதுப்பித்துள்ளமையானது, நம்பகமான ஆயுள் காப்புறுதிப் பங்காளர் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து மாற்றமடைந்து வரும் சூழலில், ஒருங்கிணைந்த வங்கி மற்றும் பாதுகாப்புச் சேவைகளை வழங்க வேண்டியதன் அவசியம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, எங்களது பாங்கசூரன்ஸ் சேவைகளை மேலும் வலுப்படுத்தவும், புதுமையான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளின் ஊடாக கூடுதல் மதிப்பை வழங்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “நிதிப் பாதுகாப்புத் தீர்வுகளை எளிதாக அணுகுவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள மதிப்பை உருவாக்குவது என்ற பகிர்ந்தளிக்கப்பட்ட தொலைநோக்கின் அடிப்படையில் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியுடனான எங்களது கூட்டாண்மை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல வருடங்களாக, இரு நம்பகமான நிறுவனங்களின் பலத்தை ஒன்றிணைத்து வலுவான முடிவுகளை இக்கூட்டணி சீராக வழங்கி வந்துள்ளது. இக்கூட்டண்மையை நாங்கள் புதுப்பிக்கும் இந்த வேளையில், கண்டுபிடிப்புகளை முன்னெடுப்பதற்கும், சேவைகளை அணுகும் வாய்ப்பை விரிவுபடுத்துவதற்கும், அதிகமான இலங்கையர்கள் தங்கள் எதிர்கால இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்கும் அதேவேளையில் தங்களுக்கு மிக முக்கியமனவற்றைப் பாதுகாத்துக் கொள்ள உதவுவதற்கும் நாங்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இயங்குவோம்” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் சுமார் நான்கு தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2026 ஜுன் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 43.1 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 102.1 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி தனது பரந்த வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் அமைப்புகளின் ஊடாக நுகர்வோர், வர்த்தக மற்றும் கூட்டாண்மை வங்கிச் சேவைப் பிரிவுகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றி வருகின்றது. புத்தாக்கமான வங்கி தீர்வுகள் மற்றும் அதிநவீன டிஜிட்டல் ஆற்றல்கள் மூலம் வாடிக்கையாளர்களை வலுப்படுத்துவதில் வங்கி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது. இலங்கையில் American Express அட்டைகளை வழங்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் ஒரே உரிமம்பெற்ற நிறுவனமாகச் செயற்படும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, பிரீமியம் வங்கிச் சேவையில் தொடர்ந்து முன்னணி வகிக்கின்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.