கேள்வி

ஆயுள் காப்புறுதி தொடர்பில் உதவி தேவையா? அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்கான விடைகளை கண்டறியுங்கள். பாதுகாப்பான திட்டத்துடன் முக்கியமானதை பாதுகாத்திடுங்கள்.

Page banner

கேள்வி

இலங்கையின் முதலாவது தனியார் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ் – ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் அங்கமாகும். 38 வருடங்களாக தேசத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதுடன், மக்களுக்கு முக்கியமானவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கு ஆதரவளிப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது.

மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்வதற்கு [email protected] அல்லது எமது 24×7 ஹொட்லைன் இலக்கமான 1330, அல்லது +94 11 2990990 ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

எமது தலைமையகத்துக்கு விஜயம் செய்வதற்கு

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி
20, சென். மைக்கல்ஸ் வீதி,
கொழும்பு 03,
ஸ்ரீ லங்கா.

எமது இணையத்தளத்தில் “கிளை வலையமைப்பு”. எனும் பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ் அலுவலக வலையமைப்பை நீங்கள் பார்வையிலாம். நாடு முழுவதிலும் நாம் கிளைகளைக் கொண்டுள்ளோம்.

வார நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 5.00 மணி வரை எமது அலுவலகங்கள் திறந்திருக்கும்.

நாம் பரந்தளவு ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை வழங்குகிறோம், அதில் முதலீடு, பாதுகாப்பு, ஓய்வூதியம், கல்வி, சுகாதாரம். Yஆகியன அடங்கியுள்ளன. எமது தயாரிப்புகள் – என்பதிலிருந்து உங்களுக்கு எமது பரந்தளவு காப்புறுதித் தீர்வுகளை நீங்கள் பார்வையிடலாம்.

எமது ஆயுள் காப்புறுதி ஆலோசகர்கள், Clicklife App மற்றும் எமது பிரத்தியேகமான வங்கிப் பங்காளர்களினூடாக காப்புறுதி ஒன்றை நீங்கள் கொள்வனவு செய்யலாம்.

ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும், ஆகக்குறைந்த பங்கிலாப வீதத்துக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டு, மாதாந்தம் தனிநபர் நிதியத்தில் வைப்புச் செய்யப்படும். குறித்த ஆண்டில் முதலீட்டு நிதியத்தின் அசல் செயற்திறனைப் பொறுத்து, வருட நிறைவில் இறுதி பங்கிலாப வீதம் தீர்மானிக்கப்பட்டு வைப்புச் செய்யப்படும். ஆண்டுக்காக வருட ஆரம்பத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட தொகைக்கு நிகரானதாக அல்லது அதைவிட உயர்ந்ததாக இந்த இறுதி பங்கிலாப வீதம் அமைந்திருக்கும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் அண்மையில் பிரகடனம் செய்திருந்த பங்கிலாப வீதங்களை பார்வையிட பங்கிலாப வருமதிகள்

எமது 24/7ஹொட்லைன் 1330 உடன் அல்லது +94 11 2990990 உடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆம், எம்மிடம் ஓய்வூதிய, கல்வி மற்றும் பாதுகாப்பு கணிப்பானகள் உங்கள் சௌகரியத்திற்காக எமது இணையத்தளத்தில் காணப்படுகின்றன.

Clicklife App என்பது ஸ்மார்ட்டான சுய-சேவை காப்புறுதி app என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு அசல் நேர காப்புறுதி தோற்றப்பாடு, ஒப்பற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள், மற்றும் வெகுமதிகள் நிறைந்த ஆரோக்கிய கண்காணிப்பு – ஆகிய அனைத்தையும் ஒரே பகுதியில் வழங்கும்.

AppStore அல்லது GooglePlay இலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதிதாரர்களுக்கான பிரத்தியேகமான அங்கத்துவ சேவையாக Union Assurance Platinum Circle அமைந்திருப்பதுடன், உயர்தர ஆதரவு, பிரத்தியேகமான நலன்பேணல் தீர்வுகள் மற்றும் வாழ்க்கைமுறை அனுகூலங்கள் ஆகியவற்றை தெரிவு செய்யப்பட்ட உயர்-பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் குழுவினருக்கு வழங்கப்படுகிறது.

இன்னும் கேள்விகள் உள்ளதா?

ஒவ்வொரு படிமுறையிலும் அவசியமான வழிகாட்டல் மற்றும் ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளோம், அதனூடாக தகவலறிந்த தீர்மானங்களை மேற்கொள்வதுடன், முக்கியமானதை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவுகிறோம்.