இலங்கையின் நீண்ட காலமாக இயங்கும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, தனது பாங்கசூரன்ஸ் பங்காளரான செலான் வங்கியின் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு செலான் வெளிநாட்டு சுற்றுலா 2026 வெகுமதியை வழங்கியிருந்தது. பங்காண்மையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்திருந்தவர்களுக்கு வெகுமதியளித்து கௌரவிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
வெற்றிபெற்ற ஊழியர்களின் சிறந்த சாதனைகளைக் கொண்டாடும் வகையில், அவர்களுக்கு 2026 ஒக்டோபர் 1 ஆம் திகதி ஆரம்பமான மலேசியாவிற்கான பிரத்தியேகமான மூன்று இரவுகள் மற்றும் நான்கு நாட்களைக் கொண்ட சுற்றுலாப் பயணம் வெகுமதியாக வழங்கப்பட்டது. இந்நடவடிக்கை, கோலாலம்பூரிலுள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் தங்குதல், மலேசியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடும் நகரச் சுற்றுலா மற்றும் மறக்க முடியாத தோழமைச் சந்திப்பு நிகழ்வு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அத்துடன், பணிச்சூழலுக்கு அப்பால் குழுப் பிணைப்பு, பகிரப்பட்ட அனுபவங்கள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அளிக்கும் வகையில், பிரபல Theme park இற்கான விஜயத்தையும் இக்குழுவினர் அனுபவித்தனர்.
சிறந்த செயல்பாடுகளை ஊக்கப்படுத்துதல், ஊழியர்களின் ஈடுபாட்டை அதிகரித்தல் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் – செலான் வங்கிக்கு இடையிலான பாங்காசூரன்ஸ் பங்காண்மையின் நீண்டகால வெற்றியை வலுப்படுத்துதலை நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த அங்கீகாரக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இந்த வெளிநாட்டுச் சுற்றுலா அமைகின்றது. யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் கூட்டாண்மை விநியோகப் பிரிவின் முக்கிய வழிகளுள் ஒன்றாக திகழும் செலான் வங்கி, தனது பரந்த வாடிக்கையாளர் சென்றடைவு, தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பகிரப்பட்ட இலக்குகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் அப்பிரிவின் செயல்திறனில் செல்வாக்குமிக்க பங்கைக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, செலான் வங்கியின் பரந்த வங்கி வலையமைப்பையும், யூனியன் அஷ்யூரன்ஸின் காப்பீட்டு நிபுணத்துவத்தையும் பயன்படுத்திக் கொண்டு, ஆயுள் காப்பீட்டுத் தீர்வுகளை மக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்வதை இக்கூட்டாண்மை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது.
இத்திட்டத்தின் முக்கியத்துவத்தையும், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பாங்கசூரன்ஸ் பிரிவின் பொது முகாமையாளர் நபீல் மில்ஹான் மற்றும் பாங்கசூரன்ஸ் சானல் தலைவர் ஆஷேன் தெஹிகஸ்பிட்டிய ஆகியோர் வெற்றிபெற்ற ஊழியர்களுடன் இச்சுற்றுலாப் பயணத்தில் இணைந்து கொண்டனர். செலான் வங்கியின் சார்பாக, சில்லறை வங்கிச் சேவைகளுக்கான பிரதிப் பொது முகாமையாளர் இயுஜின் செனவிரத்ன மற்றும் கிளைகள் II பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் ருவன் பெர்னாண்டோ ஆகியோரும் விஜயத்தில் கலந்து கொண்டனர்.
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து செலான் வங்கியின் சில்லறை வங்கிச் சேவைகளுக்கான பிரதிப் பொது முகாமையாளர் இயுஜின் செனவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “எமது ஊழியர்களே எமது வெற்றியின் மையப்புள்ளியாக விளங்குகின்றனர். பிரசாரக் காலப்பகுதி முழுவதும் எமது ஊழியர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, தொழில்முறைமை மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு இந்தச் சுற்றுலாவானது ஒரு தகுந்த அங்கீகாரமாகும். சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் அப்பால், இத்தகைய முன்முயற்சிகள் தனிநபர்கள் தங்களை சுயசவாலுக்கு உட்படுத்தி, சிறப்பம்சத்தை நோக்கி நகரவும், அவர்கள் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தில் பெருமிதம் கொள்ளவும் ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரத்தை வளர்க்க உதவுகின்றன. நிலையான சிறந்த திறன்களை அங்கீகரிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்கியமைக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் பாராட்டுவதுடன், இந்தத் தகுதியான சாதனையை எய்திய வெற்றிபெற்ற ஊழியர்கள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் பொது முகாமையாளர் நபீல் மில்ஹான் கருத்துத் தெரிவிக்கையில், “உயர் செயல்திறன் கொண்ட கூட்டாண்மைகளைக் கட்டியெழுப்புவதில் கௌரவிப்பும் அங்கீகாரமும் ஒரு முக்கிய அங்கமாகும் என யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நாங்கள் நம்புகிறோம். வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமானதைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்காக இலக்குகளையும் தாண்டித் தொடர்ச்சியாகச் செயற்பட்டு, எங்களது பகிரப்பட்ட வளர்ச்சி லட்சியங்களுக்குப் பங்களிப்பு செய்யும் தனிநபர்களினாலே செலான் வங்கிப் பிரிவின் வெற்றியானது முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இந்தச் சுற்றுலா அந்த அர்ப்பணிப்பைக் கொண்டாடுவதாகவும், அவர்களின் முயற்சிகளுக்கு நாங்கள் வழங்கும் நன்றியுணர்வின் வெளிப்பாடாகவும் அமைகின்றது. செலான் வங்கியுடன் நாங்கள் கட்டியெழுப்பியுள்ள நீண்டகால உறவைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் சிறப்பம்சத்தை ஊக்குவிக்கும், ஈடுபாட்டை ஆழப்படுத்தும் மற்றும் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் நிலையான தாக்கத்தை உருவாக்கும் முயற்சிகளில் முதலீடு செய்வதில் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறோம்.” என்றார்.