சேவைகள் / நிதி அறிக்கைகள் / எங்கள் அணி /
யூனியன் அஷ்யூரன்ஸ் பற்றி
மக்களின் ஆயுள் காப்புறுதி மற்றும்
வலுவூட்டலில் 30+ வருட காலம்

நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி தீர்வுகள் மற்றும் பாங்கசூரன்ஸ் சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், 1987 ஆம் ஆண்டு முதல் வாழ்க்கையை பாதுகாப்பது, மக்களுக்கு தமது கனவுகளை எய்துவதற்கு வலுவூட்டுவது மற்றும் ஆயிரக் கணக்கான இலங்கையர்களுக்கு மனநிம்மதியை வழங்குகின்றது.
”உங்கள் வாழ்க்கைக்கு, எமது பலம்” எனும் தொனிப்பொருளின் கீழ், எமது காப்புறுதிதாரர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்க இலங்கையின் கனவுகளை பிரத்தியேகமான மற்றும் தனிப்பட்ட வழிகளில் நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். யூனியன் அஷ்யூரன்சைச் சேர்ந்த நாம், முதலீடு, பாதுகாப்பு, ஓய்வூதியம், கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் போன்ற வாழ்க்கையின் சகல பிரிவுகளுக்கும் அவசியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பரந்தளவு ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகின்றோம்.
யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம் என்பது 'நம்பிக்கை' எனும் உறுதிமொழிக்கமைய தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்த உறுதி மொழிக்கமைய, எமது வாடிக்கையாளர்களுடன் முன்னெடுக்கும் சகலவிதமான கொடுக்கல் வாங்கல்களின் போதும் வெளிப்படையான தன்மை மற்றும் சௌகர்யத்தை வழங்குது மற்றும் மதிப்புடன் நடந்து கொள்வது ஆகியவற்றை பேணி வருகிறோம்.
நோக்கம்
காப்புறுதி தீர்வுகளின் மிகச்சிறந்த வழங்குனராக திகழ்வது
தன்னேற்புத்திட்டம்
எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு, நிதி உறுதி மற்றும் செல்வம் ஆகியவற்றை வழங்குவதுடன், எமது ஊழியர்களுக்கும், கள ஊழியர்கள், வியாபார பங்காளர்கள், பங்குதாரர்கள் மற்றும் சமூகத்துக்கு பெறுமதி சேர்ப்பது.
பெறுமதிகள்
பெறுமதி, பராமரிப்பு, புத்தாக்கம், நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் நெறிமை
history
நிறுவனத்தைப் பற்றி
யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம்
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம் ”பராமரிப்பு” எனும் கொள்கையின் பிரகாரம் ஆயுள்களுக்கான காப்புறுதியை வழங்குவது மற்றும் தனது கொடுக்கல் வாங்கல்களில் வெளிப்படைத்தன்மை, வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்குவது மற்றும் பங்காளர்களுடன் மதிப்புடன் நடந்து கொள்வது போன்றவற்றினூடாக ”நம்பிக்கை” என்பதன் பிரகாரம் இலங்கையர்களின் நம்பிக்கையை வென்ற உறுதியான வர்த்தக நாமமாக திகழ்கின்றது.
இன்று ”உங்கள் வாழ்க்கைக்கு, எமது பலம்.” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையரின் கனவை நிறைவேற்றிட பங்களிப்பு வழங்கும் வகையில் இந்த வர்த்தக நாமம் வளர்ச்சியடைந்துள்ளது. மக்களுக்கு வலுவூட்டும் எதிர்பார்ப்புடன், யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம் ”வாழ்க்கையை பாதுகாத்தல்” எனும் நிலையில், எதிர்பாராத சவால்கள் எழுந்த போதிலும், வாழ்க்கை முழுமையாக அனுபவிக்கப்படுவதை உறுதி செய்கின்றது. ஆயுள்களுக்கு காப்புறுதி வழங்கி ”உறவுகளை பாதுகாத்தல்” என்பதற்காக இழப்புகளிலிருந்து அன்புக்குரியவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கின்றது. சிறப்பாக திகழ எதிர்பார்ப்போரின் கனவுகள் மற்றும் இலக்குகளை எய்துவதற்கு உதவியாக ”எதிர்பார்ப்புகளை பாதுகாத்தல்” என்பதை பேணுகின்றது.