குறைந்த கவனிப்பு – மிகை செயற்பாடு நிலையில் வாழும் குழந்தைகள் இன்றைய சமூகத்தில் பெருமளவில் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப பின்னணி, பரம்பரை மரபணு உரிமை மற்றும் மோசமான சூழல் காரணிகள் அடங்கலாக உடல் மற்றும் உளக் காரணிகளால் இந்த நிலை ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்த நிலையை முறையாக இனங்கண்டு சிகிச்சை மற்றும் முறையான வழிகாட்டலினூடாக கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இந்த நிலையைக் கொண்ட குழந்தைகளுக்கு உதவுவது மற்றும் வழிகாட்டுதலை மேற்கொள்ளக்கூடிய வழிமுறை பற்றி உரையாடுவதற்கு “யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் Circle of Well-being” புதிய நிகழ்ச்சியில், வைத்தியர் சுவர்ணா விஜேதுங்க இணைந்து வெளியிட்ட கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன.

ADHD என குறிப்பிடப்படுவது என்ன?
ADHD என்பதால் Attention-deficit Hyperactivity Disorder எனும் குறைந்த கவனிப்பு மற்றும் மிகையான செயற்பாடு நிலையை கொண்ட குறைபாட்டு நிலை குறிக்கப்படுகிறது. இந்த நிலையை கொண்டிருக்கும் சிறுவர்களின் நடத்தை பெரும்பாலும் சிக்கல்கள் நிறைந்தது. குழந்தையின் நடத்தை மூளையின் செயற்பாட்டின் அடிப்படையில் தங்கியுள்ளது. மூளை வளர்ச்சியடையும் போது குழந்தையின் நடத்தை நடத்தை சாதாரணமாக பேணக்கூடிய ஆற்றல் பிள்ளைக்கு கிடைக்கிறது. ஆனாலும் வளர்ச்சியின் போது ஏற்படும் சில பின்னடைவுகளால் குறைந்த கவனிப்பு மற்றும் மிகை செயற்பாடு மிக்க குழந்தைகளில் காணப்படும் விசேடமான சிக்கலான நடத்தை காணப்படும். ஓரிடத்தில் இருக்க முடியாத நிலையை அவர்களில் அவதானிக்க முடியும். வகுப்பறையில் கல்வி பயிலும் போது கற்பிக்கும் விடயத்தை செவிமடுப்பதற்கு பதிலாக அவர்கள் வேறேதும் மாற்று செயற்பாடுகளில் ஈடுபடுவர். சாதாரணமாக சிறு பிள்ளைகள் செயற்திறன் மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் மிகை செயற்திறன் அல்லது மிகை செயற்பாடுடையவர்களாக இருக்கமாட்டார்கள். நாளாந்த வாழ்க்கை செயற்பாடுகளுக்கு தடங்கல் ஏற்படும் வகையில் அவர்கள் நடந்து கொள்கின்றார்களாயின், அதில் சிக்கல் உள்ளது. அதிசெயற்திறன் மிக்க பிள்ளைகள் ஏதேனும் ஒரு நடத்தையில் ஈடுபட்டிருக்கையில், மேலும் வேறான செயற்பாடுகளில் கவனம் செலுத்துவர். அவ்வாறு நடைபெறுவது, அவர்களின் அவதானிப்பு தொடர்பான சிக்கலால் அல்ல. சிக்கலாக அமைவது, அவர்களின் அவதானம் பல்வேறு விடயங்களில் செல்வதாகும். இதன் போது அவர்களின் அதானத்தை தக்க வைத்திருக்கக்கூடிய காலம் மிகவும் குறைவாகும். அவ்வாறு அவதானம் குறைவதால், பல விடயங்கள் மறந்துபோகும் நிலையும் ஏற்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாடசாலைக்கு கொண்டு செல்லும் ஏதேனும் பொருட்களை மீண்டும் கொண்டுவருவதற்கு கூட மறந்துவிடும். திட்டமிடல் அவர்களுக்கு முடியாத விடயமாக அமைந்திருப்பதுடன், அது அவர்களின் கல்விச் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் பாரதூரமான பிரச்சனையாகவும் அமைந்திருக்கும். அவர்கள் எவ்விதமான ஆபத்துகளையும் கவனத்தில் கொள்ளாமல் செயலாற்றும் சந்தர்ப்பங்களையும் அவதானிக்க முடியும்.

இது காலப்போக்கில் ஏற்படும் நிலையா? அல்லது பிறப்பிலிருந்து தொடரும் நிலையா?
இது நடத்தை சார்ந்த பிரச்சனையாகும். அது மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே இங்கு மூளையிலும் ஏதும் சிக்கல் உள்ளதாக கருதலாம். மூளை வளர்ச்சி ஒரே போக்கில் அமைந்திருக்கும். அதாவது மூளையின் வளர்ச்சி படிப்படியாக அமைந்திருக்கும். மூளை வளர்ச்சியின் போது ஒரு நிலையில் குழந்தைகளின் மூளையின் முன்பகுதியில் இருக்கும் பகுதியை (Prefrontal Cortex) அண்மித்து விசேடமான விருத்தி ஏற்படுகிறது. நாம் விலங்குகளிலிருந்து இந்த அங்கத்தின் வளர்ச்சியினால் வேறுபடுகிறோம். சிந்தித்து செயலாற்றுவது, இன்பமடைவது மற்றும் திட்டமிடுவது, உணர்வு, புத்தி மட்டம் மற்றும் நுண்ணறிவை வழிநடத்தல் போன்ற சகல விடயங்களும் இந்த அங்கத்தினூடாக கட்டுப்படுத்தப்படுகிறது. குறைந்த அவதானிப்பு மற்றும் மிகை செயற்பாடுடைய பிள்ளையின் மூளையில் இந்தப் பகுதி விருத்தியடைவதில் ஏதேனும் தாமதம் இருக்கலாம். குழந்தைப் பருவத்தில் கூட பிள்ளையில் இவ்வாறான மாற்றத்தை அவதானிக்க முடியும். மூளையின் வளர்ச்சியுடன் ஏற்படும் ஆனாலும் பெரும்பாலான மாற்றங்களை மிகவும் தெளிவாக கண்டு கொள்ள முடிவது பின்னராகும். இதுபோன்ற பிள்ளைகளின் மூளை வளர்ச்சி தொடர்பில் சிக்கல்கள் இருப்பதால் அசாதாரண நடத்தைகளை அவர்களின் சிறு வயது முதலிருந்தே காண முடிகிறது.

இந்த நிலை எவ்வாறு ஏற்படுகிறது? அதை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய முறை ஏதும் உள்ளதா?
இந்த நிலை எவ்வாறு ஏற்படுகிறது என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனாலும், அதற்கு மரபணு சிக்கலும் தாக்கத்தை கொண்டுள்ளதாக கருதலாம். அதுபோல, குழந்தை தாயின் வயிற்றில் வளரும் காலப்பகுதியில் அல்லது பின்னரான காலத்தில் ஏற்படக்கூடிய வெளியக தாக்கங்கள் காரணமாகவும் இந்த நிலை தோன்றலாம். பெற்றோரின் மது அல்லது போதை பாவனை போன்ற காரணங்களாலும் குழந்தையின் மூளை வளர்ச்சியடையும் காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல் நிலைகளை போன்று, சூழலில் காணப்படும் விஷத்தன்மை வாய்ந்த பொருட்கள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்கள், குறைபிரசவம் அல்லது சிக்கலான பிரசவங்களின் போது குழந்தையின் தலை சிக்கிக் கொள்வது போன்ற காரணிகளுடன், காக்கை வலிப்பு மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் காரணமாகவும் மூளைக்கு ஏற்படும் சேதத்தால் இந்த நிலை ஏற்படலாம். எனவே, குழந்தை பிறக்கும் முன் மற்றும் பிறந்த பின் பெற்றோர் மதுபாவனையிலிருந்து விலகி, ஆரோக்கியமான மன மற்றும் உடல் நிலையுடன் மகிழ்ச்சியாக இருப்பது மற்றும் முறையான போஷாக்கை பெறுவதனூடாக இந்த நிலை ஏற்படுவதை பெரும்பாலும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நிலையினூடாக குழந்தைப் பருவத்தைப் போன்று வாழ்க்கையின் பின்னரான காலப்பகுதியிலும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏதும் உள்ளனவா?
இவ்வாறான பிள்ளைகள் சாதாரண புத்தி மட்டத்தைக் கொண்டிருப்பர். இந்த நிலை காணப்படுகையில் முறையான வழிகாட்டல் மற்றும் சிகிச்சைகளினூடாக காலப்போக்கில் அவர்கள் திறமைசாலிகளாக மாறும் சந்தர்ப்பங்களும் உள்ளன. உயர் புத்தி நிலை மற்றும் மிகை செயற்பாடு ஆற்றலினூடாக இந்த பிள்ளைகள் வீரர்களாக சில செயற்பாடுகளில் ஈடுபடுவர். அதுபோன்று, மிகத் துரிதமாக மற்றும் வினைத்திறனாக இயங்கும் அவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகக்கூடிய ஆபத்தும் உள்ளது. தொழில்புரியும் வயதை எய்திய பின்னரும் இது போன்ற நடத்தைகளினூடாக தம்மையும், ஏனையவர்களையும் ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் செயலாற்றும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களை தவிர்த்துக் கொள்வதற்கு இந்த நிலையை சரியாக இனங்கண்டு கொள்ள வேண்டும். இது போன்ற பிள்ளைகளுக்கு சரியான சிகிச்சை மற்றும் வழிகாட்டல்களை வழங்காமல் விடுவதால் அவர்களால் சமூகத்துக்கு பாரதூரமான சேதங்கள் ஏற்படலாம். அவர்கள் பெரும்பாலும் நெறிமுறையற்ற மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடக்கூடும்.

பிள்ளைகள் புதிய டிஜிட்டல் தொழினுட்ப சாதனங்களுக்கு அடிமைப்பட்டிருப்பது இந்த நிலையில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது?
இவ்வாறான பிள்ளைகள் டிஜிட்டல் சாதனங்களில் அதிக விருப்பத்தைக் கொண்டிருப்பர். அவர்களுக்கு தொடர்ச்சியாக தமது அவதானத்தை ஒருவிடயத்தில் கொண்டிருக்க முடியாததன் காரணமாக, கார்டூன் பார்ப்பது அல்லது தொழினுட்ப சாதனங்களை பயன்படுத்தும் போது கூட அவர்களின் அவதானம் வேகமாக மாற்றமடையும். டிஜிட்டல் சாதனங்களினூடாக அவர்களின் அவதானம் தொடர்ந்தும் தக்க வைத்திருப்பது மேற்கொள்ளப்படாது. டிஜிட்டல் சாதனங்களினூடாக ADHD நிலை ஏற்படாத போதிலும், அவ்வாறான நிலையை கட்டுப்படுத்திக் கொள்ள பயன்படுத்தக்கூடிய பொருத்தமான செயற்பாடும் அல்ல. ஆனாலும், குழந்தைகளின் அவதானத்தை தொடர்ந்தும் பேணக்கூடிய புதிய தொழினுட்ப தீர்வுகளும் உள்ளன.

இவ்வாறான நிலையை கொண்ட பிள்ளை, வளர்ந்த பின்னர், சாதாரண வாழ்க்கையுடன் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமா?
குழந்தைக்கு அவசியமான வழிகாட்டலை பெற்றுக் கொடுப்பதனூடாக சாதாரண வாழ்க்கைக்கு அவசியமான பழக்கங்கள் மற்றும் செயற்பாடுகளை சரியாக சொல்லிக் கொடுப்பது முக்கியமாவதாக அமைவதுடன், அதனை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்கள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவசார் சிகிச்சை தேவைப்படுவது, பிள்ளையை அதனூடாக பயிற்றுவிப்பதற்கு அவதானத்தை பெற்றுக் கொள்வதற்காகும். பிள்ளைகளுக்கு நாளாந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முறையான வழிகாட்டல்களை வழங்கி இந்த நிலையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பிட்ட காலப்பகுதிக்கு அவ்வாறான தொடர்ச்சியான வழிகாட்டல்களை வழங்கிய பின்னர் மேலும் சிகிச்சை அவசியமற்றதாக இருக்கலாம். அதனூடாக ADHD நிலையை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு மருந்துகளை விட முறையான வழிகாட்டல்களை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுப்பதாகும். அதன் போது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் போன்ற வயதுவந்தவர்களுக்கு முக்கியமான பொறுப்பு காணப்படும். குழந்தைகளின் தேவைகளை இனங்கண்டு மற்றும் அவற்றில் கவனம் செலுத்தி, சரியான வழிகாட்டல்களை வழங்கி இந்த நிலையை பெரும்பாலும் கட்டுப்படுத்திக் கொள்ள அவர்களால் முடியும். எந்தளவு வேலைப்பளு நிறைந்ததாக இருப்பினும், பிள்ளையுடன் ஆரோக்கியமான பொழுதை செலவிடுவதை அவர்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

வயது வந்த பின்னரும் தொடர்ச்சியாக சிகிச்சைகளை பெற வேண்டுமா?
ADHD நிலை, பிள்ளை வளர்ச்சியடைவதுடன் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டாலும், அவதானம் செலுத்த முடியாமல் போதல் வயது வந்த பின்னரும் நிலவ வாய்ப்புள்ளது. அதனூடாக அவர்களின் வேலைகளுக்கு தடங்கல்கள் ஏற்படலாம். இவ்வாறான நபர்களுக்காக சிகிச்சைகள் உள்ளன. அவ்வாறான சிகிச்சைகளை தவறாமல், வயது வந்தவர்களுக்கான சிகிச்சைகளை வழங்கும் விசேட மனநிலை வைத்தியர்களை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்வதை மேற்கொள்ள வேண்டும்.

Share on