புது வருட பிறப்புடன் எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் மற்றும் குறிக்கோள்களினூடாக நாளைய தினத்தை மிகவும் நலமாக்கிக் கொள்ளும் நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பலர் முன்வருகின்றனர். தினசரி வாழ்க்கையை போன்று தொழில் வாழ்க்கையும் மிகவும் நலமாக அமைத்துக் கொள்வதை சகலரும் புத்தாண்டு எதிர்பார்ப்பாக கொண்டுள்ளனர். புதிய ஆரம்பத்துடன் சாதாரண நாளாந்த வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையை வெற்றி கொள்ளும் வகையில் சிந்திக்கும் முறையான மனநிலை பகுத்தறிவை மேம்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு பொருத்தமான வகையில் புத்தாண்டின் ஆரம்பத்தை குறிப்பிட முடியும்.
இது தொடர்பில் மேலும் தகவல்கள் வெளிப்படுத்துவது முக்கியமானது என்பதால், வெற்றிகரமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக பயிற்சி அவசியமானதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி இந்நாட்டின் பெருமளவானோருக்கு அறிவை பகிர்ந்தளிக்கும், சர்வதேச பயிற்றுவிப்பாளர்களின் சம்மேளனத்தின் அங்கத்தவர் (ICF Member), விருது வென்ற எழுத்தாளர், பயிற்றுவிப்பாளர் பாதிய அர்த்தநாயக்க பங்கேற்ற “யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் Circle of Well-being” இன் புதிய நிகழ்ச்சியின் பிரதான குறிப்புகள் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வெற்றிக்கு அவசியமான புதிய அறிவு, அனுபவம் மற்றும் உதாரணத்துடன் நாளாந்த வாழ்க்கைக்கு மற்றும் தொழில் வாழ்வுக்கு முக்கியமான மனநிலை பகுத்தறிவினூடாக நிதிசார், உளவியல்சார் மற்றும் உடல்சார் ரீதியில் நலன்கள் நிறைந்த வாழ்க்கைக்காக முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய முக்கியமான விடயங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
புது வருடம் என்பது புதிய ஆரம்பத்துக்கு கிடைக்கும் உளவியல் உந்துதல்
உளவியல் எண்ணங்கள் எம்மிலிருந்தே எழுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அந்த எண்ணங்கள் எமது முன்நோக்கிய பயணத்துக்கு தடையாக அமைந்திருப்பதுடன், சில சந்தர்ப்பங்களில் அந்த எண்ணங்கள் எமது முன்நோக்கிய பயணத்துக்கு பெருமளவு உதவியாக அமையும். புது வருடம் என்பது எந்தவொரு நபருக்கும் உளவியல் ரீதியில் கிடைக்கும் மாபெரும் உந்துதலாகும். எவரேனும் நபருக்கு புது வருடத்தின் ஆரம்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது, புதிய ஆரம்பத்தை மேற்கொள்வது மற்றும் புதிதாக சிந்தித்து செயலாற்றுவதை மேற்கொள்ள முடியும். 365 நாட்கள் என்பது நபர் ஒருவரின் வாழ்க்கையில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காலப்பகுதியாகும். ஆனாலும், நபர் ஒருவருக்கு வாழ்க்கையை மாற்றுவதற்கு புது வருடத்தின் ஆரம்பமே தேவையாக அமைந்திருக்காது. மலரும் ஒவ்வொரு நாளிலும் புதிய ஆரம்பத்தை பெற்றுக் கொள்ள முடியும். தேவைப்படுவது புதிய முறையில் மாற்றத்துக்கு அவசியமான மனநிலை பகுத்தறிவை ஏற்படுத்திக் கொள்வதாகும்.
இலக்குகளை பூர்த்தி செய்வதற்காக மனநிலை ரீதியில் மாற்றம் ஏற்பட வேண்டும்
எமது சில தீர்மானங்கள் அவசரத்தில் எழும் சில நிலைகளால் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் அவ்வாறான நிலைகளை எதிர்கொண்டு உணர்வுபூர்வமாக மேற்கொள்ளும் தீர்மானங்களினூடாக வாழ்க்கையை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது. எவரேனும் இலக்கை நோக்கி நெருங்குவதற்கான தீர்மானிக்கும் நிலையில் அதற்கு அவசியமான வகையில் மாறிக் கொள்ள வேண்டும். அவ்வாறான மாற்றத்துக்கு முகங்கொடுப்பதற்கு தொழில்நிபுணர்களுக்கு வாய்ப்பில்லை. நிறுவனத்தின் மேலதிகாரியின் கீழ் பணியாற்றும் நபருக்கு எதிர்காலத்தில் உயர் பதவியை பெற்றுக் கொள்ளும் இலக்கு இருந்தால், அதற்கு அவசியமான அறிவு, திறன்கள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதனூடாகவும் அனுபவத்தை பெற்றுக் கொள்வதனூடாகவும் மாற்றத்துக்கு முகங்கொடுக்க அந்த தொழில் நிபுணருக்கு நேரும். அதுபோன்று, தம்மை சூழவுள்ள இதர தொழில் நிபுணர்களுடன் சிறந்த தொடர்பு வலையமைப்பை கட்டியெழுப்பிக் கொள்வதும் இங்கு முக்கியமானதாக அமைகின்றது. அதனூடாக வெளிப்படுத்தப்படுவது, தம்முள் எழும் மனநிலையிலிருந்து, எதிர்பார்ப்புகளை போன்று தம்மை சூழவுள்ள சூழலும் தொழில் நிபுணரின் முன்நோக்கிய பயணத்தில் தாக்கம் செலுத்துகின்றது என்பது.
ஆரோக்கியத்தை எய்துவதற்கு உதவும் உணர்வுபூர்வ மனநிலை
உணர்வுபூர்வ மதிநுட்பம் (Emotional Intelligence) என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும். உள்ளிருந்து உதிக்கும் உணர்வுபூர்வமான கொள்கைகளினூடாக நபர் ஒருவரின் செயற்பாடுகள் தீர்மானிக்கப்படும். தம்முள் காணப்படும் உணர்வுகளின் வலிமையை அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். நிறுவனமொன்றில் சேவையாற்றும் போது, தம்மை சூழவுள்ள சூழலை மாற்றுவதற்கு ஊழியர் ஒருவரால் முடியாத போதிலும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த சூழலில் நிலவும் ஏதேனும் நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு உளவியல் உணர்வுகளை மாற்றிக் கொள்வதற்கு அவரால் முடியும். தமக்கு அவசியமான நிறைவேற்றிக் கொள்வதற்கு வழமை போன்று உணர்வை கட்டுப்படுத்திக் கொள்ளும் நபர் ‘அலாவுதீனின் அற்புத விளக்கு’ அருகில் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். அனைவரும் நலன் தொடர்பில் சிந்திப்பார்களாயின், உணர்வுபூர்வமான மனநிலை தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்த வேண்டும். எவரும் சிந்திக்கும் முறை பயனளிப்பதாக இருக்காது என புலப்படுமாயின், மாறுபட்ட வகையில் சிந்திக்க ஆரம்பித்து பலனளிக்கும் பெறுபேறுகளை எய்துவதற்கு வழியமைத்துக் கொள்ள வேண்டும்.
தொழிலில் பதவி உயர்வுக்கு முக்கியமாக அமையும் மனநிலை மாற்றம்
வியாபார முனைப்புடன் இயங்கும் பணியிடங்கள் பல அடங்கும் நிறுவனசார் உலகினுள் மிகவும் போட்டிகரமான சூழல் நிலவுகின்றது. வியாபார நிறுவனங்களுக்கிடையே நிலவுவதை போல அவற்றினுள் பணியாற்றும் நபர்களுக்கிடையிலும் கடும் போட்டி நிலவும். ஏதேனும் நிறுவனம் இந்த போட்டிக்கு முகங்கொடுத்த வகையில் முன்னேறுவதற்கு முயற்சிக்குமாயின் அது திறமையான ஊழியர்களைக் கொண்டாகும். நிறுவனங்களில் பெருமளவான சந்தர்ப்பங்களில் பதவி உயர்வு கிடைப்பது சாதாரணமாக பணியாற்றுபவர்களை விட, திறமையாக பணியாற்றும் ஊழியர்களுக்காகும். அதுபோன்று, பெரும்பாலும் அவ்வாறான பதவி உயர்வுகள் கிடைப்பதும் நிறுவனத்தில் அதிகளவு காலம் சேவையாற்றும், அனுபவம் நிறைந்த ஊழியர்களுக்காகும். அதற்கு ஏதுவாக அமைவது, நிறுவனத்தின் மீது ஊழியர்களுக்கு பெருமளவு புரிந்துணர்வு காணப்படுவதாகும். நிறுவனத்தில் பணியாற்றும் சகல ஊழியருக்கும் உயர் பதவி வரை பயணிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் நாளாந்த வாழ்க்கையின் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு காரணங்களால் நபர் ஒருவருக்கு அதுபோன்ற பதவி உயர்வு பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு தவறிப் போகலாம். சில சந்தர்ப்பங்களில் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றும் ஊழியர்கள் இருக்கும் போதும், புதிய ஊழியரை இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அவ்வாறான சந்தர்ப்பத்தில், நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர் மனதளவில் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. ஆனாலும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த ஊழியர், மனதளவில் மாற்றுவிதமாக சிந்தித்து, தமக்கு அந்த வாய்ப்பு தவறியமை ஏன் என்பதை ஆராய்வதாகும். சில சந்தர்ப்பங்களில், குறித்த ஊழியர் நிறுவனத்தில் நீண்ட கால பழமையான ஊழியராக இருந்தாலும், அவரிடம் இல்லாத திறமைகள், ஆற்றல்கள் மற்றும் விசேட அம்சங்கள் வெளியிலிருந்து இணைத்துக் கொள்ளும் ஊழியரிடம் இருக்கலாம். பழைய ஊழியர் இருக்கையில், புதிய ஊழியரை இணைத்துக் கொள்வதற்கான காரணம் அதுவாக இருந்தால், பழைய ஊழியர் செய்ய வேண்டியது, தமது குறைகளை நீக்கி, அவசியமான திறமைகள், ஆற்றல்கள் மற்றும் விசேட ஆற்றல்களை கட்டியெழுப்பிக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாகும்.
தொழில் வாழ்க்கையில் சவால்களை வெல்வதற்கு அவசியமான உணர்வுகள்
மனிதன் என்பவன் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கும் விலங்கினத்தை சேர்ந்தவன். ஆதிகாலம் தொட்டு மனிதன் அவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளான். ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு வேட்டையாட ஆயுதம் கூட இருக்கவில்லை. அதனால், காட்டினுள் உணவு தேடி வேட்டையாட செல்லும் சந்தர்ப்பங்களில் வன விலங்குகளின் இரையாகிய சந்தர்ப்பங்களும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. அன்று போலவே, இன்றும் நிலவுவது அதுபோன்றதொரு அபாயம் நிறைந்த நிலையாகும். எதிர்காலத்தில் தமது வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே சிந்திப்பதற்கு எவருக்கும் ஆற்றல் இல்லை. தொழில் வாழ்க்கையிலும் பலருக்கும் முகங்கொடுக்க நேரிடுவது இதுபோன்றதொரு நிலையையாகும். தொழில் வாழ்க்கையை வெல்லும் குறிக்கோளுடன் செயலாற்றும் பணியாளர்கள் இவ்வாறான சவால்களை எதிர்கொண்டு மாறிக் கொள்ள வேண்டிய முறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். உலகின் ஏனைய நாடுகளின் பணியாளர்கள் பல்வேறு சவால்களை வெற்றி கொள்வதற்கு செயலாற்றியமை தொடர்பில் தேடிப் பார்த்து, பல விடயங்களை பயில்வதற்கான ஆற்றல் இலங்கையின் பணியாளர்களுக்கு காணப்படுகின்றது. இவ்வாறு வெற்றிகரமாக தொழில் வாழ்க்கையை வெற்றி கொண்ட நபரான ஸ்டீவ் ஜொப்ஸ் எதிர்கொண்ட அனுபவம் தொடர்பில் பலர் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு வயது இருபத்து ஒன்பதாக இருந்த போது, அப்பிள் மெக்கின்டொஷ் கணனிகள் மிகவும் பெருமளவு வரவேற்பை பெற்றிருந்தன. ஆனாலும், அவர் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்தே பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தாம் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்து தம்மை நீக்கியமை போன்ற துரதிர்ஷ்டவசமான அனுபவத்துக்கு முகங்கொடுத்த பின்னரும், தாம் வினைத்திறன் வாய்ந்தவராக திகழ்வதற்கு அது வழிகோலியதாக குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் அவர் பல விடயங்களை பயின்று, புதிய விடயங்களை சிந்திப்பதற்கு ஆரம்பித்தார். அத்துடன், இன்னும் நிறுவனங்களை ஆரம்பிக்க அவர் திட்டமிட்டார். காலப் போக்கில், தமக்கு நேர்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், தமக்கு நேர்ந்த சிறந்த விடயமாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அன்று தமது நிறுவனத்தினால் தம்மை பணிநீக்கம் செய்யாவிடின், காலப் போக்கில் தம்மை வலிமையானவராக கட்டியெழுப்ப தமக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும் என குறிப்பிட்டிருந்தார். பணியாளர்கள் அவ்வாறான மனநிலையுடன் பணியாற்ற வேண்டும்.
சவால்கள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொண்டு அநாவசியமாக சிந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக, பணியாளர்கள் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் மனதளவில் வலிமையடைவதாகும். அத்துடன், பணியாளர்களுக்கு தமது முன்னேற்றத்துக்கு அவசியமான முக்கியமான நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளில் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். இந்த உலகில் வெற்றியாளர்கள் மற்றும் தோல்வியாளர்கள் என இரு தரப்பினர் உள்ளனர். அந்த இருசாராரும் வாழ்க்கையில் பெரும்பாலும் ஒரே மாதிரியான அனுபவங்களுக்கு முகங்கொடுத்தவர்களாக இருக்கக்கூடும். ஆனாலும், அவர்கள் அந்த அனுபவங்களுக்கு முகங்கொடுக்கும் முறைக்கமைய அவர்கள் வெற்றியாளர்களா அல்லது தோல்வியாளர்களாக என்பது தீர்மானிக்கப்படுகின்றது.