இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், வாடிக்கையாளர் அனுபவத்திற்கான Model Insurer ஆக பெருமைக்குரிய Celent Model Insurer விருதுகள் 2026 இல் கௌரவிப்பைப் பெற்றது. ஆயுள் காப்புறுதித் துறைக்கான ஒரு உலகளாவிய முன்மாதிரியை நிலைநிறுத்தியதுடன், தொழில்நுட்ப அடிப்படையிலான உருமாற்றத்தில் தனது தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியிருந்தது.
உலகளாவிய நிதிச் சேவைகள் துறைக்கான புகழ்பெற்ற ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான Celent இனால் வருடாந்தம் வழங்கப்படும் Model Insurer விருதுகள், காப்புறுதித் துறையின் மிக சிறந்த மற்றும் மதிப்புமிக்க அங்கீகாரங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது. தெளிவான வணிகத் தாக்கம், புத்தாக்கம் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கையாளுதல் அல்லது செயலாக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் அதிசிறந்த தொழில்நுட்ப முயற்சிகளுக்காக முன்னணி காப்புறுதி நிறுவனங்களுக்கு இவ்விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றன.
வாடிக்கையாளரின் ஆயுள் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் தடையற்ற, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் ஒரு உருமாற்றத் திட்டமான, யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் Connected Life முயற்சிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் காப்புறுதி பற்றிய விழிப்புணர்வு, பாலிசி கொள்வனவு, காப்புறுதிப் பரிசீலனை, வாடிக்கையாளர் சேவை மற்றும் உரிமைகோரல்கள் ஆகியவற்றுடன், வாடிக்கையாளர்களின் நல்வாழ்வை ஆதரிக்கும் ஒருங்கிணைந்த ஆரோக்கியத் தீர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. இலங்கையின் முதலாவதும் மிக விரிவானதுமான டிஜிட்டல் ஆயுள் காப்புறுதிச் சூழல் அமைப்பான யூனியன் அஷ்யூரன்ஸ் Clicklife App மூலம் இயக்கப்படும் இம்முயற்சி, வாடிக்கையாளர்கள் ஆயுள் காப்புறுதியை அணுகும், நிர்வகிக்கும் மற்றும் அதனுடன் தொடர்பு கொள்ளும் முறையை மறுவரையறை செய்கிறது. அத்துடன், அவர்களுக்கு மிகவும் முக்கியமானவற்றைப் மிகச் சிறந்த முறையில் பாதுகாப்பதற்கும் இது வலுவூட்டுகின்றது.
இத்திட்டம், எவ்வித காகித ஆவணங்களும் அற்ற உடனடிப் பாதுகாப்பை வழங்குவதற்காக, பிரதான வங்கியியல் தரவு முன்தேர்வு, டிஜிட்டல் மருத்துவ முடிவுகள் பரிமாற்றத் தளம் மற்றும் தானியங்கி காப்புறுதிப் பரிசீலனை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், முகவர்களின் ஆதரவுடனான டிஜிட்டல் அலைவரிசைகளின் துணையுடன் 24/7 சுய-சேவை (self-service) வசதியைப் பெற்றுக்கொள்வதுடன், தங்களின் இழப்பீட்டுக் கோரிக்கைகளை இரண்டு நிமிடங்களுக்குள் சமர்ப்பித்து, அதன் ஒவ்வொரு கட்டத்தையும் உடனுக்குடன் கண்காணித்து அறிந்துகொள்ள முடியும். வெறும் பணப்பரிமாற்றங்களுக்கு அப்பால் விரிவடைந்து, இம்முயற்சி Clicklife Suwamaga+ எனும் AI இனால் இயங்கும் நல்வாழ்வு சுற்றுச்சூழல் அமைப்பையும் அறிமுகப்படுத்துகிறது. இது ஊட்டச்சத்து கண்காணிப்பு, உடற்பயிற்சி கண்காணிப்பு, விளையாட்டுப் பாணியிலான ஆரோக்கிய சவால்கள் மற்றும் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்புணர்வுடன் இணைந்த சுகாதார விழிப்புணர்வுகளை வழங்குவதன் மூலம், நிதிப் பாதுகாப்பின் பங்களிப்பினை வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்க்கையுடன் தடையின்றி இணைக்கிறது.
காப்புறுதித் திட்டத்தின் முக்கிய மைல்கற்களுக்கு இடையே வாடிக்கையாளர்களுடன் தொடர்ச்சியான தொடர்பாடலை வளர்த்தெடுப்பதன் மூலம், இம்முயற்சி மிகக் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கமைய, app downloads எண்ணிக்கை 100,000 ஐக் கடந்துள்ளதுடன், தானியங்கி காப்புறுதிப் பரிசீலனைக்கான நேரடிச் செயலாக்க விகிதம் 69 சதவீதத்தை எட்டியுள்ளது. அத்துடன், இழப்பீட்டுக் கோரிக்கைகளைச் செயலாக்குவதற்கான மனித உழைப்பு 80 சதவீதத்திற்கும் மேலாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான கையாளல் நேரம் 25-30 நிமிடங்களில் இருந்து சுமார் ஐந்து நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பான செயல்பாடு, இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைத்துவத்தை மேலும் பலப்படுத்துகிறது.
Celent இன் பிரதம பகுப்பாய்வாளர் கீத் ரேமன்ட் கருத்துத் தெரிவிக்கையில், “காப்புறுதி அனுபவத்தை அடிப்படை ரீதியாக மாற்றிமைப்பதற்காக, காப்புறுதி நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை எவ்விதம் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துகின்றன என்பதை Model Insurer விருதுகள் அங்கீகரிக்கின்றன. யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் Connected Life செயற்திட்டம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது, ஒரு டிஜிட்டல் வாடிக்கையாளர் அனுபவத்தின் ஊடாக, உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் நவீனத்துவங்கள் எவ்விதம் ஆயுள் காப்புறுதித் துறையை மறுவடிவம் செய்து மாற்றியமைக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.” என்றார்.
இந்த விருது தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “Celent Model Insurer விருதை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வென்ற உலகளாவிய காப்புறுதி நிறுவனங்களின் elite group இல் இணைந்து, இந்த அங்கீகாரத்தை இரண்டாவது முறையாகப் பெறுவதில் நாம் பெருமையடைகிறோம். இந்த உலகளாவிய அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே இலங்கை காப்புறுதி நிறுவனம் மற்றும் தற்போது இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம் என்ற ரீதியில், இச்சாதனை உலகின் மிகச் சிறந்த நிறுவனங்களுடன் ஒப்பிடத்தக்க எமது ஆற்றல்களின் வலிமையைப் பிரதிபலிக்கிறது. எமது முக்கிய தொழில்நுட்ப மாற்றத்திற்காக 2020 ஆம் ஆண்டில் முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்டு, தற்போது 2026 ஆம் ஆண்டில் வாடிக்கையாளர் அனுபவத்தை மாற்றியமைத்தமைக்காக அங்கீகாரம் பெற்றுள்ளதன் மூலம், டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தின் முழுமையான பரிமாணத்திலும் நாங்கள் எமது தொடர்ச்சியான சிறப்பை வெளிப்படுத்தியுள்ளோம். தொடர்ச்சியாக எமது தரத்தை உயர்த்தி உழைத்த எமது குழுவினரின் அர்ப்பணிப்பை நான் பாராட்டுவதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் இணைக்கப்பட்ட, எளிதில் அணுகக்கூடிய மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட ஒரு காப்புறுதி அனுபவத்தை உருவாக்குவதற்கான எமது உறுதிப்பாட்டை மீளுறுதி செய்கிறேன்.” என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பிரதம தகவல் அதிகாரி ஹர்ஷ சேனநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றுவது யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய பயண வரைபடமாகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு Celent இனால் அங்கீகரிக்கப்பட்ட எமது முக்கிய தொழில்நுட்ப நவீனமயமாக்கல், நாம் எடுத்துவைத்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முதல்படியாகும். அதன் பின்னர், அத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, தொடர்ச்சியான பல முதன்மை முயற்சிகளுடன் இலங்கையில் நாம் முன்னிலை வகித்து வருகிறோம். அவற்றுள், AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் Suwamaga+ நல்வாழ்வு சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டு, வாடிக்கையாளரின் முழுமையான ஆயுள் சுழற்சியையும் உள்ளடக்கிய இலங்கையின் முதலாவது காப்புறுதி super app ஆன Clicklife, 100% டிஜிட்டல் ஆவண சமர்ப்பிப்பு முறைமைக்கான முதலாவது நகர்வு மற்றும் மின்னணு மருத்துவ மற்றும் ஆய்வக அறிக்கைகளின் முதலாவது அறிமுகம் ஆகியன குறிப்பிடத்தக்கவை ஆகும். ஐந்து ஆண்டுகால இடைவெளியில், இரு வேறுபட்ட துறைகளில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளமை, எமது தொடர்ச்சியான செயல்வடிவத்தையும், தெளிவான நீண்டகால தொலைநோக்கையும் பிரதிபலிக்கிறது. எமது உள்நாட்டு இலங்கைத் திறமையாளர்களால் நிறுவனத்தினுள் வடிவமைக்கப்பட்ட இச்சாதனை, முதன்மை டிஜிட்டல் காப்புறுதி நிறுவனமாக மாறுவதற்கான எமது தொலைநோக்கை உறுதிப்படுத்துகிறது. வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எமது பங்குதாரர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதற்கும், அடுத்த தலைமுறை AI தொழில்நுட்பங்களைக் கையாள்வதன் மூலம் எமது இப்பயணத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.” என்றார்.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2026 மார்ச் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 40.6 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 96.2 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.