இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் துறை ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தகைமை பெறும் காப்புறுதிதாரர்களுக்காக நீடிக்கப்பட்ட மேலதிக வாழ்க்கைமுறை வெகுமதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்த Union Assurance Platinum Circle ஐ அறிமுகம் செய்துள்ளது. முக்கியமானதை பாதுகாப்பதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், Union Assurance Platinum Circle இனால் பாரம்பரிய ஆயுள் காப்புறுதி அனுபவம் என்பதற்கு மேலதிகமாக, நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட அரவணைப்பு, மேம்படுத்தப்பட்ட சௌகரியம் மற்றும் வாழ்த்துகளை தெரிவிக்கும் முறைமை ஆகியவற்றை வழங்குகிறது.

தகைமைகளை பூர்த்தி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதிதாரர்களுக்கு, Union Assurance Platinum Circle இன் பிரத்தியேகமான அனுகூலங்களை அணுகும் வகையில் சுயமாக செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனுகூலங்களில் வாழ்க்கைமுறை அனுபவங்களை தெரிவு செய்து கொள்ளல், மைல்கல் கௌரவிப்புகள், டிஜிட்டல் சுகாதார சேவைகள் மற்றும் பல்வேறு பங்காளர்களால் வழங்கப்படும் அனுகூலங்கள் போன்றன அடங்கியுள்ளதுடன், காப்புறுதிதாரரின் ஆயுள் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளன. மேலதிக சௌகரியத்திற்காக, இந்த வெகுமதிகள், துறையின் பரந்த ஆயுள் காப்புறுதி app ஆன, Clicklife App ஊடாகவும் செயற்படுத்தப்பட்டுள்ளன. அதனூடாக, எந்நேரத்திலும், எங்கிருந்தும் ஒப்பற்ற வாடிக்கையாளர் முகாமைத்துவத்தை உறுதி செய்கின்றன.

இந்த அறிமுகம் தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “Union Assurance Platinum Circle இனால் எமது காப்புறுதிதாரர்களுடன் காலப்போக்கில் நாம் கொண்டுள்ள உறவுமுறை மேலும் எவ்வாறு ஆழப்படுத்தப்படுகிறது என்பது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவரின் முன்னேற்றம் வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் கடக்கும் நிலையில், இந்த பிரத்தியேகமான அனுபவத்தினூடாக பல அர்த்தமுள்ள வழிமுறைகளில் பிரசன்னமாகியிருப்பதற்கு எமக்கு அனுமதியளித்துள்ளது. அத்துடன், தமது தினசரி வாழ்க்கையில் பொருத்தமான வகையில் அமைந்திருக்கக்கூடிய வகையில் ஆயுள் காப்புறுதி அனுபவங்களை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இந்த வெகுமதியளிக்கும் கட்டமைப்பினூடாக, காப்புறுதித் திட்டங்களுக்கு அப்பாலான சிறந்த சேவைகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டு, யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் ஏற்றுக் கொள்ளல் மற்றும் பெறுமதியில் காணப்படும் நம்பிக்கை மீள உறுதி செய்யப்படுகிறது.” என்றார்.

பிரதம செயற்பாட்டு அதிகாரி ருமேஷ் மோதரகே கருத்துத் தெரிவிக்கையில், “செயற்பாட்டு சிறப்பு மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியன யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மூலோபாயத்தில் மையமான விடயங்களாக அமைந்துள்ளன. Union Assurance Platinum Circle இனால் ஒப்பற்ற நிறைவேற்றம், ஆயுள் காப்புறுதி அனுபவங்களை மேம்படுத்தல் போன்றவற்றை ஒன்றிணைக்கும் எமது அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம், வாழ்க்கைமுறை, டிஜிட்டல் சேவைகள் மற்றும் வெகுமதிகள் ஆகிய பிரத்தியேகமான வெகுமதிகளினூடாக, இந்த பிரத்தியேகமான அனுபவங்களினால் எமது காப்புறுதிதாரர்களுக்கு முக்கியமான அம்சங்களுக்கு பொருந்தும் வகையிலமைந்த அர்த்தமுள்ள பெறுமதி சேர்க்கப்படுகிறது.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2026 மார்ச் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 40.6 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 96.2 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

Share on