இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலங்கை நீரிழிவு சம்மேளனத்துடன் இணைந்து, நவம்பர் 14ஆம் திகதி தாமரைக் கோபுரத்தை ஒளியூட்டியிருந்தன. நீரிழிவு தொடர்பில் விழிப்புணர்வைப் பெற்றிருப்பதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் இந்த ஒளியூட்டல் அமைந்திருந்தது. நாட்டின் மிகவும் சவால்கள் நிறைந்த சுகாதார பிரச்சனையான நீரிழிவு நிலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த செயற்பாடு அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் கலாநிதி. முதித்த ஹன்சக விஜேமுனி, இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி. மனில்க சுமனதிலக அடங்கலாக அங்கத்தவர்கள் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் முகாமைத்துவ அணியினர் கலந்து கொண்டனர்.

நிதிப் பாதுகாப்பிற்கும் அப்பாற்பட்ட நீண்டகாலப் பெறுமதியை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ், தேசத்தின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் சமூகச் சவால்களைக் கையாள்வதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை நீரிழிவுச் சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் தனது முதன்மையான கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு முயற்சியான யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக திட்டத்தினூடாக, இலங்கையில் அதிகரித்து வரும் நீரிழிவு நோய்ச் சவாலை எதிர்கொள்வதை இந்நிறுவனம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

நீரிழிவு நோயுடன் வாழ்வோருடனான ஒருமைப்பாட்டின் சின்னமாகவும், இவ்வருட உலக நீரிழிவு தினத்தின் தொனிப்பொருளான நீரிழிவு நோய் மீதான ஆரம்பகட்ட நடவடிக்கை என்பதை வலுப்படுத்தும் வகையிலும் நீல நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்ட அடையாளச் சின்னம் திகழ்ந்தது. யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக திட்டத்தின் நோக்கங்களுடன் இத்தொனிப்பொருள் ஒன்றிணைந்திருப்பது, சமூகங்கள் மத்தியில் நீரிழிவு நோயை முகாமைத்துவம் செய்வதற்கான உரிய நேரத்திலான ஆதரவை வழங்குவதில் இத்திட்டத்தின் பொருத்தப்பாட்டை வலுவாக உறுதிப்படுத்துகிறது. நிலையான, விரிவுபடுத்தக்கூடிய மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தலையீடுகள் மூலம், நீரிழிவு நோய்க்கு எதிரான பரந்த தேசிய மற்றும் உலகளாவிய நடவடிக்கைகளுக்கு இத்திட்டம் பங்களிப்புச் செய்வதுடன், இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களின் முன்னேற்றத்தைப் பாதுகாக்கிறது

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் சுமார் நான்கு தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2026 செப்டெம்பர் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 40.1 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 106.5 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.