உங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாப்பதில் முக்கியமான படிமுறையாக ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றை கொள்வனவு செய்வது அமைந்துள்ளது. எவ்வாறாயினும், எவ்வாறாயினும், சரியான அனுகூலம் பெறுனர்கள் இனங்காணப்பட்டால் மாத்திரமே, அதனூடாக வழங்கப்படும் பாதுகாப்பு முழுமையாக நிறைவேற்றப்படக்கூடியதாக இருக்கும்.

அனுகூலம் பெறுனர்களை நியமிப்பது என்பது வெறும் நடைமுறைச் சம்பிரதாயம் மட்டுமல்ல. காப்பீட்டுத் தொகையை யார் பெறுவார்கள் என்பதைத் தீர்மானிப்பது அதுவாகும். மேலும் உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு ஆதரவு மிகவும் தேவைப்படும் காலத்தில் உங்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யவும் அவை உதவுகின்றன. காப்பீட்டுத் திட்டத்தைப் பராமரிப்பது எந்தளவு முக்கியமாதோ, அதைப்போன்று அனுகூலம் பெறுனர்களின் விபரங்களைத் தொடர்ச்சியாகப் பரிசீலித்து புதுப்பிப்பதும் மிக முக்கியமாகும்.

படிவமொன்றில் பதவிடப்படும் ஒரு பெயர் என்பதற்கு அப்பாற்பட்டது

துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில், உங்களது ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து கிடைக்கும் பணப்பயனைப் பெறுவதற்காக நீங்கள் தெரிவு செய்யும் நபர் அல்லது நபர்கள் உங்களது ‘அனுகூலம் பெறுனர்’ (beneficiary) ஆவர். இது ஒரு சாதாரண நிர்வாகச் செயல்பாடாக காணப்பட்டாலும், உங்கள் விருப்பங்கள் தெளிவாகப் பிரதிபலிப்பதை உறுதிசெய்யப் அனுகூலம் பெறுனர் விபரங்களைத் துல்லியமாகவும் உடனுக்குடன் புதுப்பித்தும் வைப்பது அவசியமாகும்.[2]

உங்களது உயில் வேறு ஒரு நபரைக் குறிப்பிட்டிருந்தாலும், உங்களது காப்பீட்டு விண்ணப்பப் படிவத்தில் பெயரிடப்பட்டுள்ள நபருக்கே காப்பீட்டுத் தொகையை வழங்கக் காப்பீட்டு நிறுவனம் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது.[2] இதனால் தான் உங்களது காப்பீட்டுப் பத்திரம் உங்களின் தற்போதைய விருப்பங்களை எப்போதும் பிரதிபலிப்பதை உறுதி செய்வது அத்தியாவசியமாகிறது.

நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அனுகூலம் பெறுனர்களை நியமிக்கத் தெரிவு செய்யலாம். சாத்தியமெனில், காப்பீட்டுப் பலன்கள் அவர்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிடவும். இந்த முடிவுகளைக் கவனமாகப் பரிசீலிக்க நேரத்தைச் செலவிடுவது, காப்பீட்டுப் பத்திரமானது அவர்களின் விருப்பங்களைப் பிரதிபலிப்பதை உறுதி செய்யவும், எதிர்காலத்தில் அன்பிற்குரியவர்களுக்குத் தெளிவை வழங்கவும் உதவும்.

அனுகூலம் பெறுனர்களை நியமிக்கையில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில நடைமுறைச் சாத்தியமான விடயங்கள்:

பெயர்கள் தொடர்பில் தெளிவாக இருத்தல். பிள்ளைகளின் பெயர்களை குறிப்பிடாமல், “எனது பிள்ளைகள்” என பதிவிடுவது, உரிமை கோரும் சந்தர்ப்பத்தில் குழப்பநிலை மற்றும் முரண்பாடுகளை தோற்றுவிக்கலாம், [3]

பாரிய வாழ்க்கை சம்பவங்களைத் தொடர்ந்து மீளாய்வு செய்தல். திருமணம், விவாகரத்து, குழந்தை பிரசவம் அல்லது உயிரிழப்பு போன்றன நீங்கள் அனுகூலம் வழங்க எதிர்பார்ப்பவரில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். வருடாந்தம் மற்றும் பாரிய வாழ்க்கை சம்பவங்களைத் தொடர்ந்து அவற்றை மீளாய்வு செய்வது சிறந்த பழக்கமாக அமைந்திருக்கும்.[2]

உங்களின் அனுகூலம் பெறுனர்களின் வயதை கவனத்தில் கொள்ளுங்கள். பராயமடையாதவர்களை அனுகூலம் பெறுனர்களாக குறிப்பிடுகையில் விசேட கவனம் செலுத்தல்கள் பொருந்தலாம். காப்புறுதிதாரர்கள் தமது விருப்பங்களுக்கமைய அனுகூலங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக வழிகாட்டல்களை பெற வேண்டும்.[1]

அன்புக்குரியவர்களின் நிதிசார் நலனை பாதுகாப்பதற்காக ஆயுள் காப்புறுதி பெரும்பாலும் கொள்வனவு செய்யப்படுவதால், காப்புறுதித் திட்டத்தின் முக்கிய அங்கமாக அனுகூலம் பெறுனரின் விபரம் முக்கியமானதாக அமைந்துள்ளது.

உசாத்துணைகள்
[1] 1-800-Insurance. “Life Insurance Beneficiary Guide.” October 2025. 1800insurance.com
[2] WAEPA. “5 Common Life Insurance Beneficiary Mistakes — And How to Avoid Them.” March 2026. waepa.org
[3] Nolo. “Naming a Beneficiary for Your Life Insurance Policy.” December 2025. nolo.com
[4] Insurance By Heroes. “Life Insurance Policy Provisions: What’s Included.” April 2026. insurancebyheroes.com
[5] Insurance By Heroes. “Term Life Insurance Riders Explained: 2026 Guide.” February 2026. insurancebyheroes.com