Platinum Circle என்பது வருடாந்த கட்டுப்பணமாக ரூ. 3,000,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்தும் காப்புறுதிதாரர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் சலுகையாகும். சௌகரியம், நலன் மற்றும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பரந்த உயர்தர சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தப் பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்துச் சலுகைகளும்/பலன்களும் முதன்மைக் காப்புறுதிதாரருக்கு மாத்திரம் செல்லுபடியாகும். இங்கு தகைமையைத் தீர்மானிப்பதற்காக, ஒரு காப்புறுதிதாரர் பேணும் அனைத்துக் காப்புறுதிக் கொள்கைகளினதும் வருடாந்தக் காப்புறுதிக்கட்டணங்கள் ஒன்றாகத் திரட்டப்படும். அத்துடன், மொத்த வருடாந்தக் காப்புறுதிக்கட்டணம் ரூ. 3 மில் அல்லது அதற்கு மேல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே இச்சலுகைகள் பொருந்தும்.
வகைப்படுத்தலில் செயலில் உள்ள சகல காப்புறுதிகள் மற்றும் கடந்த 3 மாதங்களினுள் செயலிழந்த நிலையை எய்திய சகல காப்புறுதிகளும் அடங்கியிருக்கும்.
காப்புறுதிதாரர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட காப்புறுதிகளை கொண்டிருக்கையில், நிறைவேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் இருவருக்கான பிறந்தநாள் இராப்போசணம் போன்றன மிகவும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட காப்புறுதி ஆரம்பித்து ஒருவருட காலத்தை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
ஒரு காப்புறுதி செயலிழந்த நிலையை எய்தினால், செயலிழந்த திகதியிலிருந்து 3 மாதங்களுக்கு Platinum அந்தஸ்து மாறாமல் இருக்கும்.
வாடிக்கையாளர் தமது மேலதிக காப்புறுதி நீக்கல் அல்லது காப்பீட்டுத் தொகை குறைப்பு ஆகியவற்றினால் கட்டுப்பணம் அல்லது அடிப்படை காப்பீட்டுத் தொகையை குறைக்கும் சந்தர்ப்பங்களில், அவர்களின் பிரிவு அந்தஸ்து சுயமாக கணிப்பிடப்பட்டு மாற்றங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படும்.
கட்டுப்பணம் செலுத்தும் காலப் பகுதியில் மாத்திரம் தகைமை பொருந்தும் வகையில், குறுகிய கால மற்றும் நீண்ட கால காப்புறுதிகள் உள்ளடக்கப்படும்.
DTA (Decreasing Term Assurance) காப்புறுதிகள், ஒற்றைக் கட்டுப்பண (Union Advantage) மற்றும் குழு ஆயுள் காப்புறுதிகள் தவிர்க்கப்படும்.
நிறைவேற்று மருத்துவ பரிசோதனை (வருடாந்தம்)
Clicklife App ஊடாக ஒன்லைன் வைத்திய ஆலோசனைகள் (மாதத்திற்கு 2)
இருவருக்கு தெரிவு செய்யப்படும் ஹோட்டலில் பிறந்தநாள் இராப்போசணம்
ரூ. 30,000 பெறுமதியான குழந்தை பிறப்பு அன்பளிப்பு ஹம்பர்
4.1 பங்காளர் சேவைகள்
யூனியன் அஷ்யூரன்ஸ் கவனமாக தெரிவு செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களுடன் கைகோர்த்து, சில Platinum அனுகூலங்களை வழங்குகிறது. இந்த அனுகூலங்களை பெறுவதற்கான வசதியை நிறுவனம் வழங்கும் போதிலும், அந்த சேவைகளை நிறுவனம் நேரடியாக வழங்காது.
4.2 பங்காளர் பொறுப்பு
சேவை விநியோகம் மற்றும் சேவைத் தரங்கள் போன்றன உரிய பங்காளர்களினால் நிர்வகிக்கப்படும்.
4.3 வாடிக்கையாளர் உடன்படிக்கை
இந்த சேவைகளை பயன்படுத்துவதனூடாக, பங்காளரின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு காப்புறுதிதாரர் உடன்படுகிறார்.
4.4 தரவு இரகசியத்தன்மை
சகல தனிப்பட்ட தகவல்களும் யூனியன் அஷ்யூரன்ஸ் இரகசியத்தன்மை கொள்கையின் தனியுரிமைக் கொள்கை பிரகாரம் கையாளப்படும், இரகசியத்தன்மையை பேணுவதற்கான சமமான பொறுப்பை பங்காளர்களும் கொண்டிருப்பர்.
4.5 கடப்பாடு
மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களுடனான ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளை மாத்திரமே யூனியன் அஷ்யூரன்ஸ் மேற்கொள்ளும் என்பதுடன், அவ்வாறான சேவை வழங்குனர்களின் சேவை வெளிப்பாடுகள் அல்லது செயற்திறனுக்கான கடப்பாட்டை கொண்டிருக்காது.
4.6 வாடிக்கையாளர் உடன்பாடு
மூன்றாம் தரப்பு சேவைகளை பெற்றுக் கொள்கையில் அவற்றுடன் தொடர்புடைய இடர்களை அறிந்து ஏற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் உடன்படுவர்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) உரிமம் பெற்ற நிறுவனமாகும்.