இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்கும் நிறுவனமான Union Assurance அனுசரணையில் முன்வைக்கப்படும் “Circle of Well-being” நிகழ்ச்சித் திட்டத்தில் மற்றுமொரு நிகழ்ச்சி அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. இம்முறை நிகழ்ச்சியில், மக்கள் “அறிவார்ந்த வகையில் சொத்துகளை நிர்வகித்துக் கொள்வது எப்படி? என்பது தொடர்பில் மற்றும் “பொறுப்பு வாய்ந்த வகையில் கடன் பாவனையில் ஈடுபடும் முறை” மற்றும் முறையாக “தமது சொத்துக்களை நிர்வகித்துக் கொள்ளும் முறை” தொடர்பில் உரையாடப்பட்டிருந்தது. இந்த ஆக்கத்தில் மேற்படி அம்சங்கள் தொடர்பில் சட்டத்தரணி மஹிந்த பத்திரண அவர்களுடன் மேற்கொண்டிருந்த உரையாடலின் வெளிப்பாடு உள்வாங்கப்பட்டுள்ளது.

முறையான வழிமுறைகளை பின்பற்ற நபர் ஒருவருக்கு கடன் தொகையை பெற்றுக் கொடுப்பது
Iஏதேனும் அவசர நிலையில் நபர் ஒருவர் வாய் வார்த்தையால் கடனை உங்களிடம் கேட்டவுடன் நீங்கள் அவரை நம்பி கேட்ட கடன் தொகையை வழங்கக்கூடும். ஆனாலும் காலம் கடந்ததும், கடனைப் பெற்றுக் கொண்டவருக்கு பெற்றுக் கொண்ட கடன் தொகைகூட மறந்துவிடும். அதனால் உங்களுக்கு இழப்பு ஏற்படுகின்றது. இந்த இழப்பை குறைத்துக் கொள்வதற்கு, நீங்கள் பின்பற்ற வேண்டிய வேண்டிய வழிமுறைகள் சில சட்டத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன.

முதலில் நீங்கள் கடன் வழங்கும் நபருக்கு கடிதமொன்றை எழுத வேண்டும் என்பதுடன், அந்த கடிதத்தில் குறித்த நபர் கடன் பெற்றுக் கொள்ளும் தினம், கடனுக்கு பெற்றுக் கொண்ட தொகை, மீண்டும் கடனை திரும்பச் செலுத்த வேண்டிய தினம் ஆகிய காரணிகளை தெளிவாக குறிப்பிட்டு அதன் பிரதியை தம்வசம் வைத்துக் கொள்வதன் பின்னர் குறித்த தபாலை பதிவுத் தபாலினூடாக கடன் பெற்றவருக்கு அனுப்ப வேண்டும். தபாலில் அனுப்பிய பின்னர் தபால் நிலையத்தினால் உங்களுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டை நீங்கள் உங்கள் வசம் பேண வேண்டும்.

அதன் பின்னர் நீங்கள் பொலிசுக்கு சென்று இந்த கடன் வழங்கியமை தொடர்பில் முறைப்பாடொன்றை பதிவு செய்து, அதன் பிரதியை பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் வழங்கிய கடன் தொகை 05 இலட்சத்தை விட குறைவாயின், அதனை தீர்க்கும் நடவடிக்கையை பிணை தீர்க்கும் சபையினால் முன்னெடுக்கப்படும். பிரதேச செயலக அலுவலகத்தின் பிணை தீர்க்கும் அதிகாரியை சந்தித்து உங்களின் விடயத்தை தெளிவுபடுத்திய பின்னர் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து இந்த பிரச்சனையை பிணை தீர்க்கும் சபைக்கு முன்வைக்க முடியும்.

பிணை தீர்க்கும் சபையினால் இந்த விடயம் தொடர்பில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காவிடின், சபையினால் பிணக்கு தீர்க்கப்படாமையை குறிக்கும் சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழையும், மேலே தெரிவிக்கப்பட்ட சான்றிதழ்களின் பிரதிகளையும் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் பண வழக்காக தாக்கல் செய்து உங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் திருப்திப்படக்கூடிய தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் குறித்த வழங்கு கடன் பெற்ற நபருக்கு எதிராக தாக்கல் செய்வதை மேற்கொள்ள வேண்டியது, கடன் பெற்று மூன்று வருட காலப்பகுதியினுள்ளாகும்.

கடன் பெறுநர் மற்றும் கடன் வழங்குநரிடையே வாக்குறுதி குறிப்பு /எழுத்து மூல உடன்படிக்கை காணப்படுமிடத்து
இதன் போது நீங்கள் பொலிசில் முறைப்பாடு செய்து அதனை பிணக்கு தீர்க்கும் சபையினூடாக தீர்த்துக் கொள்ள வேண்டும். அல்லாவிடின், சட்டத்தரணி ஊடாக குறித்த நபருக்கு எதிராக பண வழக்கொன்றை நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குத் தாக்கலை இரு தரப்புக்குமிடையே ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் 06 வருட காலப்பகுதியினுள் மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இரு விசேட வழக்குகள் காணப்படுகின்றன.

  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிராக ராமதாஸ்
  • மேர்ச்சன்ட் வங்கிக்கு எதிராக புத்ததாஸ (இலங்கை)

போன்ற வழக்குகளினூடாக வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த இரு வழக்குகளின் விசேடத்துவம், குறித்த வழக்கு ஒப்பந்தங்கள் ஆரம்பமாகிய தினத்திலிருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகள் அன்றி, ஒப்பந்தம் மீறப்பட்ட தினத்திலிருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளாக இருப்பதாகும்.

தமது உடைமைகள் மற்றும் சொத்துகள் பற்றி குறிப்புகளை வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவம்
கடன் பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்தால், அந்தக் குடும்பத்தின் அங்கத்தவர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாவார்கள். அந்த நிலையை குறைக்கும் ஆற்றல் காணப்படுவதும் கடன் பெற்ற நபரிலாகும். தமது வாழ்க்கை எச்சந்தர்ப்பத்தில் தம்மை விட்டு நீங்கும் என்பதை எவராலும் தெரிவிக்க முடியாது என்பதாலாகும். அதனால், குடும்ப அங்கத்தவர்களுக்காக தமக்கு மேற்கொள்ளக்கூடிய சிறந்த முதலீடாக தமது வருமானம் மற்றும் செலவுகளை முறையாக ஆவணப்படுத்தி வைப்பதாகும்.

அதற்கு மேலதிகமாக, தமக்கு உரித்துடைய ஏதேனும் சொத்தாயின் அவை தொடர்பான ஆவணங்கள் காணப்படும் பகுதிகள், அந்த சொத்துகள் அடைமானம் வைத்திருந்தால் அவற்றின் விபரங்கள், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தாம் செலுத்த வேண்டியுள்ள பணத் தொகை போன்ற சகல விடயங்களையும் ஆவணப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டியதுடன், அவை தொடர்பில் உங்கள் குடும்ப அங்கத்தவர்களை முறையாக அறிந்திருக்கச் செய்வதையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் உங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள் மற்றும் தாம் இல்லாத சந்தர்ப்பத்தில் குடும்ப அங்கத்தவர்களுக்கு வங்கியுடன் தொடர்பை ஏற்படுத்தி அந்த பணத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறை தொடர்பிலும் உங்களால் அவர்களுக்கு அறிவூட்டி வைத்திருப்பது மிகவும் முக்கியமான காரணியாகும்.

அதனூடாக நீங்கள் இல்லாத காலத்தில் குடும்ப அங்கத்தவர்களுக்கு நீங்கள் பெற்றுக் கொண்ட கடன் தொகையை முறையாக நிர்வகிப்பதற்கு வாய்ப்பு இதனூடாக கிடைக்கும்.

ஒன்லைன் முறையினூடாக முன்னெடுக்கப்படும் கடன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் மோசடிகள்
நிலவும் பொருளாதார சூழலில் திடீர் நிதித் தேவை ஏற்பட்டவுடன், உடனடியாக பணம் கிடைக்கும் நிலைகளுக்கு மாறவே அனைவரும் விரும்புவர். அவ்வாறு நபர்கள் ஈடுபடும் முறைகளில் ஒன்லைன் முறைகளினூடாக மேற்கொள்ளப்படும் கடன் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பிடலாம். இந்த நிறுவனங்களினால் கிராமத்திலுள்ள வட்டிக்கு வழங்கும் முதலாளியின் பணி மேற்கொள்ளப்படுகின்றது.

நிலையான வட்டி வீதங்களை வெளிப்படுத்தாத இந்த நிதி நிறுவனங்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் வட்டி வீதங்களை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அதன் பிரகாரம் ஒன்லைன் முறையினூடாக கடன் பெற்றுக் கொள்வோருக்கு தாம் பெற்றுக் கொண்ட தொகைக்கு அதிகமான தொகையை வட்டியாக மீளச் செலுத்த நேரிடும்.

நீங்கள் ஒன்லைன் முறையினூடாக கடன் தொகையை பெறும் போது உங்களின் கையடக்க தொலைபேசிகளில் காணப்படும் தரவுகளினுள் பிரவேசிக்கும் வாய்ப்பையும் குறித்த நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளும். அதன் பின்னர் அவர்கள் உங்களுக்கும், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு நிலுவையிலுள்ள பணத்தை செலுத்துமாறு வலுக்கட்டாயமாக கோருவதை மேற்கொள்வர்.

மேலும், இவற்றில் எந்தவொரு நிறுவனமும் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை. அதனால், நீங்கள் அவர்களுக்கு செலுத்தும் பணம் தொடர்பாக எவ்விதமான பொறுப்பையும் அவர்களிடம் இருக்காது. இதன் காரணமாக ஒன்லைன் முறையினூடாக பண வைப்புச் செய்தலில் ஈடுபடுவோருக்கு நிதி மோசடிகளுக்கு ஆளாகி தமது பணத்தை இல்லாமல் செய்து கொள்வதாகும். அதனால் உடனடியாக பணத்தை வழங்குவதன் காரணமாக, அவற்றை பெற்றுக் கொள்வதற்கு அவசரப்படக்கூடாது.

இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் ( CRIB)
1990 இலக்கம் 18 ஐ கொண்ட கடன் தகவல் பணி சட்டத்தினூடாக நிறுவப்பட்டுள்ள இந்த பணியகத்தின் உரிமையை இலங்கை மத்திய வங்கி அடங்கலாக மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட வணிக மற்றும் வியாபார வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் போன்ற 70 க்கும் அதிகமான நிறுவனங்கள் கொண்டுள்ளன.

இதன் பிரதான பணியாக, தற்போது பதிவு செய்துள்ள கடன் பெறுநர் மற்றும் எதிர்கால கடன் பெறுநர்களின் தகவல்களை திரட்டி முறையாக அந்த தகவல்களை நிர்வகிப்பதாகும்.

நீங்கள் மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் கடன் தொகையை பெற்றுக் கொண்ட பின்னர் உங்களின் பெயர் மற்றும் உங்களுக்காக சாட்சி ஒப்பமிடும் நபர்கள் இருவரின் பெயர்கள் இந்த பணியகத்தில் பதிவு செய்யப்படுவதுடன், நீங்கள் பெற்றுக் கொள்ளும் கடன் முறையாக உங்களால் செலுத்தப்படுகின்றதா அல்லது செலுத்துவது இடைநிறுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் தேடியறிவது இந்த பணியகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. அதன் பின்னர் கடன் பெற்றுக் கொள்வதற்கு தகைமை வாய்ந்தவரா அற்றவரா என்பது தொடர்பில் மதிப்பை குறித்த நிறுவனங்களுக்கு வழங்குவதும் இந்த கொடு கடன் தகவல் பணியகத்தினாலாகும்.

நபர் ஒருவர் உயிரிழந்த பின்னர் அவரின் சொத்து பிரியும் முறை
இலங்கையில் நிலவும் பொது சட்டம், அதாவது ரோம் போர்த்துக்கேய சட்டத்துக்கு மேலதிகமாக பிரதேச சட்டங்கள் மூன்று நடைமுறையிலுள்ளன, அவையாவன,

  • மேல்நாட்டு சட்டம்
  • தேசவலாமை சட்டம்
  • முஸ்லிம் சட்டம்

இந்த சகல சட்டமும் நபர் ஒருவருக்கு சொத்துகள் கிடைக்கும் வழி, அது நுகரப்பட வேண்டிய வழி மற்றும் இறுதியில் அது முறையாக பிரிக்கப்பட வேண்டிய வழி தொடர்பில் குறிப்பிடுகின்றன.

பொது சட்டத்தின் 1876 சொத்துகள் உடைமை சரத்தின் கீழ், நபர் ஒருவர் உயிரிழந்த பின்னர் அவர்களின் அவர்களின் அசையும், அசையா சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டிய முறை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது சட்டத்தின் பிரகாரம் திருமணம் முடித்த ஒருவர் உயிரிழந்தால் அவரின் சொத்தில் சரி பாதி வாழ்க்கைத் துணைக்கு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், எஞ்சியிருப்பது அவரில் தங்கியிருக்கும் அங்கத்தவர்களுக்கு, அதாவது பெற்றோருக்கு, பிள்ளைகளுக்கு மற்றும் சகோதர சகோதரிகளுக்கு சரியாக பிரிக்கப்பட வேண்டும்.

மேல்நாட்டு சட்டத்தில் திருமண முறைகள் 02 ஐ அவதானிக்க முடியும். மணமுடித்து செல்லும் திருமணம் மற்றும் மணமுத்து கூடவே வாழும் திருமணம் என்பன அவையாகும். மணமுடித்து செல்லும் திருமணத்தில், வீட்டிலிருந்து வெளியேறும் மகளுக்கு தந்தையிடமிருந்து எவ்விதமான சொத்துக்கும் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது.

தேசவலாமை சட்டத்தில் நபர் ஒருவரின் சொத்து பிரிவடையும் முறைகள் பல தரப்பட்டுள்ளன. முஸ்லிம் சட்டத்தின் கீழ் தமது சொத்து பிள்ளைகளிடையே பிரிக்கப்படுவது 2 : 1 எனும் விகிதாசாரத்திலாகும். அதாவது, ஆண் பிள்ளைக்கு சொத்தில் அதிக பிரிவு கிடைக்கும்.

ஏதேனும் நபர் உயிரிழந்த பின்னர், அவரின் சொத்து குடும்ப அங்கத்தவர்களுக்கு சொந்தமாகாது. சொத்துகள் பிரிப்பை முறையாக சிக்கல்களின்றி மேற்கொள்வதற்காக மாவட்ட நீதிமன்றின் முன்பாக உயிலை சிக்கலற்றதாக்கிக் கொள்வதற்கு வழக்கு முன்னெடுக்கப்பட வேண்டும். பின்னர் பிரித்த சொத்து தொடர்பில் தகவலை மூன்று மொழியிலும் பத்திரிகை விளம்பரமாக பிரசுரிக்க வேண்டும்.

உயிரிழந்த நபரின் சொத்துக்களின் பெறுமதி 4 மில்லியனுக்கு அதிகமாயின், கண்டிப்பாக நீதிமன்றத்தில் உயில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட வேண்டும் என சிவில் வழக்கு ஒழுங்குபடுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சட்டத்தரணிகளாக, எம்மிடம் சமூகமளிக்கும் சகல சேவைபெறுநர்களுக்கும் வழங்கும் ஆலோசனையானது, 4 மில்லியனை விட குறைந்த சொத்துகளுக்கு சரியான முறையில் உயில் வழக்கொன்றை தாக்கல் செய்து, சொத்துகள் பிரிவதில் சிக்கல்களை தவிர்த்துக் கொள்வது அனைத்து தரப்பினருக்கும் உகந்தது என்பதாகும்.

தமது உயிலை சரியாக மாற்றுவது
உயில் என்பதனூடாக குறிப்பிடப்படுவது நபர் ஒருவர் தமது வாழ்நாள் முழுவதிலும் உழைத்து திரட்டிக் கொண்ட அசையும், அசையாச் சொத்துக்களாகும். இந்த சொத்துகள் எந்தவொரு நபரும் தாம் உயிரிழப்பதற்கு முன்னர் தமக்கு பிடித்தவர்களுக்கு அல்லது நிறுவனத்துக்கு, அல்லது அமைப்புக்கு மாற்ற முடியும்.

இந்த சொத்தை தாம் உயிர் வாழும் காலப்பகுதியில் அன்பளிப்பு உயிலினூடாக பிரிதொரு நபருக்கு அல்லது அமைப்புக்கு மாற்ற முடியும். அதன் போது உயிர் வாழும் காலப்பகுதில் அனுபவிப்பதற்கான உரித்தை தம் வசம் வைத்துக் கொண்டு அதனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனூடாக தமக்கு பிரிதொரு நாளில் இந்த உயிலை வேறொரு நபருக்கு மாற்ற வேண்டுமாயின், ஏற்கனவே காணப்படும் ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, மாற்றியளிக்கலாம்.

ஏதேனும் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உங்களின் உயிலை இரத்துச் செய்ய முடியாத அன்பளிப்பு உறுதியாக பிரிதொரு நபருக்கு மாற்றியளிக்க முடியும். ஆனாலும், நீங்கள் ஒப்படைக்கும் சொத்து தொடர்பில் ஏதேனும் சிக்கல் எழுந்தால் அந்த சொத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டி உங்களுக்கு ஏற்படும்.

தமது சொத்தை ஒப்படைப்பதில் மற்றுமொரு வழிமுறையாக, 1840 ஆம் ஆண்டு இல. 7 க்குரிய மோசடி தவிர்ப்பு சரத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இறுதி விருப்பு பத்திரத்தினூடாக சொத்தை வழங்குவதாகும். இறுதி விருப்பு பத்திரத்தை எழுதுவதற்காக 18 வயது பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அந்நபர் இறுதி விருப்பு பத்திரத்தை எழுதுகையில் சுயநினைவில் இருத்தல் வேண்டும்.

இறுதி விருப்பு பத்திரத்தை எழுதுவதை இரு முறைகளில் மேற்கொள்ளலாம்,

  1. சட்டத்தரணி முன்பாக இரு சாட்சியாளர்கள் ஒப்பமிடுவதனூடா.
  2. தமது விருப்பத்துக்கமைய இறுதி விருப்ப பத்திரத்தை எழுதி அதனை சாட்சியாளர்கள் ஐவர் கையொப்பமிடுவதாகும்

இவ்வாறு நீங்கள் எதிர்காலத்தில் எழுதவுள்ள இறுதி விருப்பு பத்திரத்தில், காலப்போக்கில் ஏதேனும் புதிய சொத்தொன்றை இணைக்க வேண்டுமாயின், இணைப்பொன்றை மேற்கொள்வதனூடாக அதனை முன்னெடுக்கலாம். இது “கொடிசில் பத்திரம்” என அழைக்கப்படும்.

Share on