YouTube கலந்துரையாடல் நிகழ்ச்சியான யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் “Circle of Well-being by Union Assurance” இல், முன்னணி போஷாக்கு ஆலோசகர் மற்றும் வாழ்க்கைமுறை வைத்திய செயற்பாட்டாளரான வைத்தியர. ராயிதா டேனியல் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்திருந்தார். நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்துவதில் போஷாக்கின் முக்கியத்துவம் என்பது தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது பேசப்பட்டிருந்ததுடன், நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிராக எமது உடலினால் போராடுவதற்கு முறையான உணவுப் பழக்கங்கள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் என்பது தொடர்பில் பெறுமதி வாய்ந்த தகவல்களை பகிர்ந்திருந்தார். கலந்துரையாடலின் சில முக்கியமான அம்சங்கள் வருமாறு.

நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு கட்டமைப்பை வலிமைப்படுத்துவதில் போஷாக்கு எவ்வாறான பங்களிப்பை வழங்குகின்றது?
உடலின் பாதுகாப்பு கட்டமைப்பான – நோய் எதிர்ப்பு கட்டமைப்பை வலிமைப்படுத்துவதில் போஷாக்கு மிகவும் முக்கியமானதாகும். நோய்கள் மற்றும் தொற்றுகளிலிருந்து எம்மைப் பாதுகாக்கும் இராணுவத்தைப் போன்று இது செயலாற்றுகின்றது. எந்தவொரு இராணுவத்தைப் போன்றே, எமது நோய் எதிர்ப்பு கட்டமைப்பும் சீராக இயங்குவதற்கு முறையாக போஷாக்களிக்கப்பட வேண்டும். போஷாக்கு நிறைந்த உணவு மற்றும் சமபல உணவு வேளைகளினூடாக இதனை எய்த முடியும்.

உதாரணமாக, விற்றமின் A மற்றும் C போன்றவற்றுடன் புரதம் போன்ற போஷாக்கு குறைபாட்டினால் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு பெரிதும் வலுவிழக்கலாம். நோய் எதிர்ப்பு கட்டமைப்பின் தோற்றுவிக்கும் காரணியாக புரதம் அமைந்துள்ளது. அதில்லாமல், உறுதியான நோய் எதிர்ப்பை கொண்டிருப்பதில்லை. எனவே, நாம் நோய்வாய்ப்படும் வரையில் போஷாக்கான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதற்கு காத்திராமல், எப்போதும் பின்பற்றுவது முக்கியமானதாகும். மாறாக, நோய்வாய்ப்பட முன்னரும், பின்னரும் சமபல உணவுப் பழக்க முறையை பேணுவதனூடாக, எமது நோய் எதிர்ப்பு கட்டமைப்பை எம்மால் உறுதியாக பேணக்கூடியதாக இருக்கும்.

வலிமையான நோய் எதிர்ப்பு கட்டமைப்பில் சமபல உணவு வேளையை உட்கொள்வது எவ்வாறு பங்களிப்பு வழங்குகின்றது?
நீங்கள் பெரும்பாலும் “eat the rainbow” அல்லது “PCF balanced meal” போன்ற கருத்துகளை கேள்வியுற்றிருக்கலாம். ஆனாலும், அவற்றின் அர்த்தம் என்ன? முக்கியமாக, அவற்றினால் குறிப்பிடப்படுவதுடன், புரதம், காபோவைதரேற்று, ஆரோக்கியமான கொழுப்பு (PCF) மற்றும் மரக்கறி வகைகளை ஒவ்வொரு உணவு வேளையிலும் சேர்த்துக் கொள்வது என்பதாகும். ஏனெனில், நோய் எதிர்ப்பு கட்டமைப்புக்கு ஆதரவளிப்பதில் ஒவ்வொரு உணவு வகையும் பிரத்தியேக பங்கினை கொண்டிருக்கும். அத்துடன், வெவ்வேறு வர்ணங்களிலமைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ளும் போது, பெருமளவு போஷாக்குடன், சமபல ஆகாரத்தை நீங்கள் பெறுகின்றீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

புரதத்தினால் நோய் எதிர்ப்பு கலன்கள் மற்றும் பிறபொருளெதிரிகள் (antibodies) உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கப்படுகின்றது. ஆரோக்கியமான கொழுப்புகளான ஒமெகா போன்றவற்றினூடாக, குடல் அழற்சியை தடுத்து, ஆரோக்கியத்தை தூண்டும் தன்மை காணப்படுகின்றது. மரக்கறிகளினால் விற்றமின் A, C, D மற்றும் E போன்ற அத்தியாவசிய விற்றமின்கள் உடலுக்கு கிடைப்பதுடன், இவை நோய் எதிர்ப்பு கட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் வெவ்வேறு பங்களிப்புகளை வழங்குகின்றன. உதாரணமாக, விற்றமின் A இனால் எமது உடலின் சீதமென்சவ்வு வலிமைப்படுத்தப்படுவதுடன் (சருமத்தின் சுகாதாரத்துக்கு இது மிகவும் முக்கியமானதாகும்), விற்றமின் D என்பது, தொற்றினால் பாதிக்கப்படும் போது நோய் எதிர்ப்பை வெளிப்படுத்த முக்கியமானதாகும். நாகம், இரும்பு மற்றும் செலனியம் போன்ற தாதுப்பொருட்களும், ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கொண்டிருப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதில் பங்களிப்பு வழங்கும் உணவுகள் எவை?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எனும் போது, பலர் சிந்திப்பது ஒன்று அல்லது இரண்டு விசேட உணவு வகைகளைப் பற்றி மாத்திரமாகும். எவ்வாறாயினும், ஒரு சில உணவு வகைகளைப் பொறுத்தது மட்டுமல்ல. பரந்தளவு போஷாக்கு நிறைந்த உணவுகளாகும். எமது இலங்கையின் உணவு வகைகளை எடுத்துக் கொண்டால், பாரம்பரிய அரிசிச் சோறு மற்றும் கறிகளைக் கொண்ட உணவு வகையை குறிப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சமபலமான போஷாக்கு நிறைந்த உணவு வகையாக குறிப்பிடலாம்.

விற்றமின் C ஐ எடுத்துக் கொண்டால், ஒரேன்ஜ் மற்றும் எலுமிச்சை போன்ற புளிப்பு பழங்களில் இது அதிகமாக இருப்பதாக பலர் கருதிய போதிலும், ஏனைய நெல்லி மற்றும் கீரை வகைகளிலும் இது அடங்கியுள்ளது.

எமது உணவு வகைகளில் தாவர போஷாக்கு என்பது மூலிகைகள் மற்றும் வாசனைத் திரவியங்களில் அதிகம் காணப்படுகின்றன. இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சள் போன்றன அடங்கிய உணவு வகைகளில் இவை அதிகம் அடங்கியுள்ளன.

எமது உடலில் நோய் தடுப்பை ஊக்குவிப்பதில் ஆன்ரிஒக்சிடன்ட் மற்றும் அழற்சியை ஏற்படுத்தாத உணவுகள் போன்றனவும் முக்கியமாகின்றன. உதாரணமாக, ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள், குடல் அழற்சியை தணிப்பதில் முக்கிய பங்காற்றுவதுடன், எமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்குகின்றன. இதனை சிறிய, கொழுப்பு மீன் வகைகளான கீரிமீன் (spotted sardinella), நெத்திலி (anchovy) மற்றும் சாலை மீன் (gold-striped sardinella) போன்றவற்றில் அடங்கியுள்ளது. அவித்த பயறு போன்ற தானியங்களும் முக்கியமான போஷாக்கு நிறைந்த உணவுகளாகும். எனவே, எமது உள்நாட்டு உணவில் போதியளவு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் அம்சங்கள் அடங்கியுள்ளதுடன், அவற்றை நுகர்வதில் நாம் கவனம் செலுத்தலாம்.

குடல் சுகாதாரம் என்பது எவ்வாறு நோய் எதிர்ப்பு கட்டமைப்புடன் தொடர்பைக் கொண்டுள்ளது?
குடல் சுகாதாரம் மற்றும் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு என்பன நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளன. நோய் எதிர்ப்பு கட்டமைப்பின் 70% ஆன அங்கங்கள் குடலில் காணப்படுகின்றன. குறிப்பாக நாம் அந்தப் பகுதியை GALT அல்லது Gut-Associated Lymphoid Tissue என அழைக்கின்றோம்.

எமது குடலில் காணப்படும் ஆரோக்கியமான பக்டீரியாவினால், வலிமையான நோய் எதிர்ப்பு கட்டமைப்பை பேணுவதற்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது. இந்த பக்டீரியாவினால் குறுஞ் சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன், இவை அழற்சியை தடுக்கும் திறன் கொண்டவை. குருதிக் கட்டமைப்பினுள் பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகள் பிரவேசிப்பதை தடுக்கும் தடையை ஏற்படுத்துகின்றது.

ஆரோக்கியமான குடலைக் கொண்டிருப்பதற்கு, நார்பொருட்கள் செறிந்த உணவு வகைகளான பழங்கள், மரக்கறிகள் மற்றும் முழுத் தானியங்கள் போன்றவற்றை உட்கொள்வது முக்கியமானதாகும். தயிர் மற்றும் யோகட் போன்ற ப்ரோபயோட்டிக் உணவுகள் இந்த நல்ல பக்டீரியாவை தூண்டுகின்றன. ஆரோக்கியமான குடல் என்பது, எமது நோய் எதிர்ப்பு கட்டமைப்பின் வலிமையில் நேரடியான தாக்கத்தை கொண்டுள்ளன. எனவே அதனை பராமரிப்பது முக்கியமானதாகும்.

நோய் எதிர்ப்பு கட்டமைப்பை வலுவிழக்கச் செய்யும் ஏதேனும் உணவுப் பழக்கங்கள் உள்ளனவா?
துரதிர்ஷ்டவசமாக ஆம். அளவுக்கதிகமான சர்க்கரை உள்ளெடுப்பு என்பது பிரதான பிரச்சனையாகும். இன்றைய சூழலில் இதனை சாதாரணமாக காண முடிகின்றது. அதிகளவு சர்க்கரை உள்ளெடுப்பினால், வெண்குருதிக் கலன்களுக்கு நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடக்கூடிய ஆற்றல் குறைக்கப்படுகின்றது. இதனால் தொற்றுக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. பதப்படுத்திய உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் போன்றனவும் நோய் தொற்றை அதிகரிக்கச் செய்வதுடன், தொற்றுக்களுக்கு எதிராக போராடக்கூடிய உடலின் ஆற்றலை குறைக்கும்.

அளவுக்கதிகமான அற்ககோல் உள்ளெடுப்பும் மற்றுமொரு பிரச்சனையாகும். குறைந்தளவு நார் பொருட்கள் உள்ளெடுப்பு மற்றும் அளவுக்கதிகமான உடற்பருமன் போன்றனவும் பிரச்சனையாகும். இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை எதிர்மறையாக தாக்கக்கூடியன. உடலுறுப்புக்குரிய கொழுப்பு – அங்கங்களை சூழ காணப்படும் கொழுப்பாக அமைந்திருப்பதுடன், இதனால் அழற்சி ஏற்படுவது அதிகரித்து, இலகுவில் நோய்வாய்ப்படக்கூடிய நிலையை ஏற்படுத்தும். அத்துடன், போதியவு நீர்த்தன்மை அடங்கிய ஆகாரங்களை உள்ளெடுக்காமை மற்றுமொரு பிரச்சனையாகும். குறிப்பாக, எமது வெப்பமான காலநிலையில் இது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டும். போதியளவு நீர்ச்சத்தினால் எமது சுவாசத் தொகுதி மற்றும் குடல்தொகுதியில் சீதச்சவ்வுகளை பேணப்படுகின்றது. கிருமிகளுக்கு எதிராக முதல்கட்டமாக செயற்படும் அங்கமாக இந்த சீதச் சவ்வுகள் அமைந்துள்ளன.

நோய்களுக்கு எதிராக போராடுவதற்கு உடலில் மந்த போஷாக்கு எவ்வாறான தாக்கத்தை கொண்டிருக்கும்?
நோய் எதிர்ப்பு கட்டமைப்பில் பாரதூரமான மற்றும் ஆழமான தாக்கத்தை கொண்டிருக்கும். புரத மந்தபோஷாக்கினால், நோய் எதிர்ப்பு கலன்கள், பிறபொருள்எதிரிகள் மற்றும் நிணநீர் உறுப்புகள் போன்றவற்றின் உற்பத்தில் பாதிப்பு ஏற்படும். இவை வலிமையான நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கொண்டிருக்க அத்தியாவசியமானவையாகும். இதனால் தொற்றுகளுக்கு இலகுவில் ஆளாகும் நிலையும், அதிகளவு குணமடையும் காலமும் உடலுக்கு தேவைப்படும்.

விற்றமின் A மற்றும் C போன்றன நுண்போஷாக்கு குறைபாடுகளினால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உதாரணமாக, எமது குடல் மற்றும் சுவாசத் தொகுதியை தொற்றுக்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் சீதமென்சவ்வு தடைகளை பேணுவதில் விற்றமின் A முக்கிய பங்காற்றுகின்றது. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த போஷாக்குகள் எமக்கு போதியளவு கிடைக்காத நிலையில், எமது நோய் எதிர்ப்பு கட்டமைப்பு வலுவிழந்து, நோய்களுக்கு எதிராக போராடும் தன்மை உடலில் குறையும்.

முடிவு
இந்த கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய, உறுதியான நோய் எதிர்ப்பு கட்டமைப்பை பேணுவது என்பது ஒன்று அல்லது இரண்டு சுப்பர் உணவுகளில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை, மாறாக பரிபூரணமான உணவை உண்ணும் முறையில் தங்கியுள்ளது. உள்நாட்டில் பெறப்பட்ட போஷாக்கு நிறைந்த உணவு வகைகளை உண்பதாலும், ஆரோக்கியமான உணவு பழக்க முறைகளை பின்தொடர்வதாலும், எமது உடலின் இயற்கை நோய் எதிர்ப்பு சக்திக்கு வினைத்திறனான முறையில் ஆதரவளிக்க முடியும்.

பிரதான கற்றுக் கொண்ட விடயம்? போஷாக்கு என்பது நோயை தவிர்ப்பது என்பது மட்டுமல்ல – ஒட்டுமொத்த நலனை ஊக்குவிப்பது என்பதாகும். எனவே, இன்றே சிறிய உணவு மாற்றங்களை ஏற்படுத்தி ஆரம்பித்து, உங்கள் உணவுத் தட்டில் அதிகம் வர்ணங்களிலான உணவு வகைகளை சேருங்கள். பதப்படுத்திய உணவுகளை விட பரிபூரண உணவுகளை தெரிவு செய்வதுடன், நீர்த்தன்மையுடன் திகழ்வதற்கு முன்னுரிமையளியுங்கள். இன்று உட்கொள்ளும் சமபல ஆகாரம் என்பது, ஆரோக்கியமான நாளைக்கான அடித்தளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Share on