பல பெற்றோருக்கு, தங்களது பிள்ளையின் கல்வி என்பது, அவர்கள் மேற்கொள்ளும் மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்றாகும். பாடசாலைக் கட்டணங்களுக்கான நிதி உதவி, உள்ளூர் பல்கலைக்கழகக் கல்வியை ஆதரித்தல் அல்லது பிள்ளைகள் வெளிநாட்டில் உயர்கல்வியைத் தொடர உதவுவது என எதுவாக இருப்பினும், கல்விக்கான செலவு எதிர்பார்த்ததை விட வேகமாகவும் தொடர்ச்சியாகவும் அதிகரித்து வண்ணமுள்ளது.
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்குச் சாத்தியமான சிறந்த வாய்ப்புகளை வழங்க விரும்பினாலும், அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கு நல்எண்ணங்களை விட அதிகமான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. அதற்குத் தீர்க்கமான திட்டமிடல் அவசியமாகிறது.
காத்திருப்பதால் ஏற்படும் அசல் செலவு
இன்று ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கும் ஒரு பிள்ளை, பல்கலைக்கழகத்தில் பிரவேசிப்பதற்கு இன்னும் ஒரு தசாப்தம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் ஆகலாம். இருப்பினும், கற்பித்தல் கட்டணங்கள், தங்குமிடச் செலவுகள், கற்றல் உபகரணங்கள், தொழினுட்பத் தேவைகள் மற்றும் வெளிநாட்டுக் கல்விக்கான நாணய மாற்று விகித இறக்க இறக்கங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் போன்ற காரணிகளால் உயர்கல்விக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இன்று சுலபமாகத் தோன்றக்கூடிய விஷயம், எதிர்காலத்தில் ஒரு பெரிய நிதிப் பொறுப்பாக மாறக்கூடும். பெற்றோர் எவ்வளவு விரைவாகத் திட்டமிடத் தொடங்குகிறார்களோ, அவ்வளவுக்கு அதிகமாகத் தங்கள் பிள்ளைகளுக்கான பிரத்தியேகக் கல்விக் நிதியத்தை உருவாக்குவதற்கும், எதிர்காலச் செலவுகளை அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கும் போதிய அவகாசம் கிடைக்கும்.
கல்விக்கான திட்டமிடல் என்பது, சேமிப்பு என்பதற்கு அப்பாற்பட்டது
பல குடும்பங்கள் வழக்கமான சேமிப்பு மூலம் கல்விக்காக பிரத்தியேகமாகப் பணத்தை ஒதுக்குகின்றன. இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், கல்வித் திட்டமிடலுக்கு பெரும்பாலும் இதைவிட விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது.
வாழ்க்கை நிச்சயமற்றது. வருமானத்தில் ஏற்படும் மாற்றம், எதிர்பாராத நோய் அல்லது பெற்றோரின் இழப்பு போன்றவை பிள்ளையின் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான குடும்பத்தின் திறனைப் பாதிக்கக்கூடும். இதனால், பல பெற்றோர் சேமிப்பையும் நிதிப் பாதுகாப்பையும் ஒன்றிணைக்கும் தீர்வுகளை நோக்கி அதிகளவில் ஈர்க்கப்படுகின்றனர்.
வெறுமனே ஒரு நிதியத்தைச் சேகரிப்பது மட்டும் இதன் நோக்கம் அல்ல; மாறாக, வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்கும் தருணங்களிலும், ஒரு பிள்ளையின் கல்விப் பயணம் எவ்விதத் தடையுமின்றித் தொடர்வதை உறுதிசெய்ய உதவுவது இதன் பிரதான நோக்கமாகும்.
மாறுபட்ட கல்வி இலக்குகளுக்கு திட்டமிடல்
தமது பிள்ளையின் எதிர்காலம் தொடர்பில் ஒவ்வொரு குடும்பமும் மாறுபட்ட நோக்கை கொண்டுள்ளன.
சிலருக்கு, இடைநிலைக் கல்வி மற்றும் மேலதிக வகுப்புக் கட்டணங்களை ஈடுசெய்வது இலக்காக இருக்கலாம். வேறு சிலருக்கு, ஒரு தொழில்சார் தகுதி, உள்ளூர் தனியார் பல்கலைக்கழகப் பட்டம் அல்லது வெளிநாட்டுக் கல்வியை முன்னெடுப்பதற்கு ஆதரவளிப்பதாக அது அமையலாம்.
ஒரு கட்டமைக்கப்பட்ட கல்வித் திட்டத்தைக் கொண்டிருப்பது, பெற்றோர் இந்த இலக்குகளிலிருந்து பின்னோக்கிச் சிந்தித்து செயலாற்றவும், எதிர்காலச் செலவுகளைக் கணக்கிடவும், அத்துடன் தங்களது காலக்கெடு மற்றும் நிதியாதாரத்திற்கு ஏற்றவாறான ஒரு நிதி மூலோபாயத்தை உருவாக்கவும் வழிவகுக்கிறது.
உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தீர்வு
ஒவ்வொரு பிள்ளையினதும் கல்விப் பயணம் என்பது தனித்துவமானது என்பதை யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாம் நன்கறிவோம். பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி அல்லது வெளிநாட்டுக் கல்வி என நீங்கள் எதற்குத் திட்டமிட்ட போதிலும், உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்காக ஒரு வலுவான நிதி அடித்தளத்தை அமைப்பதற்கு உங்களுக்கு உதவும் வகையில் எமது தீர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தங்களது நிதி முன்னுரிமைகள் மாற்றமடையும் போது, அதற்கு ஏற்ப அதிக நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்க்கும் பெற்றோருக்கு, Union Assurance FlexLife திட்டம், வெவ்வேறு வாழ்க்கை இலக்குகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வதுடன், நீண்டகால நிதிப் பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு பிரத்தியேகமாக மாற்றியமைக்கக்கூடிய அணுகுமுறையையும் வழங்குகிறது.
உரையாடலுடன் ஆரம்பியுங்கள்
கல்வி என்பது, அதற்கான நன்மைகள் வெறும் நிதிச் சார்ந்த பலன்களாக மட்டுமன்றி, வாய்ப்புகளாகவும், தன்னம்பிக்கையாகவும், ஒரு பிள்ளை தனக்கென உருவாக்கிக் கொள்ளும் பிரகாசமான எதிர்காலமாகவும் அளவிடப்படும் ஒரு சில முதலீடுகளில் ஒன்றாகும்.
வரவிருக்கும் ஆண்டுகளில் கல்வியின் செலவுகள் அதிகரிக்குமா என்பது கேள்வியல்ல; மாறாக, இன்றைய திட்டமிடல்கள் நாளைய எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்துள்ளனவா என்பதே பிரதானமான கேள்வியாகும்.
ஏனெனில், ஒவ்வொரு பிள்ளையும் பெரிய கனவுகளைக் காண்பதற்கான தன்னம்பிக்கையையும், காலம் வரும்போது அக்கனவுகளை நனவாக்கப் பின்தொடர்வதற்கான நிதி ஆதரவையும் பெறுவதற்கு முழுத்தகுதியும் கொண்டவர்களாவர்.