பலர் தமது ஆயுள் காப்புறுதியை பெற்றுக் கொண்டதும் நிம்மதியாக உணர்வார்கள். தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, கட்டுப்பணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குடும்பத்திற்கான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பலராலும் பரிசீலிக்கப்படாமல் போகும் விடயம், அந்தப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தக்கூடிய மற்றும் உங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் அதை எவ்வாறு மிகவும் பொருத்தமானதாக மாற்றக்கூடிய மேலதிக காப்பீடுகள் ஆகும்.

காப்புறுதி இணைந்த காப்பீடுகள் என்பது வெறும் மேலதிக இணைப்புகள் மட்டுமல்ல. உங்களின் காப்புறுதியின் உள்ளம்சத்தை நீடிக்கக்கூடிய, பரந்தளவு சூழ்நிலைகளில் உதவக்கூடிய மேம்படுத்தல்களாக அவை அமைந்துள்ளன. முதலில் சரியான காப்பீட்டுத் திட்டத்தைத் தெரிவு செய்வது எந்தளவு முக்கியமானது, அந்தளவிற்கு உங்களின் காப்புறுதித் திட்டத்தின்கீழ் கிடைக்கும் மேலதிக காப்பீடுகளைப் பற்றி புரிந்துகொள்வதும் மிக முக்கியமாகும்.

உங்களின் வாழ்க்கைக்கு பொருந்தக்கூடிய வகையில் காப்பீட்டை மாற்றியமைத்தல்

மேலதிக காப்புறுதிகள் என்று அழைக்கப்படும் மேலதிக காப்பீட்டு இணைப்பு என்பது, ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் வழங்கும் பாதுகாப்பை அதிகரிக்க அல்லது விரிவாக்க அதனுடன் சேர்க்கப்படக்கூடிய ஒரு விருப்பத்திற்குரிய அம்சமாகும். உங்களின் தனிப்பட்ட தேவைகள், சூழ்நிலைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு சிறப்பான முறையில் பொருந்தும் வகையில் உங்களது காப்பீட்டுப் பாதுகாப்பைத் தயாரித்துக் கொள்வதற்கான ஒரு வழியாக இந்த மேலதிக காப்பீடுகளைக் கருதலாம். சில மேலதிக காப்பீடுகள் காப்பீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலவசமாகவே சேர்க்கப்படலாம். அதேவேளை மற்றவை கூடுதல் கட்டணத்தில் கிடைக்கப்பெறலாம்.

கிடைக்கக்கூடிய மேலதிக நன்மைகள் (riders) காப்பீட்டு நிறுவனம் மற்றும் திட்டத்தைப் பொறுத்து வேறுபடும். இருப்பினும், அவை பொதுவாகக் கடுமையான நோய், அங்கவீனம் அல்லது காலப்போக்கில் ஏற்படும் உங்கள் நிதிப் பொறுப்புகளின் மாற்றங்கள் போன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கூடுதல் ஆதரவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அதன்கீழ் கிடைக்கக்கூடிய விருப்பத்திற்குரிய மேலதிக அம்சங்களை ஆராய்வதும், அவை உங்களின் தேவைகளுடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் புரிந்துகொள்வதும் மிகவும் பயனுள்ளது. உங்களுக்கு மிகப்பொருத்தமான காப்பீட்டு சேர்க்கையானது உங்களின் வாழ்க்கைக் கட்டம், நிதிப் பொறுப்புகள், செலுத்தும் திறன், உங்களுக்குத் தேவையான பாதுகாப்பின் அளவு மற்றும் நீண்டகால இலக்குகள் போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும்.

ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது எப்போதும் “அனைவருக்கும் ஏற்ற ஒரே மாதிரியான தீர்வாக” அமைந்திருக்கக்கூடாது. உங்களுக்குக் கிடைக்கக்கூடிய கூடுதல் வாய்ப்புகளையும் தெரிவுகளையும் புரிந்துகொள்வதற்கு நேரத்தைச் செலவிடுவது, உங்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாறினாலும் உங்களது காப்பீட்டுப் பாதுகாப்பு, உங்களுக்கும் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கும் தொடர்ந்து பக்கபலமாக இருப்பதை உறுதிசெய்ய உதவும்.

மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ஆயுள் காப்புறுதித் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா?

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில், ஒவ்வொரு தனிநபரின் நிதி முன்னுரிமைகளும் பாதுகாப்புத் தேவைகளும் வெவ்வேறானவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான், உங்களுக்கு மிகவும் முக்கியமானவற்றைப் பாதுகாக்க உதவுவதுடன், உங்களின் தனித்துவமான இலக்குகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றிமைக்கக்கூடிய தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்

Union Assurance FlexLife என்பது, இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களின் தேவைகளுக்கேற்ப பொருந்தக் கூடிய வகையில் நிதித் திட்டமிடக்கூடிய சுதந்திரத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. ஏனெனில் உங்களின் முன்னேற்றப் பயணம்என்பது, உங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட தீர்வைக் கொண்டிருக்க வேண்டும்.

உசாத்துணைகள்

  1. Insurance By Heroes. “Life Insurance Policy Provisions: What’s Included.” April 2026. insurancebyheroes.com
  2. Insurance By Heroes. “Term Life Insurance Riders Explained: 2026 Guide.” February 2026. insurancebyheroes.com