இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், அண்மையில் தனது LIMRA விருதுகள் வழங்கும் நிகழ்வை தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அதில், கடந்த ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த விற்பனை நிபுணர்களை கௌரவித்திருந்தது.
LIMRA விருதுகள், உற்பத்தித்திறன், காப்புறுதிப்பத்திரத்தின் தரம் மற்றும் பிரீமியம் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விற்பனை நிபுணர்களை மதிப்பிடும் ஒரு சர்வதேச ரீதியில் நிறுவப்பட்ட கட்டமைப்பாகும். இந்த அளவுகோல்கள் வெறும் விற்பனை அளவைத் தாண்டி, ஆலோசகர்கள் தங்களது காப்புறுதிதாரர்களுக்கு வழங்கும் நீடித்த பெறுமதியை அளவிடுகின்றன. இந்த ஆண்டின் விருது வழங்கும் விழாவில் மூன்று விருதுப் பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். உற்பத்தித்திறனுக்கான சர்வதேச விருது (IAP) வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகிய நிலைகளின் கீழ் 60 இற்கும் மேற்பட்ட வெற்றியாளர்களை அங்கீகரித்துள்ளதுடன், இதில் பிளாட்டினம் மிக உயர்ந்த சாதனை அளவைப் பிரதிபலிக்கிறது. இந்தத் தகைமைகள், உண்மையிலேயே மிக முக்கியமானவற்றைப் பாதுகாக்கும் ஒரு நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது என்ற அதன் நன்மதிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, யூனியன் அஷ்யூரன்ஸ் தனது ‘லிம்ரா விருதுக்கான உந்துதல் – 2026’ ஆரம்பித்துள்ளது. இது இப்பயணத்தின் ஊடாக தொழில்ரீதியாக வளர்ச்சியடையும் ஆலோசகர்கள் முதல், உயர்தரப் பராமரிப்பின் மூலம் பயனடையும் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் வெற்றியால் வலுவடையும் நிறுவனம் வரை அனைத்து பங்குதாரர்களுக்கும் பெறுமதியை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த உந்துதலானது திறன் மேம்பாடு, தேவைகளை அடிப்படையாகக் கொண்ட விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நடைமுறைகள் ஆகியவற்றிற்குப் புதிய முக்கியத்துவத்தை அளிப்பதுடன்; ஆலோசகர்கள் நீடித்த நிபுணத்துவத்தைக் கட்டியெழுப்பவும், தங்களது தொழில் வாழ்க்கையை மேம்படுத்தவும், அதேவேளையில் தாங்கள் சேவை செய்யும் காப்புறுதிதாரர்களுக்கு அர்த்தமுள்ள பலன்களை வழங்கவும் அவர்களுக்கு அதிகாரமளிக்கின்றது.
நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம முகவர் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃப் கருத்துத் தெரிவிக்கையில், “LIMRA விருதுகளினால் எமது ஆலோசகர்களின் திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிபுணத்துவம் மற்றும் ஒழுக்கம் போன்றன உயர்மட்ட நியதிகளுக்கமைய பேணப்படுகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எமது விற்பனை செயலணியின் வலிமை மற்றும் நிறுவனம் எனும் வகையில் நாம் பேணும் ஆலோசனை சேவைகளின் தரம் ஆகியவற்றை இந்த விருது பிரதிபலிக்கிறது. இன்றைய தினம் கௌரவிப்பைப் பெற்றவர்களை நாம் கொண்டாடுவதுடன், எமது நிலையை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் நாம் உறுதியாக கவனம் செலுத்துகிறோம். 2026 செயற்பாடுகளினூடாக எமது ஊழியர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், இந்த இலக்குகளை நோக்கி பயணிக்கவும் வாய்ப்பை வழங்குவதுடன், அவர்களுக்கு முழுமையான ஆதரவை நாம் வழங்குகிறோம்.” என்றார்.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2026 மார்ச் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 40.6 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 96.2 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.