இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், சம்பத் வங்கி Life Leads வருடாந்த விருதுகள் 2025 நிகழ்வை கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் முன்னெடுத்தது. இதில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் சம்பத் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் வங்கியின் நாடளாவிய கிளை வலையமைப்பைச் சேர்ந்த ஊழியர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது, தினசரி வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளில் ஈடுபட்டு, அதனூடாக இரு நிறுவனங்களினதும் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கியிருந்த கிளை ஊழியர்களின் பங்களிப்புகள் கௌரவிக்கப்பட்டிருந்தன.

பகிரப்பட்ட நோக்கின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் சம்பத் வங்கி இடையிலான பங்காண்மையினூடாக, இலங்கை முழுவதிலும் காணப்படும் பரந்த வங்கிக் கிளை வலையமைப்பினூடாக, ஆயுள் காப்புறுதித் தீர்வுகளின் அணுகல் தொடர்ந்து விரிவாக்கப்பட்டுள்ளது. The Life Leads வருடாந்த விருதுகள் என்பது பாங்கசூரன்ஸ் பங்காண்மை நாட்காட்டியில் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்திருப்பதுடன், பங்காண்மையின் தொடர்ச்சியான வெற்றிகரமான செயற்பாட்டிற்கு காரணமாக அமைந்திருக்கும் தனிநபர்களை கௌரவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இவ்விருதுகள் பல்வேறு வினைத்திறன் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டிருந்ததுடன், வலையமைப்பைச் சேர்ந்த சிறப்பாக செயலாற்றும் சம்பத் வங்கி ஊழியர்களை கௌரவிக்கும் வகையிலும் அமைந்திருந்தது. கௌரவிப்புகளில் சிறந்த அறிமுகப்படுத்துனர், சிறந்த கிளை, சிறந்த பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் சிறந்த பிரதம முகாமையாளர் போன்ற விருதுகள், ஆயுள் தலைமைத்துவ பிரிவின் முழு அங்கங்களினுடைய சிறப்பை வெளிப்படுத்தி வழங்கப்பட்டிருந்தது. Top Life Leads Champion மற்றும் National Level Top Achiever ஆகிய விசேட விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன.

வெற்றியீட்டியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பங்காண்மை விநியோக அதிகாரி வத்சலா அளுத்கெதர கருத்துத் தெரிவிக்கையில், “ஆயுள் காப்புறுதிக்கான அணுகலை மேம்படுத்துவதில் பாங்கசூரன்ஸ் முக்கிய பங்காற்றுகிறது. சம்பத் வங்கியுடனான எமது பங்காண்மை இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் மையப்பகுதியாக அமைந்திருப்பதுடன், இலங்கையர்களுக்கு முக்கியமானதை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. இதனை தினமும் சாத்தியப்படுத்தும் கிளை ஊழியர்களை கௌரவிப்பது என்பது வெறும் வைபவம் மட்டுமல்ல. நோக்குடன் தொடர்ச்சியாக சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் பிரிவை கட்டியெழுப்பும் முக்கிய அங்கமாகவும் அமைந்துள்ளது. பகிரப்பட்ட நோக்கை கொண்டிருக்கும் இரு நிறுவனங்கள் இணைந்து செயலாற்றுகையில் எம்மால் எய்தக்கூடிய இலக்குகளை வெளிப்படுத்துவதாக 2025 ஆம் ஆண்டின் இந்த சாதனைகள் அமைந்துள்ளது. எதிர்காலத்திலும் இந்த வெற்றிகரமான செயற்பாட்டை முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

விருதுகள் வழங்கும் நிகழ்வில் பெற்றுக் கொண்ட சாதனைகள் தொடர்பில் சம்பத் வங்கியின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் தாரக ரன்வல கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் உடனான எமது பங்காண்மையினூடாக, எமது ஊழியர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி அதனூடாக அவர்களின் வளர்ச்சிக்கு வலுவூட்டுவதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள பெறுமதியை உருவாக்குவதில் சம்பத் வங்கி காண்பிக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், எமது நாடளாவிய கிளை வலையமைப்பைச் சேர்ந்த ஊழியர்களின் அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகள் போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக இந்த சாதனைகள் கௌரவிக்கப்பட்டமை அமைந்துள்ளது. இந்த சிறந்த செயற்பாட்டாளர்களின் சாதனைகளை நாம் கொண்டாடுவதுடன், பகிரப்பட்ட நோக்கு, நம்பிக்கை மற்றும் இலங்கையர்களுக்கு சிறந்த பெறுமதியை பெற்றுக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வலிமையை நாம் மீண்டும் உறுதி செய்கிறோம். எதிர்காலத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த மைல்கல் அமைந்திருப்பதுடன், எதிர்வரும் ஆண்டுகளிலும் இந்த செயற்பாட்டை தொடர்ந்தும் கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2026 மார்ச் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 40.6 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 96.2 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.

Share on