இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், விளையாட்டுத் துறை மற்றும் நல்லுறவின் வெளிப்பாடாக, யூனியன் அஷ்யூரன்ஸ் Agency Premier League போட்டித் தொடரை, அண்மையில் கொழும்பு NCC மைதானத்தில் தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக முன்னெடுத்தது. முகவர் வணிகப் பிரிவின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் உட்பட 900 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வு, ஆரோக்கியமான போட்டித்தன்மை, சமூக ஒருமைப்பாடு மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் முகவர் குடும்பத்தை வரையறுக்கும் ஆழமான பிணைப்புகள் ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு விழாவாக அமைந்திருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் Agency Premier League போட்டித் தொடர், நிறுவனத்தின் முகவர்களுக்கான மதிப்பு முன்மொழிவின் ஒரு அங்கமாகும். இது அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் முதலீடு செய்வதோடு, தொழில்முறை அபிவிருத்தி, உள்ளக சமூக ஒருமைப்பாடு மற்றும் நாடு தழுவிய அதன் வலையமைப்பில் நீண்டகால ஈடுபாடு ஆகியவற்றை வளர்த்தெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இப்போட்டித் தொடரில் பங்கேற்ற அணிகள், நாடு முழுவதிலும் உள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் முகவர் வலையமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டதுடன், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிப் பிரிவுகள் நாள் முழுவதும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டன. நடப்பு ஆண்டின் போட்டித் தொடர், விளையாட்டு மைதானத்தைத் தாண்டி ஒரு ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. இம்முறை முகவர்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், இந்நிகழ்வானது ஒரு நெகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத குடும்பச் சங்கமமாக மாறியது. குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொழுதுபோக்குக் கொண்டாட்டம் இந்நிகழ்விற்கு மேலும் புத்துயிரூட்டியதுடன், வருகை தந்திருந்த சிறுவர்கள் தமக்கான தனித்தொரு இடத்தில் மகிழ்ந்திருக்கவும் வழிவகுத்தது. முகவர் பிரிவின் சிரேஷ்ட தலைமைத்துவ அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை, முகவர்களின் ஈடுபாடு மற்றும் அவர்களுக்கான அங்கீகாரத்திற்கு நிறுவனம் வழங்கும் உயரிய முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.

வடமேல் 01 வலயத்தைச் சேர்ந்த Chilaw அணியினர் ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தை வென்றதுடன், ஊவா-மத்திய வலயத்தைச் சேர்ந்த Victory Queens அணியினர் பெண்களுக்கான சம்பியன் பட்டத்தைத் தமதாக்கிக் கொண்டனர். யூனியன் அஷ்யூரன்ஸ் முகவர் சமூகம் மத்தியில் இப்போட்டித் தொடர் தனது பாரம்பரியத்தை வளர்த்து வரும் நிலையில், இரு அணிகளுக்கும் ஆண்டுதோறும் பாதுகாத்து அடுத்தடுத்து கைமாற்றப்படக்கூடிய வெற்றிக்கேடயமான ‘யூனியன் அஷ்யூரன்ஸ் ஏஜென்சி பிரீமியர் லீக்’ கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம முகவர் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃப் கருத்துத் தெரிவிக்கையில், “Agency Premier League தொடரானது, அதன் ஆழமான நோக்கத்தில், எமது ஊழியர்களின் தோழமையையும் கூட்டு ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் ஒரு சுமுகமான போட்டியாகும். மிக முக்கியமானவற்றை பாதுகாப்பதற்கான சக்தியை யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கும் எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பையே இது பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு எமது முகவர்களின் குடும்பத்தினரை வரவேற்றமையானது, இந்த நிகழ்விற்கு ஒரு அர்த்தமுள்ள புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளதுடன், பணியிடத்தைத் தாண்டிய பிணைப்புணர்வையும் பலப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வானது எமது குழுக்கள் ஒன்றிணைவதற்கும், பகிரப்பட்ட அனுபவங்களை வளர்த்தெடுப்பதில் எமது முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் அதேவேளையில், ஒரு பலமான சமூக உணர்வைக் கொண்டாடுவதற்கும் ஒரு உற்சாகமான சூழலை உருவாக்கியது.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2026 மார்ச் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 40.6 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 96.2 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.

Share on