இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியர் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் “Folds of Value” எனும் தொனிப்பொருளில் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதி அறிக்கைக்கு வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய கணக்காளர்கள் சம்மேளனத்தினால் (SAFA) ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதி அறிக்கைகள் விருதுகள் நிகழ்வில் ஆயுள் காப்புறுதிப் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. தெற்காசிய பிராந்தியத்தில் நிதி அறிக்கையிடல், ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் மற்றும் கூட்டாண்மை ஆளுகை ஆகியவற்றில் சிறப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது ஏற்பாடு செய்யப்படுகிறது.

தெற்காசிய கணக்காளர்கள் சம்மேளனத்தினால் (SAFA) என்பது தெற்காசியாவில் கணக்கீட்டு தொழிலை மேம்படுத்துவதில் தம்மை அர்ப்பணித்துள்ள பிராந்திய அமைப்பாகும். கணக்கீடு, கணக்காய்வு மற்றும் நல்லொழுக்க பொறிமுறைகளை சீராக்குவது மற்றும் நிதி அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூரல் ஆகியவற்றை ஊக்குவிப்பது போன்றன அதன் நோக்காகும். நிபுணத்துவ கணக்கீட்டு அமைப்புக்கான ஒன்றிணைந்த கட்டமைப்பாக SAFA அமைந்துள்ளதுடன், கூட்டாண்மை ஆளுகை மற்றும் ஒன்றிணைந்த அறிக்கையிடலை வலிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. அதன் சிறந்த நிதி அறிக்கை விருதுகள் நிகழ்வினூடாக, வெளிப்படுத்தல், சர்வதேச நியமங்களுக்கமைய ஒழுக்கமான செயற்பாடு மற்றும் பங்காளர் ஈடுபாடு ஆகியவற்றில் சிறப்பாக செயலாற்றும் நிறுவனங்களை சம்மேளனம் கௌரவிக்கிறது. நிதிசார் தொடர்பாடலில் தரம் மற்றும் ஒன்றிணைந்த செயற்பாடுகளில் நியமங்களை ஏற்படுத்துகிறது.

2025 விருதுகள் வழங்கும் வைபவம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்றது. இதில் பிராந்தியத்தின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். ஆயுள் காப்புறுதிப் பிரிவில், யூனியன் அஷ்யூரன்ஸ் வெள்ளி விருதைப் பெற்றுக் கொண்டதுடன், இந்தப் பிரிவில் இலங்கை நிறுவனமொன்று எய்திய உயர்ந்த கௌரவிப்பாக இது அமைந்துள்ளது. சர்வதேச கணக்கீட்டு நியமங்கள் மற்றும் சர்வதேச சிறந்த செயன்முறைகளுக்கமைய உரிய நியமங்களின் பிரகாரம் நிதி அறிக்கைகளை தயாரிப்பதில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விருதை வென்றமை தொடர்பில் பிரதம நிதி அதிகாரி ஹிமானி வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், “எமது நிதி அறிக்கை செம்மையானதாக அமைந்துள்ளது. எமது பெறுமதிகளை வெளிப்படுத்துவதுடன், நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் எமது நோக்கத்தை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது. அறிக்கையிடல் மற்றும் வெளிப்படுத்தலில் உயர் நியமங்களை பேணுவதில் எமது நிதி அணியினரும், முழு நிறுவனமும் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இந்த சாதனை உறுதி செய்கிறது. தெற்காசிய பிராந்தியத்தில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக கௌரவிப்பைப் பெற்றுள்ளமை தொடர்பில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2024 டிசம்பர் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 36.5 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 77.5 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,300 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

Share on