இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், சுகாதார அமைச்சு, NAMASTE Sri Lanka (Neurodevelopment and Autism in South Asia: Treatment and Evidence) ஆகியவற்றுடன் இணைந்து, கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒட்டிசம் விழிப்புணர்வு தினம் 2026 நிகழ்வில் கைகோர்த்திருந்தது. உள்ளடக்கம் மற்றும் நரம்புசார் பன்முகத்தன்மையை (Neurodiversity) தொடர்பான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் இணைந்திருந்தன. உலக ஒட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு, இந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் தொனிப்பொருளான ‘Autism and Humanity: Every Life Has Value,’ என்பதுடன் பொருந்தும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் அரச தலைவர்கள், சுகாதார பராமரிப்புத் துறை நிபுணர்கள், கல்வியாளர்கள், மனநல சுகாதார செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர். அரைநாள் கட்டமைக்கப்பட்ட மற்றும் தீர்வுகளில் கவனம் செலுத்தும் உரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான ஆரம்ப விழா முயற்சிகளில் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்கேற்பது, அர்த்தமுள்ள மற்றும் நீண்டகால பாதுகாப்பானது வெறும் நிதித் திட்டமிடலால் மாத்திரம் உருவாவதில்லை என்பதையும், மாறாக சமூக மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் கூட்டு முயற்சிகளின் மூலமே அது சாத்தியமாகும் என்பதையும் உணர்த்துகிறது. உள்ளடங்கலான சமூகங்களை உருவாக்குவதில் சுகாதாரத் துறையின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுதில் முக்கிய பங்காற்றிய கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க வரவேற்புரையை ஆற்றினார். தொடர்ந்து, களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிறுவர் குறைபாடுகள் தொடர்பான பேராசிரியரும், வட கொழும்பு போதனா வைத்தியசாலை மற்றும் Ayati சிறுவர் குறைபாடுகளுக்கான தேசிய மையத்தின் ஆலோசகர் சிறுவர் நல மருத்துவ நிபுணருமான பேராசிரியர் சமன்மலி பி. சுமனசேன, ஒட்டிசம் நிலை குறித்து மருத்துவ மற்றும் வளர்ச்சி ரீதியான கண்ணோட்டத்தில் உரையாற்றினார். அத்துடன், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அதுல சுமத்திபால, மனநலம், ஆராய்ச்சி மற்றும் நரம்புசார் பன்முகத்தன்மையை (Neurodiversity) புரிந்துகொள்வதற்கான சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறைகள் குறித்து மேலதிக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வில், சமூக மற்றும் அரசியல் பொருளடக்க தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் லக்மால் தர்மரட்னவின் விளக்கவுரையும் உள்ளடங்கியிருந்தது.

கூட்டாண்மைத்துறையினுள் நரம்பியல் பன்முகத்தன்மை சிந்தனைகளை வரவேற்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருந்தார். தொழில்முயற்சியாளரும், N*able இன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பீட்டர் டி”அல்மேதா, ஒட்டிசம் சூழலில் தொழில் வாழ்வை எவ்வாறு வழிநடத்திச் செல்வது தொடர்பான விளக்கத்தை வழங்கியிருந்தார். இவற்றுடன், புத்தாக்க, தனிப்பட்ட கதைகூறல் பிரிவுகளும் கரிசனை மற்றும் மனிதநோய நோக்குகளையும் வெளிப்படுத்தியிருந்தன. சமூகப்பணித்துறை விரிவுரையாளர் ஒருவரினதும் மற்றும் ஆலோசகர் சமூக சிறுவர் நல மருத்துவ நிபுணர் ஒருவரினதும் நெறிப்படுத்தலில் மூன்று குழுநிலை விவாதங்கள் இடம்பெற்றன. இவை பணியிடங்களில் உள்வாங்கல், புலன் உணர்வு-நட்புச் சூழல்களை (Sensory-friendly environments) வடிவமைத்தல், மற்றும் தொடர்பாடல் – மனநலம் சார்ந்த தவறான புரிதல்களைக் களைதல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியிருந்ததுடன், துறைசார் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் பெற்றோர்களுக்கிடையில் ஒரு வெளிப்படையான விரிவான உரையாடலுக்கும் வழிகோலியது. அத்துடன், நடிகையும் கலைத்துறைசார் பயிற்சி வழங்குநருமான கலனி தொடன்தென்னவின் பங்களிப்பானது இந்நிகழ்வை மேலும் மெருகூட்டியது. நரம்புசார் பன்முகத்தன்மை கொண்ட சிறுவர்களுக்காக ஆக்கபூர்வமான வெளிப்பாடுகள் மூலம் உள்ளடங்கலான சூழல்களை உருவாக்கும் அவரது பணிகள், அன்றைய தினத்தின் மருத்துவ மற்றும் பணியிடக் கண்ணோட்டங்களுக்கு ஒரு மேலதிக பரிமாணத்தை வழங்கின.

ஒட்டிசம் பாதிப்புள்ள வளர்ந்த பிள்ளைகளின் பெற்றோர்களது தனிப்பட்ட அனுபவப் பகிர்வுகளுடன் இந்த நிகழ்வு நிறைவுற்றது. அன்றைய தினத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் ஆழமான தனிப்பட்ட அனுபவங்களுடன் தொடர்புபடுத்திய அந்தப் பகிர்வுகள், ஒவ்வொரு கொள்கை ரீதியான கலந்துரையாடலுக்கும் நிறுவன ரீதியான அர்ப்பணிப்புக்கும் பின்னால் ஒரு மனித உயிர் இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தின. நாம் மற்றவர்களை உள்வாங்க அல்லது புறக்கணிக்க எடுக்கும் தீர்மானங்களே அந்த மனிதர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்று கொழும்பு பிராந்திய, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். சந்தன கஜநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “நரம்புசார் பன்முகத்தன்மை என்பது ஒரு சாதாரண விடயமல்ல. இலங்கையின் சகல சமூகங்களையும் சேர்ந்த குடும்பங்களை பாதிக்கும் பொதுச் சுகாதார நிலையாகும். ஆரம்பத்தில் அதனை புரிந்து கொண்டு, வேறுபாடுகளை பாதிப்படையச் செய்யாமல், சரியான ஆதரவுக் கட்டமைப்புகள் மற்றும் சூழல்களை நிறுவி, தனிநபரின் வாழ்வில் நரம்பியல் பன்முகத்தன்மையை அர்த்தமுள்ள வகையில் மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும். எமது சமூகத்தில் இது போன்ற விழிப்புணர்வை கட்டியெழுப்புவதில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவை. இந்த உரையாடலை முன்னெடுப்பது சாத்தியமாக்குவதில், யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் எமது சகல பங்காளர்கள் அமைப்புகளும் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்காக நாம் நன்றி தெரிவிக்கிறேன்.” என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன, நிறுவனத்தின் கொள்கைப் பரப்பின் முக்கியத்துவம் தொடர்பில் குறிப்பிடுகையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில், முக்கியமானதை பாதுகாப்பது என்பதில், அனைத்து மக்களையும் வரவேற்று உள்வாங்குவது என்பதாகும் என நம்புகிறோம். நரம்புசார் பன்முகத்தன்மை என்பது முகாமைத்துவம் செய்யப்பட வேண்டிய ஒரு சவாலல்ல, அது மனிதாபிமானத்தின் ஒரு பரிமாணம். அதனை புரிந்துகொள்ள வேண்டியதுடன், ஆக்கபூர்வமாக ஆதரிக்க வேண்டியதும் அவசியமாகும். இன்றைய நிகழ்வில் பங்கேற்றக வாய்ப்புக் கிடைத்தமை என்பது, பன்முகத்தன்மையை உள்வாங்கி, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை எமது எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்று, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குடும்பத்தினுள் சேர்ப்பதற்கான அர்ப்பணிப்பை நிறுவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திளு்ளது. எமது சமூகத்தாருக்கு சேவையாற்றும் இந்தப் பயணத்தில் பங்கேற்பதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2025 டிசம்பர் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 45.6 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 92.8 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.

Share on