விசேடமான தொழிற்பயிற்சி நெறியான UNISHIP இற்கு வரவேற்கின்றோம். திறமையை ஊக்குவித்து எதிர்கால தலைவர்களை தயார்ப்படுத்துவதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். கூட்டாண்மை வெளிப்பாடு, கலாசார பின்னிணைவு மற்றும் தொழில்நிலை முன்னேற்ற வாய்ப்புகளை பட்டம்பயிலும் மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் எமது தொழிற்பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதே விண்ணப்பியுங்கள்
Apply Nowஇந்த “நிலைமாற்ற” தொழிற்பயிற்சித் திட்டத்தில் அங்கம் பெறுவதற்கு, அரச அல்லது தனியார் பல்கலைக்கழகமொன்றில் பட்டப் படிப்பை தொடர்பவராக இருத்தல் வேண்டும்.
இந்தத் திட்டம் ஒரு மாத காலப்பகுதி வரையானது, இக்காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸில் உங்களுக்கு ஆழமான பரிபூரண தொழில் வாழ்க்கை தொடர்பான அனுபவத்தை வழங்கும்.
யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு ஏதுவான விறுவிறுப்பான கலாசாரம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பிரிவுகள் போன்றன தொடர்பில் அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு மாத கால தொழிற்பயிற்சித் திட்டத்தினூடாக, உங்கள் தொழில் வாழ்க்கைக்கு உதவக்கூடிய தொழில் அனுபவமும், தொழிற்துறைசார் அறிவும் உங்களுக்கு வழங்கப்படும்.
முறையாக கட்டமைக்கப்பட்ட மற்றும் நெகிழ்ச்சியான தொழிற்பயிற்சித் திட்டமானது, உங்களின் கல்விசார் நிகழ்ச்சிநிரலுடன் பொருந்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூட்டாண்மை உலகினுள் பிரவேசிப்பதற்கு, பெறுமதி வாய்ந்த அம்சங்களை அறிந்து கொள்வதற்கு, நிபுணர்களிடமிருந்து பயில்வதற்கு மற்றும் உங்கள் வலையமைப்பை விரிவாக்கம் செய்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கும்.
தொழிற்பயிற்சித் திட்டத்தின் பூர்த்தியின் பின்னர், உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளுக்காக பெறுமதி வாய்ந்த சான்றிதழ் வழங்கப்படும்.