ஆயுள் காப்புறுதிக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தைத் தீர்மானிக்கையில், உங்கள் வயது மற்றும் சுகாதாரம் ஆகிய இரு விடயங்கள் தொடர்பிலும் காப்புறுதி வழங்குநர்கள் அதிகளவு கவனம் செலுத்துவர். குறைந்த வயதில் ஆரோக்கியமாகத் திகழ்கையில், உங்கள் பாதுகாப்புக்காக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை மிகவும் குறைவாக இருக்கும். எனவே, உங்களுக்கு சகாயமான ஆயுள் காப்புறுதியை பெற வேண்டியிருந்தால், காத்திருக்காமல், இயலுமானவரை உடனடியாக வாங்கவும். உங்கள் இள வயதில் காப்புறுதியொன்றை வாங்குவதால் கிடைக்கும் சில அனுகூலங்கள் வருமாறு;
- குறைந்த கட்டணங்களைப் பெறுங்கள் – இளம் வயதில் ஆரோக்கியமாகத் திகழும் போது ஆயுள் காப்புறுதி ஒன்றை கொள்வனவு செய்கையில், நீங்கள் செலுத்த வேண்டிய ப்ரீமியம் தொகை குறைவாக அமைந்திருக்கும் என்பதுடன், உங்கள் வாழ்நாளில் ஆயுள் காப்புறுதிக்காக நீங்கள் செலவிடும் மொத்தத் தொகையும் மிகவும் குறைவாக அமைந்திருக்கும்.
- அன்புக்குரியவர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – புதிய குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கின்றீர்களாயின், அல்லது பெற்றோருக்கு உதவியாக இருக்கின்றீர்களாயின், அல்லது உங்களில் தங்கியிருப்போர் உள்ளார்களாயின், ஆயுள் காப்புறுதி ஒன்றின் மூலமாக அவர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகின்றது. எதிர்பாராத விதமாக உயிரிழப்பு நேரும்பட்சத்தில், ஆயுள் காப்புறுதியினூடாக நீங்கள் பிரேரித்த நபர்களுக்கு காப்பீடு செய்து கொண்ட தொகை முழுமையாக வழங்கப்பட்டு, வருமானம் இழப்பினூடாக அவர்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படாமலிருப்பது உறுதி செய்யப்படுகின்றது.
- சொத்தொன்றை உருவாக்குங்கள் – நீங்கள் காப்புறுதி ஒன்றை வாங்கும் போது, முதல் ப்ரீமியம் கொடுப்பனவிலிருந்து, சொத்தை உருவாக்க நீங்கள் ஆரம்பித்துவிடுவீர்கள். ஏனைய எந்தவொரு நிதியியல் மூலத்தினாலும் இந்த அனுகூலம் கிடைக்காது.
- எதிர்காலத் தேவைகளுக்கு – தற்போது உங்களில் தங்கியிருப்போர் இருக்கமாட்டார்கள், ஆனாலும், சில ஆண்டுகளில் அது மாறுபடலாம். தற்போது முதலீடு செய்வதனூடாக, உங்கள் வருமானத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தார் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள முடியும்.
- ஓய்வூதிய அனுகூலங்கள் – நீங்கள் ஓய்வு பெற்றதும், ஓய்வின் பின்னர் எழும் செலவுகள் தொடர்பான அழுத்தங்களை குறைத்துக் கொள்வதற்கு பயனுள்ள சேமிப்பு சாதனமாக ஆயுள் காப்புறுதி அமைந்திருக்கும்.
பரிபூரண வாழ்க்கையின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஆயுள் காப்புறுதி வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய பரந்த தீர்வுகளை வழங்குகின்றது, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், முதலீடு, ஓய்வூதியம்.
நீங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளீர்களா?