Preloader images
Preloader icon

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் தனது ‘Go Green’ செயற்பாடுகளினூடாக, நிலைபேறாண்மை மற்றும் சூழல் பொறுப்புணர்வுச் செயற்பாடுகள் பற்றி தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றது. இந்த பசுமையான செயற்பாடுகள் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் விஸ்தரிக்கும் வகையில், தொழிற்துறையின் சூழல் தாக்கத்தை தணிப்பதற்காகவும், நிலைபேறான செயன்முறைகளை ஊக்குவிப்பதற்காகவும் பரந்தளவு சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பங்களிப்பு வழங்குவதற்காகவும் காப்புறுதி சான்றிதழுடன் e-காப்புறுதி ஆவணத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

காப்புறுதிதாரரின் ஆயுள் காப்புறுதித் திட்டம் தொடர்பான பிரதான தகவல்கள் மற்றும் அனுகூலத்தின் சாராம்சங்கள் ஆகியவற்றை காப்புறுதி சான்றிதழ் கொண்டிருக்கும். காப்புறுதி சான்றிதழுடன், காப்புறுதிதாரர்களுக்கு e-காப்புறுதி ஆவணங்களை பல்வேறு தெரிவுகளினூடாக மாற்றிக் கொள்வதற்கான அணுகும் வசதி வழங்கப்படும். காப்புறுதிதாரர்களுக்கு தமது பதிவு செய்து கொண்டுள்ள மொபைல் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும் SMS link இனூடாக, QR குறியீட்டை ஸ்கான் செய்வதனூடாக மற்றும் Clicklife App இனூடாக காப்புறுதி ஆவணத்தை பார்வையிட அல்லது தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதனூடாக பாவனையாளருக்கு நட்பான மொபைல் செம்மைப்படுத்தப்பட்ட வசதி வழங்கப்படுகின்றது.

இந்தத் திட்டம் தொடர்பாக யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸில் புத்தாக்கம், முன்னேற்றம் மற்றும் ESG பெறுமதிகளை பேணுதல் ஆகியவற்றில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்தத் திட்டம் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்படும் ஒரு படியாக அமைந்திருப்பதுடன், எமது சூழலை பாதுகாப்பதற்கான உறுதி மொழியாகவும் அமைந்துள்ளது. கழிவுகளை தணித்தல் மற்றும் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவைகளை வழங்கல் என்பவற்றையும் இலக்காகக் கொண்டுள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதுடன், அவர்களுக்கு மனநிம்மதியை ஏற்படுத்தி, நிலைபேறான எதிர்காலத்தை நோக்கி எமது பயணத்தை முன்னெடுப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம தொழில்நுட்ப அதிகாரி/சம்பந்தபட்ட அதிகாரி ருமேஷ் மோதரகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது வியாபார செயற்பாடுகளின் போது சூழல் மற்றும் சமூகக் காரணிகள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துகின்றோம். ‘Go Green’ செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக, சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை மாத்திரம் குறைப்பது மட்டுமன்றி, சமூகப் பொறுப்பு வாய்ந்த மற்றும் நிலைபேறான வியாபார செயன்முறைகளை கொண்டிருப்பதற்காக அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்வதாகவும் அமைந்துள்ளது. தொழிற்துறையில் நியம எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 ஜுன் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.0 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 60.4 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.