இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தனது கலாசாரப் பெறுமதிகளை கொண்டாடும் வகையில், தனது விளையாட்டு தினத்தை 2023 மார்ச் 11ஆம் திகதி, கொழும்பு விமானப் படை மைதானத்தில் முன்னெடுத்திருந்தது. நிறுவனத்தின் நான்கு விளையாட்டு இல்லங்களும் இந்த நிகழ்வில் போட்டியிட்டிருந்தன. இதன் போது, Challengers அணி சம்பியன்களாக தெரிவாகியிருந்ததுடன், இரண்டாமிடத்தை Giants பெற்றுக் கொண்டது. இந்த விளையாட்டுப் போட்டியில் Titans மற்றும் Royals இல்லங்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தன.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “இலக்குகளை எய்துவதற்கான எமது உறுதியான இணைவு மற்றும் ஈடுபாடு போன்றவற்றினூடாக இந்நிகழ்வு மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. இந்த விளையாட்டு தினத்தினூடாக, அணி அங்கத்தவர்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் நட்புணர்வு மேம்படுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவதில் முழு மூச்சுடன் செயலாற்றியிருந்ததனூடாக, வெற்றியீட்டும் நிறுவனம் என்பது மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது.” என்றார்.
இந்த குதூகலமான நிகழ்வில் அனைத்து ஊழியர்களையும் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டிருந்தனர். பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (DE&I) ஆகியவற்றை உணர்த்துவதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. பயில்வதற்கும் வளர்ச்சிக்கும் வாய்ப்புகளை வழங்குவது, தொழில்நிலை வெற்றியை ஊக்குவிப்பது மற்றும் பொதுவான இலக்கை நோக்கி ஒன்றிணைந்து செயலாற்றுவது போன்றவற்றுக்கான பணிக் கலாசாரத்தை வலுவூட்டுவதற்கான நற்பெயரை யூனியன் அஷ்யூரன்ஸ் பெற்றுக் கொண்டுள்ளது.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.4 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 54.9 பில்லியனையும், 2022 டிசம்பர் மாதமளவில் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.