Preloader images
Preloader icon

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், திறமையை ஊக்குவிக்கும் வகையில் அர்ப்பணிக்கப்பட்ட புத்தாக்கமான தொழிற்பயிற்சி நிகழ்ச்சித் திட்டமான ‘Uniship’ ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தொழிற்பயிற்சி அறிமுக நிகழ்வு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றதுடன், பங்குபற்றுநர்களுக்கு நிறுவனம் பற்றிய தகவல்களை யூனியன் அஷ்யூரன்ஸ் நிறைவேற்று குழு வழங்கியிருந்தது.

Uniship இனால் பட்டம்பயிலும் மாணவர்களுக்கு நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பிரயோக ரீதியான் தகவல்களைப் பெற்றுக் கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தமது தொழில்நிலையில் சிறந்த நிலைக்கு செல்வதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. புத்தாக்கமான தெரிவு முறையின் அடிப்படையில் இந்த நிகழ்வுக்கான பங்குபற்றுநர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தெரிவு செய்யப்பட்ட இந்த திறமை படைத்த பட்டம்பயிலும் மாணவர்களுக்கு, தொழிற்துறையின் நிபுணர்களிடமிருந்து பயில்வதற்கான வாய்ப்பு கிடைப்பதுடன், தமது நிபுணத்துவ வலையைமைப்பை விரிவாக்கம் செய்வதற்கும், கூட்டாண்மை உலகில் தம்மை உள்வாங்கிக் கொள்வதற்கும் உதவும். இந்தத் திட்டத்தைப் பூர்த்தி செய்ததும், பட்டம் பயிலும் மாணவர்களுக்கு பெருமைக்குரிய சான்றிதழும் வழங்கப்படும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “எமது புத்தாக்கமான தொழிற்பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்யப்படுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அடுத்த தலைமுறை திறமைசாலிகளை தயார்ப்படுத்துவதில் எமது அர்ப்பணிப்புடன் உறுதியாக பொருந்தும் திட்டமாக அமைந்துள்ளது. நிறுவனத்தின் சார்பாக, சகல பங்குபற்றுநர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அனுபவம் அவர்களுக்கு வளமூட்டுவதாகவும், முன்னேற்றத்துக்கு வழிகோலுவதாகவும் அமைந்திருப்பதுடன், ஒவ்வொரு பங்குபற்றுநருக்கும் உறுதியான மற்றும் வெற்றிகரமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள சிறந்த அடித்தளமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 செப்டெம்பர் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 23.9 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 63.9 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.