இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது 2022 வருடாந்த விருதுகள் வழங்கலில் தங்க விருது வெற்றியாளர்களுக்கு, மனம் மறவாத சொகுசு ஹோட்டல் சவாரியை வழங்கியிருந்தது. இந்த சுற்றுலாவில் 125 க்கு அதிகமான வெற்றியாளர்களும் அவர்களின் குடும்பத்தாரும் பங்கேற்று, மனம்மறவாத அனுபவத்தைப் பெற்றிருந்தனர்.
வருடாந்த விருதுகள் 2022 தங்க விருது வெற்றியாளர்களுக்கான சொகுசு ஹோட்டல் சுற்றுலா வாய்ப்பை, யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கியிருந்ததனூடாக, முகவர் விநியோக விற்பனை செயலணிப் பிரிவில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களின் உயர் பங்களிப்புக்கான தமது கௌரவிப்பை வெளிப்படுத்தியிருந்தது. சொகுசுடன், களிப்பூட்டும் ஒன்றுகூடல் செயற்பாடுகளை இணைத்து, அணியினரிடையே நீண்ட காலம் நிலைத்திருக்கும் பிணைப்பை ஏற்படுத்தியிருந்தது.
சிறப்பு மற்றும் அணிநிலைச் செயற்பாடுகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பணிச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது. முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநர் எனும் வகையில், தனது சிறந்த அணி அங்கத்தவர்களின் சாதனைகளை கௌரவித்து, கொண்டாடுவதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.
இந்த சுற்றுலாவில் வெற்றியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு பொருந்தக்கூடிய வகையில் பரந்தளவு செயற்பாடுகள் அடங்கியிருந்தன. சுற்றுலாவின் பிரதான உள்ளம்சமாக, மாபெரும் இரப்போசண நிகழ்வு அமைந்திருந்தது. நேரடி இசை நிகழ்வு, நடனம் மற்றும் விளையாட்டு அம்சங்களையும் மாலைப் பொழுது கொண்டிருந்தது.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 ஜுன் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.0 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 60.4 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.