Preloader images
Preloader icon

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியை வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்திருந்தது. வழமையான புதிய வியாபார கட்டுப்பண வளர்ச்சியை 65% ஆக பதிவு செய்திருந்ததுடன், தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வியாபாரச் சூழலிலும் இலங்கையின் சிறந்த 5 ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநர் மத்தியில் தம்மைப் பதிவு செய்திருந்தது.

2021 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் நிறுவனம் GWP பெறுமதியாக 6.5 பில்லியன் ரூபாயை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 29% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ் பதிவு செய்திருந்த நிதிப் பெறுபேறுகள் என்பது உறுதியான செயற்திறன் மற்றும் தந்திரோபாயமான வழிநடத்தல் போன்றவற்றினூடாக வழிநடத்தப்பட்டிருந்ததுடன், துறையின் சிறந்த ஐந்து காப்புறுதி சேவை வழங்குநர்களில் ஒன்றாகத் திகழ்வதற்கும் ஏதுவாக அமைந்திருந்தது. டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகளினூடாக, தொடுகைஅற்ற வாடிக்கையாளர் உதவிச் சேவைகளான 24/7 மும்மொழிகளிலும் இயங்கும் அழைப்பு நிலையம், ஒன்லைன் chat bot, WhatsApp, Clicklife சுய சேவை app மற்றும் Clicklife டிஜிட்டல் தீர்வு போன்றன உள்ளடங்கியிருந்தன. கொவிட்-19 உடன் தொடர்புடைய உரிமை கோரல்கள் அடங்கலாக ரூ. 1.7 பில்லியனுக்கு அதிக பெறுமதியான உரிமை கோரல்களை நாம் வழங்கியிருந்தோம். கொவிட் விதிமுறைகளின் பிரகாரம் ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாம் தொடர்ந்தும் செயலாற்றியிருந்ததுடன், எமது பங்காளர்களுக்கு அர்ப்பணிப்பை உறுதி செய்வதற்காக எமது உத்வேகமான அணியின் செயற்பாட்டை நாம் முன்னெடுத்திருந்தோம்.” என்றார்.

நிலைபேறான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், நிறுவனம் GWP இல் 5 ஆண்டு கால திரண்ட வருடாந்த வளர்ச்சி வீதமாக (CAGR) 13% ஐ பதிவு செய்திருந்தது. மேலும், நிறுவனத்தின் வரிக்கு பிந்திய இலாபம் (PAT) முதல் அரையாண்டு காலப்பகுதியில் 19% இனால் அதிகரித்து ரூ. 402 மில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்கு முந்திய இலாபம் (PBT) ரூ. 462 மில்லியனாக பதிவாகியிருந்தது. நிறுவனம் ஆரோக்கியமான மூலதன போதுமை விகிதமான 300% ஐ பேணியிருந்தது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடான 120% என்பதை விட பெருமளவு அதிகமானதாகும்.

தனது தந்திரோபாய வினைத்திறன் இலக்குகளுக்கு மேலதிகமாக, சமூகம் மற்றும் மக்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய பகுதிகளில் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னேற்றத்தைத் தொடர்ந்தும் பதிவு செய்திருந்தது. வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு 3,000க்கும் அதிகமான உணவு வேளைகளை வழங்கியிருந்ததுடன், கொவிட் பராமரிப்புக்காக வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசியமான மருத்துவ சாதனங்களையும் அன்பளிப்புச் செய்திருந்தது. ஊழியர்கள் தொடர்பான செயற்பாடுகளில் பணியிடத்தில் பன்முகத் தன்மை மற்றும் உள்ளடக்கத்தை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்குவதுடன், வேலைக்கமர்த்தும் அர்ப்பணிப்புகளையும் கல்வியையும் விரிவாக்கம் செய்கின்றது. ஒன்பதாவது வருடமாகவும் பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், ஆசியாவிலும் பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3,000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.