Preloader images
Preloader icon

இலங்கையின் முன்னணி காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், “இருதய தின படி சவால்” போட்டியை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. இருதய சுகாதாரத்தை ஊக்குவிப்பதற்காக இந்தப் போட்டி முன்னெடுக்கப்பட்டிருந்தது. செப்டெம்பர் 29 ஆம் திகதி உலக இருதய தினத்தை முன்னிட்டு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில், உடல்சார் செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டிருந்தது மாத்திரமன்றி, இருதய சுகாதாரத்தின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

15 நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்ட இந்த போட்டியில் 600 க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். போட்டி காலப்பகுதியில், யூனியன் அஷ்யூரன்ஸ் Clicklife App ஐ பயன்படுத்தி அதிலுள்ள ‘Get Fit’ உள்ளம்சத்தினூடாக, தமது நடை படிகளின் எண்ணிக்கையை கணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த மேம்படுத்தப்பட்ட உள்ளம்சத்தில் உடல்சார் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான பிரத்தியேகமான dashboard ஒன்றும் தினசரி உணவு உள்ளெடுப்பு அளவை கண்காணிப்பதற்கான கலோரி கணிப்பானும் காணப்படுகின்றது. குறிப்பாக, இதில் AI-வலுவூட்டப்பட்ட உணவு படம் இனங்காணல் கட்டமைப்பு மற்றும் இனங்காணல் கட்டமைப்பு போன்றன காணப்படுவதால், பாவனையாளர்களுக்கு தமது உணவுகளில் காணப்படும் கலோரி அளவு பற்றி அறிந்து கொள்ள முடியும். Clicklife App ஊடாக பாவனையாளர்களுக்கு பிரத்தியேகமான உடற் தகைமையை பேணி, உடல் பருமன் குறைப்பு அல்லது பேணல் முன்னெடுக்கலாம். இதற்காக பரந்தளவில் பயன்படுத்தப்படும் Mifflin-St Jeor கணிப்பீடான Basal Metabolic Rate (BMR) முறைமை பின்பற்றப்படுகின்றது. இந்த உள்ளம்சங்களினூடாக, பாவனையாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பேணக்கூடியதாக இருப்பதுடன், தமது ஒட்டுமொத்த நலனை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.

போட்டியின் வெற்றியாளர்களுக்கு Clicklife app இன் முழுமையாக தன்னியக்கமயப்படுத்தப்பட்ட டிஜிட்டல் வெகுமதியளிப்புக் கட்டமைப்பினூடாக டிஜிட்டல் வவுச்சர்கள் வெகுமதியாக வழங்கப்பட்டிருந்தன. பரந்தளவு வாய்ப்புகள் மற்றும் அனுபவங்களை வழங்கும் வகையில், இந்த வவுச்சர்களை 85க்கு அதிகமான பங்காளர் விற்பனை நிலையங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 ஜுன் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.0 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 60.4 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.