Preloader images
Preloader icon

கொரோனாவைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதையும் சேர்ந்த காப்புறுதிதாரர்களுக்கு சுகாதார பராமரிப்பு சேவைகளை பெறுவதற்கு இலவசமாக அணுகும் வசதியை பெற்றுக் கொடுக்க oDoc உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்துள்ளது.

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுப் பரவல் வியாபித்துக் காணப்படும் நிலையில், எந்தவொரு நபருக்கும் தொற்று இன்மை உறுதி செய்யப்படும் வரையில், எவரும் பாதுகாப்பாக இருப்பதாக கருதிவிட முடியாது. வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முடக்கநிலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் பிறப்பிக்கப்பட்டு, நடமாட்டங்கள் கட்டுப்படுத்தும் நிலையில், யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் oDoc ஆகியன கைகோர்த்து காப்புறுதிதாரர்களின் குடும்பத்தில் நான்கு அங்கத்தவர்கள் வரையில் வரையறைகளற்ற மருத்துவ ஆலோசனைகள், டிஜிட்டல் மருந்துச்சிட்டைகள், மருந்துப் பொருட்கள் விநியோகம் (கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகள்), நடமாடும் பரிசோதனைகூட சேவைகள் (கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகள்) மற்றும் பல மருத்துவ சேவைகளை வழங்க முன்வந்துள்ளன.

oDoc ஊடாக யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதிதாரர்களுக்கு, தமது வசிப்பிடங்களிலிருந்தவாறே காத்திருக்காமல் மருத்துவ பராமரிப்பு சேவைகளை எந்நேரத்திலும் அணுக முடியும். oDoc உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதிதாரர்களுக்கு 3 நிமிடங்களினுள் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையை பெறல், மருந்துச்சிட்டையை பெறல் மற்றும் தமது இருப்பிடத்துக்கு மருந்துப் பொருட்களை தருவித்துக் கொள்ளல் போன்றவற்றை பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக மருத்துவ ஆலோசனை வழங்கப்படுவதைப் போன்று, தொலைபேசி ஊடாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், வயது, ஒவ்வாமை மற்றும் முன்னைய மருத்துவ பதிவுகள் ஆகியன தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படும்.

இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் பாவனையாளர்களை oDoc தொடர்புபடுத்துவதுடன், சுகாதார நிபுணர்கள் தமது மொபைல் தொலைபேசி ஊடாக வீடியோ ஆலோசனைகள், குரல் மூல ஆலோசனைகள் மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை வழங்குவார்கள். இதனூடாக யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதிதாரர்களுக்கு வாகனநெரிசல், காத்திருக்கும் பகுதிகளில் இருத்தல் மற்றும் வரிசைகளில் காத்திருத்தல் போன்றவற்றுக்கு முகங்கொடுக்காமல், உயர் தரம் வாய்ந்த மருத்துவ பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

வீடியோ மற்றும் ஓடியோ ஆலோசனைகளினூடாக சுமார் 75% ஆக வழமையான வைத்திய விஜயங்களை நிர்வகிக்க முடியும் என அமெரிக்க மருத்துவ சங்கம் கண்டறிந்துள்ளது. அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், இந்தோனேசியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் அடங்கலாக உலகளாவிய ரீதியில் இந்த முறையிலான சுகாதார பராமரிப்பு சேவைக்கு பெருமளவு வரவேற்பு காணப்படுகின்றது.

oDoc ஐச் சேர்ந்த சகல வைத்தியர்களும் பிரத்தியேகமான அப்ளிகேஷன் ஒன்றைக் கொண்டிருப்பதுடன், அதனூடாக oDoc ஆலோசனைகளை நிர்வகித்தல், மருந்துச் சிட்டைகளை வழங்கல், நோயாளர்-வைத்தியர் இடையிலான தொடர்புகளை சீராக பேணல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

யூனியன் அஷ்யூரன்ஸ் சகல காப்புறுதிதாரர்களுக்கும் oDoc சேவைக்கு தமது கையடக்க தொலைபேசியினூடாக பதிவு செய்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். பதிவு செய்வதற்கு UADOC<space> தேசிய அடையாள அட்டை இலக்கத்தை டைப் செய்து 0771 330 000 எனும் இலக்கத்துக்கு SMS செய்யவும்.