Preloader images
Preloader icon

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், கொமர்ஷல் வங்கியுடன் கைகோர்த்து வங்கியின் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதித் திட்டங்களுக்காக சௌகரியமான இலகு தவணை முறை கொடுப்பனவு திட்டமொன்றை வழங்க முன்வந்துள்ளது. இந்த கைகோர்ப்பினூடாக, கொமர்ஷல் வங்கி அட்டைதாரர்களுக்கு தற்போது தமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி திட்டங்களுக்காக 12 மாதங்கள் வரை 0% வட்டியில்லாத தவணைமுறை கொடுப்பனவு வசதியை அனுபவிக்க முடியும்.

இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணங்கள் அவசியமாக காணப்படும் சூழலில், இந்த சலுகையை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியன முன்வந்துள்ளன. தமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் நலன் மற்றும் நிதி உறுதித்தன்மையை பேணுவதில் இரு நிறுவனங்களும் காண்பிக்கும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இந்தப் பங்காண்மை அமைந்துள்ளது.

ஆயுள் காப்புறுதி கொடுப்பனவுகளை இலகு தவணைமுறை கொடுப்பனவு திட்டங்களாக மாற்றிக் கொள்வதற்கு காப்புறுதிதாரர்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் Clicklife App ஐ பயன்படுத்தி கொடுப்பனவு முறையை மாற்றிக் கொள்ளலாம். அல்லது கொமர்ஷல் வங்கி ஹொட்லைன் இலக்கமான 0112 353 353 உடன் கொடுக்கல் வாங்கல் நடைபெற்று ஏழு வேலை நாட்களுக்குள் தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் உடன் 0112990 990 ஊடாக அல்லது கொமர்ஷல் வங்கியுடன் 0112 353 353 ஊடாக தொடர்பு கொள்ளவும். நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 ஜுன் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.0 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 60.4 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.