Preloader images
Preloader icon

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் நேஷன்ஸ் மெக்ஸ் போனஸ் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு பரிபூரண குரூப் ஆயுள் காப்புறுதித் தீர்வை பெற்றுக் கொடுக்க யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி முன்வந்துள்ளது. கணக்குதாரருக்கு பல பெறுமதி சேர் அனுகூலங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தத் தீர்வு அமைந்துள்ளது.

யூனியன் அஷ்யூரன்சின் குரூப் ஆயுள் காப்புறுதித் தீர்வினூடாக, நேஷன்ஸ் மெக்ஸ் போனஸ் கணக்குதாரர்களுக்கு பரிபூரண ஆயுள் காப்புறுதி பாதுகாப்பை வழங்குவதாக அமைந்துள்ளதுடன், கணக்குதாரர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடி எனும் வகையில், எமது தீர்வுகள் மற்றும் சேவைகளை மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகளின் பிரகாரம் தொடர்ச்சியாக மீளமைத்து வருகின்றோம். நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடனான இந்த பங்காண்மையினூடாக, எமது சென்றடைவை விரிவாக்கிக் கொள்ள முடிந்துள்ளதுடன், பரந்தளவு தனிநபர்களின் வாழ்க்கையில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். இரு நிறுவனங்களுக்கும் இது அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும்.’ என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகியன 2008 ஆம் ஆண்டு முதல் உறுதியான பங்காண்மையைப் பேணி வந்துள்ளன. இந்த பங்காண்மையை மேலும் வலிமைப்படுத்திடும் வகையில், அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகியன தொடர்ந்தும் பரிபூரண நிதித் தீர்வுகளை வடிவமைத்து வழங்குகின்றன.

இலங்கையில் இயங்கும் பழமையான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2020 ஜுலை மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18 பில்லியனைத் தன்வசம் கொண்டிருந்ததுடன், ஆயுள் நிதியமாக ரூ. 38 பில்லியனைக் கொண்டிருந்தது. மூலதன போதுமை விகிதம் (CAR) 455% ஆகவும் காணப்பட்டது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.