Preloader images
Preloader icon

மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும், வெற்றிகரமான தொழில் நிலையை அவர்கள் கொண்டிருப்பதற்காக அவர்களின் திறன்களை கட்டியெழுப்பும் வகையிலும், முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், புகழ்பெற்ற உயர் கல்விச் சேவைகளை வழங்கும் NSBM Green உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கையின் இளைஞர்களுக்கு அனுகூலம் அளிக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் தொழில் நிலையில் அவர்களுக்கு சிறந்த வகையில் செயலாற்றுவதற்கு அவசியமான அறிவும் நிபுணத்துவமும் வழங்கப்படும்.

NSBM இன் உபவேந்தர் பேராசிரியர் ஈ.ஏ.வீரசிங்க மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் அனீஃவ் ஆகியோர் மே மாதம் 25ஆம் திகதி இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். மாணவர்களுக்கு தமது கல்வி அறிவை ஒன்றிணைத்து, நிபுணத்துவத்தை உள்வாங்கும் வகையிலமைந்த பல்வேறு செயற்பாடுகளை கொண்டிருக்கும். இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுச்சேர்ப்பது எனும் யூனியன் அஷ்யூரன்ஸின் உறுதிமொழிக்கமைய இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் அனீஃவ் இந்த உடன்படிக்கை பற்றித் தெரிவிக்கையில், இளைஞர்களின் எதிர்கால தொழில் நிலைகளை மேம்படுத்துவதில் முக்கிய மைல்க்கலாக இது அமைந்துள்ளது. NSBM இன் கல்விசார் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக நிறுவனத்தின் கூட்டாண்மை நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவுள்ளோம். தொழிலை ஆரம்பிக்கக்கூடிய நிலையில் மாணவர்கள் இருப்பதை இது உறுதி செய்யும் என்பதுடன், அவர்களுக்கான சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக அமைந்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அனீஃவ் மேலும் குறிப்பிடுகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த பல்திறன் படைத்த செயலணியினரால் NSBM இன் மாணவர்களுடன் பெருமளவு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். துறையின் முன்னோடி எனும் வகையில், நிறுவனத்தின் பிரத்தியேகமான உள்ளம்சங்களினூடாக, மாணவர்களுடன் பீடத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கும் பெருமளவு பயன் பெறக்கூடியதாக இருக்கும். மாணவர்களின் தொழில்நிலை வெற்றிகரமான செயற்பாடுகளுடன், பட்டப் படிப்புகளின் மேம்பாட்டில் பங்களிப்பு வழங்குவதுடன் NSBM இன் வளர்ச்சிக்கு நாம் பங்களிப்பு வழங்குவோம் என்றார்.

இலங்கையின் எதிர்கால இளம் தலைமுறையினரில் யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. மாணவர்களுடன் வளங்கள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதை நிறுவனம் உறுதி செய்யும் என்பதுடன், அதனூடாக அவர்களின் தொழில் நிலை மேம்படுத்தலுக்கு பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.

NSBM இன் உபவேந்தர் பேராசிரியர் ஈ.ஏ.வீரசிங்க குறிப்பிடுகையில், எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கு புதிய வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக புரிந்துணர்வு உடன்படிக்கை அமைந்திருக்கும். கல்விச்சேவைகளை வழங்கும் நிலையங்களுக்கும், தொழில்துறையைச் சேர்ந்வர்களுக்குமிடையே இதுபோன்ற தொடர்புகளை ஏற்படுத்துவதனூடாக பாடவிதானங்களின் பிரயோகத் தன்மை மேம்படுத்தப்படும் என்பதுடன், தொழில்நிலைகளுக்கு பொருத்தமானவையாக அமைந்திருக்கச் செய்யும்.

பேராசிரியர். வீரசிங்கவின் பிரகாரம், மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் தற்காலிக தொழில்களில் பணியாற்றுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், சிறப்பாக செயலாற்றுவோருக்கு முழுநேர தொழிலை தொடரும் வாய்ப்புகள் வழங்கப்படும். “அதனூடாக அவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பிரயோக அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

தொழிற்துறை மற்றும் கல்விநிலையங்களுக்கிடையே முக்கிய மைல்கல்லாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை அமைந்துள்ளது. நாட்டில் காணப்படும் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன், புகழ்பெற்ற பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் அங்கமாகவும் அமைந்துள்ளது. NSBM Green பல்கலைக்கழகம் கல்விச் சேவைக்காக புகழ்பெற்ற நிலையமாக அமைந்துள்ளதுடன், உலகத் தரம் வாய்ந்த வசதிகளையும், புகழ்பெற்ற விரிவுரையாளர்கள் மற்றும் வணிகம், கணனி, பொறியியல் மற்றும் விஞ்ஞானம் போன்ற துறைகளில் பரந்தளவு பட்டப்படிப்புகள் மற்றும் பட்டப்பின்படிப்புகளையும் கொண்டுள்ளது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 49.7 பில்லியனையும், 2022 மார்ச் மாதமளவில் முதலீட்டு இலாகாவாக ரூ. 58.5 பில்லியனைக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், பல வருடங்களாக தொடர்ச்சியாக Great Place to Work© இனால் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், இலங்கையில் மில்லியன் டொலர் வட்ட மேசையில் (MDRT) முதல்தரத்தில் திகழ்கின்றது.