Preloader images
Preloader icon

காப்புறுதி ஆசியா விருதுகள் 2020 நிகழ்வில் ஆண்டின் சிறந்த உள்நாட்டு ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு

அத்துடன் ஆண்டின் சிறந்த தயாரிப்பு மற்றும் ஆண்டின் சிறந்த டிஜிட்டல் காப்புறுத்தித் திட்டம் ஆகிய விருதுகளையும் தனதாக்கியிருந்தது

காப்புறுதி ஆசியா விருதுகள் 2020 நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமைக்குரிய மூன்று விருதுகளை தனதாக்கியுள்ளது. இதில் ஆண்டின் சிறந்த உள்நாட்டு ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் (Domestic Life Insurer of the Year), ஆண்டின் சிறந்த புதிய காப்புறுதித் தீர்வு (New Insurance Product of the Year) மற்றும் ஆண்டின் சிறந்த டிஜிட்டல் காப்புறுதித்திட்டம் (Digital Insurance Initiative of the Year) ஆகியன அடங்கியுள்ளன.

வெவ்வேறு சந்தைச் சவால்கள் மத்தியில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி, சிறந்த வருமானத்தை பதிவு செய்யும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் காப்புறுதி ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது. 22 நாடுகளைச் சேர்ந்த எழுபதுக்கும் அதிகமான காப்புறுதி நிறுவனங்கள் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காப்புறுதி ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வு, தொற்றுப் பரவல் காரணமாக முதன் முறையாக டிஜிட்டல் மயமாக இடம்பெற்றது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட இலங்கையின் ஒரே ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது.

இந்த மூன்று விருதுகளை வெற்றியீட்டியமை தொடர்பில், யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், ”இந்த பெருமைக்குரிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் மூன்று முக்கிய பிரிவுகளில் நாம் கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எமது ஊழியர்கள், தொழில்நுட்பம், தீர்வுகள் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றில் முதலீடு செய்வது தொடர்பில் நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். அத்துடன், எதிர்காலத்துக்காக தொடர்ச்சியாக முதலீடு செய்யவும் எதிர்பார்க்கின்றோம். இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையின் முன்னோடி எனும் நிலையை மேலும் உறுதி செய்வதாக இந்த கௌரவிப்பு விருதுகள் அமைந்துள்ளன.” என்றார்.

மில்லிமன் தென்கிழக்காசியா மற்றும் இந்தியா ஆயுள் பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் ரிச்சர்ட் ஹொலோவே, KPMG சிங்கப்பூர் காப்புறுதி தலைமை அதிகாரி பிராங்க் டுபொய்ஸ், KPMG சிங்கப்பூர் காப்புறுதி மீளாய்வு தலைமை அதிகாரி ஸ்டீவன் கோ, PwC சிங்கப்பூர் காப்புறுதி தலைமையாளர் வூ ஷீ லீன் மற்றும் Ernst & Young இன் FSO Indirect Tax தலைமை அதிகாரி லீஸா டிரியு ஆகியோர் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் மத்தியஸ்தர்களாக செயலாற்றியிருந்தனர்.

இலங்கையின் அதிகளவு விருதுகளை தனதாக்கிய ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. மூன்று தசாப்த காலத்துக்கு அதிகமான அனுபவத்தையும், 18 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான சந்தை மூலதனத்தையும், 38 பில்லியன் ரூபாய் ஆயுள் நிதியத்தையும் மற்றும் ஜுன் 2020 இல் மூலதன போதுமை விகிதமான 405% ஐயும் கொண்டுள்ளது. இலங்கையர்களின் கனவை நனவாக்கிட யூனியன் அஷ்யூரன்ஸ் தனது ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதுடன், அதனூடாக கல்வி, சுகாதாரம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய தேவைகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்யவும் பங்களிப்பு வழங்குகின்றது. 76 கிளைகள் மற்றும் 3000 க்கும் அதிகமான உறுதியான பணியாளர்களுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் மக்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப தனது செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது.