Preloader images
Preloader icon

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, இலங்கையின் காப்புறுதி வரலாற்றில் இதுவரை பதிவாகியிருந்த ஆகக்கூடிய MDRT தகைமையாளர்கள் எண்ணிக்கையான 300 பேரை பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 74 சதவீத அதிகரிப்பாகும்.

சிறந்த ஐந்து (5) Top of the Table தகைமையாளர்கள், இருபது (20) Court of the Table தகைமையாளர்கள் மற்றும் இருநூற்று எழுபத்தைந்து (275) MDRT தகைமையாளர்களை பதிவு செய்து, துறையின் முன்னோடி எனும் நிலையை நிறுவனம் எய்தியுள்ளது.

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயுள் காப்புறுதி மற்றும் நிதிச் சேவைகள் துறையின் நியமச் சிறப்பை உறுதி செய்வதில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுயாதீன மற்றும் சர்வதேச கௌரவிப்பாக MDRT அமைந்துள்ளது. அதன் ஊழியர்கள் குறிப்பிட்டளவு தரகு மற்றும் வருமானத்தை எய்த வேண்டும் என்பதுடன், நிபுணத்துவ அறிவு, கண்டிப்பான ஒழுக்கமான நடத்தை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

சாதனையாளர்கள் தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றுப் பரவலுடன் எழுந்திருந்த சவால்களுக்கு மத்தியிலும், காப்புறுதி மற்றும் நிதிச் சேவைகள் நிபுணர்கள் உயர்ந்த கௌரவிப்பைப் பெற்று இலங்கையில் 1 ஆம் தர MDRT சாதனையாளர் எனும் நிலையை எய்தியுள்ளமை உண்மையில் எனக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. 300 சாதனையாளர்கள் எனும் உயர்ந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளமையானது, நாளாந்தம் எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற பங்காளர்கள் எனும் நிலையை எய்தும் வகையிலான எமது ஆலோசகர்களின் சிறந்த பணியை வெளிப்படுத்தியுள்ளது. எமது ஆலோசகர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், உயர்ந்த ஒழுக்க விதிமுறைகளைப் பின்பற்றி சிறந்த வினைத்திறனைப் பதிவு செய்வதில் பங்காற்றியிருந்த எமது சகல ஆலோசகர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது வாடிக்கையாளர்களுக்கு தமது கனவுகளை எய்துவதில் உதவிகளை வழங்கக்கூடிய வகையில் எமது ஆலோசகர்களின் வினைத்திறனைக் கட்டியெழுப்புவதில் நாம் தொடர்ந்தும் ஆதரவளிக்க வேண்டும். எம்மீது நம்பிக்கை கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் மீது நாம் என்றும் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.

விற்பனைச் செயலணியினருக்கு சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் அவர்களுக்கு வலுவூட்டும் வகையில் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பதிலும், நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், தொழிற்துறையின் முன்னோடியான கௌரவிப்புகளை வழங்குவதிலும் நிறுவனம் தொடர்ந்தும் உறுதியாக கவனம் செலுத்தி வருகின்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “பிரிவுகள் MDRT தகைமையாளர்களின் எண்ணிக்கை சாதனை மிகுந்த பெறுமதியை எய்தியுள்ளமையையிட்டு முகவர் மற்றும் கூட்டாண்மை வியாபாரப் பிரிவு மிகவும் பெருமை கொள்கின்றது. யூனியன் அஷ்யூரன்ஸ் முகவர்கள் மற்றும் நிதி ஆலோசகர்கள் உயர்ந்த நிலையை எய்துவதை உறுதி செய்வதில் யூனியன் அஷ்யூரன்ஸ் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இது மேலும் உறுதி செய்துள்ளது. அறிவார்ந்த, செயற்திறன் மிக்க மற்றும் ஒழுக்கமான விற்பனை ஊழியர்கள் சேவைச் சிறப்பின் மையமாகத் திகழ்கின்றனர் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். சிறந்த வாடிக்கையாளர் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் காண்பிக்கும் முக்கியத்துவத்தை மேலும் உறுதி செய்யும் வகையிலும், சர்வதேச நியமங்களை நிறுவனம் தொடர்ச்சியாக எய்துவதை உறுதி செய்யும் வகையிலும் UA Premier Club இன் அறிமுகம் அமைந்துள்ளது.” என்றார்.

பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் முதல் தர பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராக வளர்ச்சி கண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பாங்கசூரன்ஸ் பிரிவைக் கொண்டுள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். நாட்டின் மாபெரும் பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநர் எனும் வகையில், எமது தகைமை வாய்ந்த மற்றும் அனுபவம் மிக்க முகவர்களினூடாக, சிறந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது காப்புறுதி உறவு பேண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மற்றும் கடின உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் Circle of Excellence என்பது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக அவர்களுக்கு சிறந்த வெகுமதிகளை அனுபவிப்பதற்கும், தொழிற்துறையில் கௌரவிப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 15.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 47.5 பில்லியனையும், 2021 செப்டெம்பர் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 250% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.