Preloader images
Preloader icon

சிறுவர்களுக்கான கல்விப் பாதுகாப்புடன் கூடிய திட்டம்

ஜுலை 16, 2020, கொழும்பு. யூனியன் அஷ்யூரன்ஸ் தனது புதிய காப்புறுதித் திட்டமான Sisumaga+ ஐ அறிமுகம் செய்துள்ளது. பெற்றோர்களுக்கு, தமது சிறுவர்களின் எதிர்கால உயர் கல்விச் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் தீர்வை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம், எதிர்காலக் கல்வி மைல்கற்களை எய்துவதற்கு பொருத்தமான மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய பிரதிபலன்களை வழங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் நிலவும் நெருக்கடியான சூழல், எதிர்காலத்துக்கு திட்டமிட புதிய வழிமுறைகளை தோற்றுவித்துள்ளது. பெருமளவான பெற்றோர்கள் தமது சிறுவர்களின் உயர் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு முன்கூட்டியே திட்டமிடத் தவறுகின்றனர். மேலும், அதிகரித்துச் செல்லும் செலவீனங்கள், காகிதாதிகள், தனியார் வகுப்புகள், பாடப் புத்தகங்கள், தங்குமிட வசதிக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்து போன்ற அதிகரித்துச் செல்லும் மேலதிக செலவுகள் போன்றன காரணமாக, முன்னரை விட தற்போது சிறுவர்களின் எதிர்காலத்துக்காக அவர்களின் சிறு வயது முதல் திட்டமிடுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. அதிகரித்துச் செல்லும் பணவீக்கத்துக்கு நிகராக பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்விச் செலவுகளை சாதாரணமாக தற்போதே ஊகித்துக் கொள்ள முடியும் என்பதுடன், இந்தத் தேவையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக கல்விப் பாதுகாப்புத் திட்டங்களை எய்த முடியும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் தமது விசேட அறிக்கையில், ‘இலங்கையில் உயர் தரப் பரீட்சையில் சித்தி பெறும் மாணவர்களில் குறிப்பிட்டளவானவர்களுக்கு மாத்திரமே உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் இணைந்து இலவசமாக உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது. இதன் காரணமாக, பெருமளவான மாணவர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் காணப்படும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால், குடும்பங்களின் செலவுகள் பெருமளவு அதிகரிக்கின்றன. இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் ளுளைரஅயபயூ திட்டத்தை நாம் அறிமுகம் செய்துள்ளதுடன், சிறந்த முதலீட்டுத் திட்டமாக இது அமைந்துள்ளதுடன், எதிர்பாராதவிதமாக உங்களுக்கு ஏற்படும் உயர் கல்விச் செலவு அல்லது உங்களுக்கு ஏற்படும் இழப்பு போன்றவற்றிலிருந்து சிறுவர்களுக்கு தமது உயர் கல்வியைத் தொடரத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இது அமைந்துள்ளது.’ என்றார்.

மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க கல்வி நிதியத்தை கட்டியெழுப்பும் வகையில் Sisumaga+ வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மாதாந்த பங்கிலாபங்களின் பிரகாரம் திரட்டப்படும் வருடாந்த வட்டி நிதியத்துக்கு சேர்ப்பதுடன், முதிர்வின் போது லோயல்டி போனஸ் கொடுப்பனவாக 15% வழங்கப்படுவதனூடாக இந்த நிதியம் தொடர்ந்தும் வளர்ச்சியடையும். சராசரி கல்வித் திட்டம் என்பதிலிருந்து வேறுபட்டதாக Sisumaga+ இனூடாக, காப்புறுதிதாரருக்கு எதிர்பாராத மரணம் சம்பவிக்கும் போது, மொத்தத் தொகை வழங்கப்பட்டு, சிறுவர்களின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பங்களிப்பு வழங்கப்படும். அத்துடன், சிறுவர்களின் எதிர்கால கல்வித் தேவையை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான நிதியத்தைக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கு யூனியன் அஷ்யூரன்சிடமிருந்து இந்நிதியம் முதிர்ச்சியடையும் வரை தவணைக்கட்டணங்கள் தொடர்ந்தும் செலுத்தப்படும். அவசர நிலைகளின் போது எழும் நிதித் தேவையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக நிதியத்திலிருந்து பகுதியளவு தொகையை மீளப் பெற்றுக் கொள்ளக்கூடிய மேலதிக வசதியையும் இந்தத் திட்டம் வழங்குகின்றது.

இலங்கையில் இயங்கும் மாபெரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன், ஆயுள் பாதுகாப்பு வியாபாரத்தில் தொடர்ந்தும் தன்னை ஈடுபடுத்தி, அதனூடாக மக்களுக்கு தமது கனவுகளை நனவாக்கிக் கொள்ள வலுவூட்டுகின்றது. 1987 ஆம் ஆண்டு முதல் ஆயிரக் கணக்கான இலங்கையர்களுக்கு மனநிம்மதியை பெற்றுக் கொடுத்த வண்ணமுள்ளது.