Preloader images
Preloader icon

பெருமளவு பரிசுகளுடன் விறுவிறுப்பான ஊக்குவிப்புத் திட்டம்!

ஜோன் கீல்ஸ் கம்பனியின் துணை நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022 திட்டத்தை பிரம்மாண்டமாக அறிமுகம் செய்துள்ளது. 2022 மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பெறுமதி வாய்ந்த ஸ்மார்ட் சாதனங்களை வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் தெரிவை கொண்டுள்ள இந்த ஊக்குவிப்புத் திட்டம் ஜனவரி 1ஆம் திகதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2022 மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக, ஆகக்குறைந்தது ரூ. 15000 மாதாந்த தவணைக் கட்டணத்துடன் (காலாண்டுக்கு ரூ. 45000, அரையாண்டுக்கு ரூ. 75000.00) காப்புறுதித் திட்டத்தை ஆரம்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பெறுமதி வாய்ந்த பரிசுகளை வெற்றியீட்டும் வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022 ஐ அறிமுகம் செய்வதையிட்டுநாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட லைஃவ் ஸ்டைல் போனஸ் திட்டங்களைப் போன்று, எமது புதிய காப்புறுதிதாரர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளை வெகுமதியாக வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம். வாழ்க்கைமுறைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் உறவுகளை நாம் பேணுவதுடன், தயாரிப்பு பிரிவு சுகாதாரம், ஓய்வூதியம், கல்வி மற்றும் முதலீடு போன்றவற்றைக் கொண்டுள்ளோம். எமது புதிய காப்புறுதிதாரர்களின் வாழ்க்கை முறைகளை வளமூட்டுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022 இனால் வழங்கப்படும் பரிசுகளில் முதல் பரிசாக iPhone 13 Pro Max 512GB வழங்கப்படவுள்ளதுடன், iPad Air 2021 with Apple Pencil 2nd Gen & Magic Keyboard, Smart TVs, i5 11th Generation laptops, A-series smartphones மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் வவுச்சர்கள் போன்றன வழங்கப்படவுள்ளன.

பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022 அறிமுகத்துடன், எமது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கி அவர்களுக்கு பெறுமதியை அதிகரித்துள்ளோம். இந்த வெகுமதிகள் காப்புறுதிதாரருக்கு மாத்திரமன்றி, முழுக் குடும்பத்துக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், பிரத்தியேகமான வாடிக்கையாளர் அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும்.” என்றார்.

மேலதிக தகவல்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் ஹொட்லைன் இலக்கமான 1330 உடன் தொடர்பு கொள்ளவும். நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் மேலதிக தகவல்களை பார்வையிடுவதற்கு www.unionassurance.com/lifestyle-bonus-2022/ta எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால், யூனியன் அஷ்யூரன்ஸ் போட்டி பதிவு WP/GT/5609 ஆக காணப்படுகின்றது. இதனூடாக, அரசாங்கத்தினால் சட்ட ரீதியில் இந்தப் போட்டிக்கான அனுமதி பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 15.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 47.5 பில்லியனையும், 2021 செப்டெம்பர் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 250% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.