Preloader images
Preloader icon

ஒக்டோபர் 1ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், ‘Union Assurance Retirement Calculator’ ஐ அறிமுகம் செய்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் வேகமாக முதிர்வடைந்து வரும் சனத்தொகையினரை கொண்ட நாடாக இலங்கை மாறிவரும் நிலையில், பொது மக்களுக்கு தாம் பணியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் நிதியளவில் தயார் நிலையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த அறிமுகம் மேலும் உணர்த்தியுள்ளது.

Union Assurance Retirement Calculator என்பது பாவனையாளருக்கு நட்பான ஒன்லைன் செயலியாக அமைந்துள்ளது. www.unionassurance.com/retirementcalculator எனும் இணையத்தளத்தில் இதனை பார்வையிட முடியும். தமது நிதிசார் தயார்நிலையை மதிப்பாய்வு செய்வதற்கு தனிநபர்களை வலுவூட்டும் வகையில் தமது தற்போதைய வயது, பணியிலிருந்து ஓய்வுபெற எதிர்பார்க்கும் வயது, தற்போதைய சூழலில், மாதாந்தம் எதிர்பார்க்கும் வருமானம் மற்றும் முதுமை காலத்துக்காக தற்போது கொண்டுள்ள சேமிப்பு (தெரிவுக்குரியது) போன்ற தகவல்களை உள்ளீடு செய்து பெற்றுக் கொள்ள முடியும்.

பணவீக்கத்தின் தாக்கம் மற்றும் வட்டி வீதங்கள் ஆகியவற்றை கணிப்பிடுகையில் கவனத்தில் கொண்டு பாவனையாளர்களுக்கு இந்தக் காரணிகள் எவ்வாறு அவர்களின் நிதித் தேவைகளில் தாக்கம் செலுத்தும் போன்ற அம்சங்கள் அடங்கிய பரிபூரண தகவல்களைக் கொண்ட உள்ளம்சங்களின் காரணமாக இந்த கணிப்பான் மிகவும் விசேடமானதாக அமைந்துள்ளது.
வயது வேறுபாடின்றி அல்லது சூழ்நிலை வேறுபாடின்றி, பணியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தமாகும். Union Assurance Retirement Calculator ஐ பார்வையிட்டு தமது தயார்நிலையை அறிந்து கொள்ளுமாறு அனைவரையும் நிறுவனம் ஊக்குவிக்கின்றது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 ஜுன் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.0 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 60.4 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.