Preloader images
Preloader icon

இலங்கையின் மாபெரும் காப்புறுதித் தீர்வுகள் வழங்குநர்களான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, ”உங்கள் வாழ்க்கைக்கு, எமது பலம்” எனும் தனது உறுதி மொழியின் பிரகாரம், கொவிட்-19 தொற்றுப் பரவல் காலப்பகுதியில் காப்புறுதிதாரர்களுக்கு இலவச காப்பீட்டை வழங்க முன்வந்துள்ளது.

இலவச கொவிட்-19 காப்பீடு மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே காணப்படும் காப்புறுதிதாரர்கள் மற்றும் புதிய காப்புறுதிதாரர்களுக்கு உறுதியற்ற சூழ்நிலைகளில் மேலதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த காப்பீட்டினூடாக காப்புறுதிதாரர் ஒருவருக்கு தலா 1 மில்லியன் ரூபாய் வரையான இலவச உயிரிழப்பு காப்பீடு வழங்கப்படுகின்றது. இந்த இலவச காப்பீடு 2020 நவம்பர் 2ஆம் திகதி முதல் 01 டிசம்பர் வரையான ஒரு மாத காலப்பகுதிக்கு செல்லுபடியாகும்.

இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவல் ஆரம்பித்த காலம் முதல், தனிமைப்படுத்தல் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை பண அனுகூலங்களை வழங்க ஆரம்பித்த முதலாவது ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. நிறுவனம் தனது பெறுமதி வாய்ந்த சகல காப்புறுதிதாரர்களுக்கு இந்தத் திட்டத்தினூடாக பெறுமதி சேர்ப்பதுடன், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழும் வைத்தியசாலை அனுமதிகளின் போது தினசரி வைத்தியசாலை அனுமதிக் கட்டணத்தை 2020 ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு வழங்க முன்வந்துள்ளது.

உறுதியற்ற சூழ்நிலையில், யூனியன் அஷ்யூரன்ஸ் தனது காப்புறுதிதாரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த காப்பீட்டை வழங்க முன்வந்துள்ளதுடன், இந்த சூழ்நிலை காரணமாக, எழக்கூடிய எந்தவொரு நிதிநெருக்கடிகளுக்கும் காப்புறுதிதாரரையும் குடும்பத்தாரையும் முகங்கொடுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது உலகளாவிய ரீதியில் சுகாதார, பொருளாதார மற்றும் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சகல பிரிவுகளையும் சேர்ந்த மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எமது காப்புறுதிதாரர்களுக்கு இந்த இலவசமான காப்பீட்டை உரிய காலத்தில் வழங்குவதுடன், காப்புறுதிதாரர்களின் குடும்பத்தாருக்கு தமது எதிர்காலப் பாதுகாப்பு தொடர்பில் மனநிம்மதியுடன் திகழ முடியும். இந்த காப்பீட்டின் விசேடத்துவம் யாதெனில், ஏற்கனவே காணப்படும் காப்புறுதிதாரர்களுக்கு மாத்திரம் இது மட்டுப்படுத்தப்படாமல், புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது. இதனூடாக, இலங்கையர்களுக்கு தமது பாதுகாப்பான எதிர்காலத்தை அணுக ஏதுவாக அமைந்துள்ளது.” என்றார்.

இந்த இலவச கொவிட்-19 காப்பீடு தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் 24 மணி நேர ஹொட்லைன் இலக்கமான 1330 உடன் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் ஊடாக தொடர்பை ஏற்படுத்த [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும் அல்லது நிறுவனத்துடன் chat செய்வதற்கு www.unionassurance.com எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.