Preloader images
Preloader icon

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், பெருமைக்குரிய சிறந்த முகாமையாளர் விருதுகள் 2013 இல் உயர் கௌரவிப்புகளை பெற்றுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.

CLA Coaching & Consulting Inc.இனால் Colombo Leadership Academy உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு, மக்கள் முகாமைத்துவத்தில் சிறந்த அடையாளமாக அமைந்திருப்பதுடன், சிறந்த தலைமைத்துவ செயற்பாடுகள், ஊழியர்கள் விருத்தி மற்றும் மேம்பாடு மற்றும் சிறந்த பெறுபேறுகளை கட்டியெழுப்புவது போன்றவற்றில் சிறந்த செயற்பாடுகளை பேணும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் அமைந்திருந்தது.

தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக சிறந்த முகாமையாளர்களுடனான நிறுவனம் எனும் உயர் விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் பெற்றுக் கொண்டது. தமது ஊழியர்களின் விருத்தியில் நீண்ட கால அடிப்படையிலான முதலீடுகள் மற்றும் சிறந்த தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ பண்புகளை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் யூனியன் அஷ்யூரன்ஸின் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும், நிறுவனத்தின் ஏழு சிறந்த முகாமையாளர்கள் அவர்களின் ஒப்பற்ற வினைத்திறனுக்காக கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்களில், பெறுபேறுகள் மறறும் நிறைவேற்றல் சிறப்புக்கான சிறந்த முகாமையாளர்கள் பிரிவில் தமித விக்ரமதுங்க மற்றும் திலுக்ஷன் டி சில்வா ஆகியோர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் சிறந்த தலைமைத்துவத் திறன்கள், தந்திரோபாயச் சிந்தனை மற்றும் சிறந்த பெறுபேறுகளை எய்துவதற்கான அர்ப்பணிப்பு போன்றன ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததுடன், கொண்டாடப்பட்டிருந்தன. வளர்ச்சிக்காக ஏனையவர்களை பயிற்றுவித்தலுக்குரிய சிறந்த முகாமையாளர்கள் பிரிவில் லச்சினி சித்ரசேன மற்றும் நயன விதானவசம் ஆகியோர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தமது அணி அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி, வலுச் சேர்ப்பதில் தமது சிறந்த ஆற்றல்களை இவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அணி வினைத்திறன் மற்றும் கைகோர்ப்புக்கான சிறந்த முகாமையாளர் பிரிவில் இமந்திகா ரணவீர, தஹாமி பத்திரன மற்றும் சமிந்த எதிரிசிங்க ஆகியோர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், குழுநிலைச் செயற்பாடுகள் மற்றும் கைகோர்ப்பு ஆகியவற்றில் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “சிறந்த முகாமையாளர் விருதுகளில் வெற்றியீட்டிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சிறந்த தலைமைத்துவம் மற்றும் திறமையான பணியாளர் குழுவைக் கட்டியெழுப்புவதில் எமது ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக இந்த சாதனைகள் அமைந்துள்ளன. பெறுபேறுகளை எய்துதல், வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் தமது அணிகளுடன் கைகோர்த்து செயலாற்றும் பண்பை கட்டியெழுப்பல் போன்றவற்றுக்கான தமது ஆற்றலை எமது முகாமையாளர்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளனர். சிறந்த முகாமையாளர்களுடனான நிறுவனம் எனும் தொடர் கௌரவிப்பை யூனியன் பெற்றுக் கொண்டுள்ளதனூடாக, உயர் வினைத்திறன் வாய்ந்த பணியாளர்களில் முதலீடுகளை மேற்கொள்வதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், சிறந்த மக்கள் முகாமைத்துவ தந்திரோபாயங்களையும் உணர்த்துகின்றது. எமது ஊழியர்களுக்கு முன்னேற்றகரமான சூழலை ஏற்படுத்துவதில் நாம் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்குவதுடன், துறையில் தெரிவுக்குரிய தொழில் வழங்குநர் எனும் எமது நிலையை மேலும் உறுதி செய்வதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் அனீஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சிறந்த சொத்தாக எமது ஊழியர்கள் அமைந்துள்ளனர் என்பதில் யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம், அவர்களுக்கு கைகொடுக்கும் மற்றும் வலுவூட்டும் பணியிடச்சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் எமது அர்ப்பணிப்புக்கு கிடைத்த ஆதாரமாக இந்த விருதுகள் அமைந்துள்ளன. தலைமைத்துவ சிறப்புசார் கலாசாரத்தை ஊக்குவிப்பதாக இந்த கௌரவிப்புகள் அமைந்திருப்பதுடன், ஈடுபாட்டுடனான பணியாளர் குழுவை கட்டியெழுப்புவதற்கான எமது அர்ப்பணிப்பை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது. எமது முகாமையாளர்களின் சாதனைகளையும், அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தையும் நாம் கொண்டாடுவதுடன், எமது தொடர்ச்சியான வெற்றிகரமான செயற்பாடுகளில் முக்கிய பங்களிப்பையும் ஆற்றியுள்ளது.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 19.4 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 57.7 பில்லியனையும், 2023 மார்ச் மாதமளவில் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.