Preloader images
Preloader icon

கூட்டாண்மை உலகில் வளர்ந்து வரும் நட்சத்திரம் எனும் தனது நிலையை மேலும் மேம்படுத்தும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே, மற்றுமொரு பெருமைக்குரிய விருதை தனதாக்கியுள்ளார்.

ஆசியாவின் நம்பிக்கையை வென்ற ஆயுள் முகவர்கள் மற்றும் ஆலோசகர்கள் விருதுகள் 2022 இல் ஆண்டின் சிறந்த இளம் நிறைவேற்று அதிகாரிக்கான விருதை இவர் பெற்றுக் கொண்டார். ஜுலை 26 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், இலங்கையிலிருந்து விருதை வெற்றியீட்டிய ஒரே நபராகவும் இவர் திகழ்ந்தார்.

விந்தியா தனது தொழில் வாழ்க்கையில் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தில் இவர் தனது பணியை ஆரம்பித்ததுடன், பிரிவின் நிதிக் கட்டுப்பாட்டாளராக 29 வயதில் நியமனம் பெற்றதனூடாக இளம் வயதில் இந்தப் பதிவயைப் பெற்றநபராகத் திகழ்ந்திருந்தார். பின்னர் Cinnamon Hotels மற்றும் JKHவிருந்தோம்பல் துறையினதும் நிதிப் பிரிவின் உப தலைவராக இவர் பதவி உயர்வைப் பெற்றிருந்தார்.

2021 நடுக்காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரியாக விந்தியா தெரிவாகியிருந்தார். யூனியன் அஷ்யூரன்ஸை நாட்டின் முன்னணி பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராக திகழச் செய்வதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார். 2021 ஆம் ஆண்டில் ரூ. 1 பில்லியன் ANBP ஐ கடந்திருந்தது. இலங்கையரின் கனவுக்கு வலுச் சேர்ப்பது எனும் நிறுவனத்தின் நோக்கத்துக்கமைய, பல பாங்கசூரன்ஸ் பங்காண்மைகளை இவர் முன்னெடுத்திருந்ததுடன், இலங்கையின் முதல் தர பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநர் எனும் நிலைக்கு உயர்வதற்கு ஆதரவளித்திருந்தார். 600 க்கும் அதிகமான கிளைகளை இந்த வலையமைப்பினுள் உள்வாங்குவதில் இவர் பங்காற்றியிருந்தார்.

அவரின் தலைமைத்துவத்தின் கீழ், பாங்கசூரன்ஸ் பங்காண்மைகளினூடாக 67 MDRT அங்கத்தவர்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இதில் 10 Court of the Table தகைமையாளர்கள் மற்றும் 2 Top of the Table தகைமையாளர்களும் அடங்குவர். மேலும், இவர் பாங்கசூரன்ஸ் விற்பனை செயலணிக்கு சிறந்த வெகுமதி மற்றும் கௌரவிப்புத் திட்டமான Circle of Excellence ஐ அறிமுகம் செய்திருந்தார். யூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நாளிகையை மீளமைப்பு செய்வதற்கு இவர் ஆதரவு வழங்கியிருந்ததுடன், விற்பனை மூலமாக இதை செயற்படுத்தியிருந்தமை மாத்திரமன்றி, lifestyle app ஆகவும் கட்டியெழுப்பி, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தியிருந்தார்.

நபர்களை தமது முழு ஆற்றலையும் எய்தும் வகையில் ஊக்குவிப்பதில் விந்தியா ஆர்வம் கொண்டுள்ளதுடன், இளைஞர் ஊக்குவிப்பு மற்றும் பாலின சமத்துவம் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றார். தொழில்-வாழ்க்கை சமநிலை முன்னெடுப்புகளை இவர் தொடர்ந்துள்ளதுடன், வெற்றிகரமான அணிக்கட்டியெழுப்புபவராக கருதப்படுகின்றார். ONEJKH – JKH Group DE&I (Diversity, Equity, and Inclusion) திட்டத்தின் பிரதான அணித் தலைவராக விந்தியா திகழ்ந்தார். இந்தத் திட்டம் JKH தவிசாளரின் விருதை சுவீகரித்திருந்தது. ஜேன் எம். க்ளவுஸ்மன் வியாபாரத்தில் பெண்கள் விருதையும் இவர் பெற்றுள்ளார். கூட்டாண்மைத் துறையில் 2021ஆம் ஆண்டின் வனிதாபிமான தேசிய விருதையும் இவர் சுவீகரித்துள்ளார். புதிய வழிமுறைகளில் சாதனை படைப்பது மற்றும் உள்நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கும் பெண்களை கௌரவிக்கும் திட்டமாக வனிதாபிமான அமைந்துள்ளது.

நிபுணத்துவ ரீதியில், இவர் தகைமை வாய்ந்த பட்டயக் கணக்காளராக திகழ்வதுடன், இறுதிப் பரீட்சையில் நாட்டில் முதல் ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். இவர் பல கல்விசார் மற்றும் நிபுணத்துவ தகைமைகளையும் கொண்டுள்ளார்.