Preloader images
Preloader icon

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 56 ஆவது வருடாந்த நிதி அறிக்கைகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்றுள்ளது. காப்புறுதிப் பிரிவில் வருடாந்த நிதி அறிக்கையிடலுக்கான வெள்ளி விருதை நிறுவனம் சுவீகரித்திருந்தது. நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சிறந்த ஆளுகை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்றவற்றை ஊக்குவிக்கும் மீண்டெழும் மற்றும் காப்பு நடவடிக்கைகளுக்காக இந்த பெருமைக்குரிய கௌரவிப்பு யூனியன் அஷ்யூரன்சுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த சாதனை தொடர்பில் பிரதம நிதி அதிகாரி ஆஷா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “56 ஆவது வருடாந்த நிதி அறிக்கையிடல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் காப்புறுதி நிறுவனங்கள் பிரிவில் வெள்ளி விருதை பெற்றுக் கொள்ள முடிந்ததையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒன்றிணைப்பு போன்றவற்றில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இந்த விருது மீள உறுதி செய்வதுடன், சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் நிதி அறிக்கையிடலில் சிறப்பை பேணியிருந்தமையையும் உறுதி செய்திருந்தது.” என்றார்.

பங்காளர்களின் தகவல் தேவைகளை சிறந்த முறையில் நிவர்த்தி செய்வதற்காக ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல் கொள்கைகள் மற்றும் அடிப்படை உள்ளம்சங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் பின்பற்றுகின்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதி அறிக்கை, ‘360 of Value’ எனும் நாமத்தில் வெளியிடப்பட்டிருந்தது. நிறுவனத்தின் வெளியக சூழல், தந்திரோபாயம், வள ஒதுக்கீடு, வியாபார மாதிரி, வினைத்திறன், கூட்டாண்மை ஆளுகை மற்றும் கம்பனியின் உள்ளம்சங்கள் போன்றவற்றின் மேலோட்டத்தையும் சுருக்கமான ஆய்வையும் வழங்குவதாக அமைந்திருந்தது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 15.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 47.5 பில்லியனையும், 2021 செப்டெம்பர் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 250% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.