Preloader images
Preloader icon

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், வயம்ப பல்கலைக்கழகத்தின் காப்புறுதி மற்றும் விலை மதிப்பீடு திணைக்களம் ஆகியன புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு வயம்ப பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃவ் மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் ஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டு, உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

பட்டம் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது இந்த கைகோர்ப்பின் பிரதான இலக்காக அமைந்துள்ளதுடன், ஆயுள் காப்புறுதித் துறையில் பிரயோக அனுபவம் மற்றும் வெளிப்பாட்டை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கின்றது. இந்தப் பங்காண்மையினூடாக கல்விசார் உள்ளம்சங்களுடன் இணைந்த தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது. நிபுணத்துவமான சூழலில் தமது கோட்பாட்டு ரீதியான அறிவை பிரயோகிக்கவும், உலகத்தரமான வாய்ப்புகள் வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

கைகோர்ப்பு தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “ஆயுள் காப்புறுதித் துறையின் இளம் திறமைசாலிகளின் எதிர்காலத்தை சீரமைப்பதற்காக வயம்ப பல்கலைக்கழகத்துடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அடுத்த தலைமுறை தொழிற்துறை தலைவர்களை தயார்ப்படுத்தும் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு அவசியமான திறன்கள் மற்றும் அனுபவங்களை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை இந்த கைகோர்ப்பு மேலும் உறுதி செய்துள்ளது.” என்றார்.

வயம்ப பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர். உதித் ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் உடனான இந்த கைகோர்ப்பினூடாக எமது பட்டம் பயிலும் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பிரயோக வெளிப்படுத்தல்களுக்கு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதுடன், தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய தன்மையையும் மேம்படுத்தியுள்ளது. கல்வி மற்றும் தொழிற்துறை ஆகியவற்றுக்கிடையே காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கு இவ்வாறான பங்காண்மைகள் முக்கியமானவை என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 செப்டெம்பர் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 23.9 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 63.9 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.