Preloader images
Preloader icon

இலங்கையில் பாங்கசூரன்ஸ் பிரசன்னத்தை மேம்படுத்தும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி ஆகியன தமது 7 வருட கால பங்காண்மையை நீடித்துள்ளன. இந்தப் பங்காண்மை நீடிப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு 2022 மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த உடன்படிக்கையில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் மற்றும் யூனியன் வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க ஆகியோர் கையொப்பமிட்டிருந்தனர். இந்த நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே, யூனியன் வங்கியின் நுகர்வோர் வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் சாயா ஜயவர்தன, யூனியன் வங்கியின் நுகர்வோர் தீர்வுகள் மற்றும் மாற்று நாளிகைகள் உப தலைவர் மனிஷா பெர்னான்டோ மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் நாளிகைத் தலைமை அதிகாரி சாமர நதிசாந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னணி காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி ஆகியன கடந்த காலங்களில் பரஸ்பர அனுகூலமளிக்கும் பங்காண்மையை பேணியிருந்ததுடன், பாங்கசூரன்ஸ் வாடிக்கையாளர்களினூடாக பயன்களை பெற்றிருந்தன. 2016 ஆம் ஆண்டில் இந்தப் பங்காண்மை ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், 2018 ஆம் ஆண்டு முதல் பிரத்தியேகமானதாக அமைந்துள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் பங்காண்மையை புதுப்பித்துள்ளமையானது இரு நிறுவனங்களுக்கும் வெற்றியளிக்கும் நகர்வாக அமைந்துள்ளது. வங்கியின் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆயுள் காப்புறுதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க எமக்கு ஏதுவாக அமைந்திருக்கும் என்பதுடன், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய ஒப்பற்ற அனுபவத்தை வழங்கக்கூடியதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.

கோம்ஸ் மேலும் குறிப்பிடுகையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் இந்தப் பங்காண்மையினூடாக, நாட்டினுள் பாங்கசூரன்ஸ் சேவைகளை மேலும் விஸ்தரிப்பு செய்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுவூட்டுவதுடன், பாதுகாப்புக்கு காணப்படும் இடைவெளியை குறைப்பதாக அமைந்திருக்கும். சேவைச் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் சௌகரியம் ஆகியன பாங்கசூரன்ஸின் உள்ளக அம்சங்களாக அமைந்துள்ளன.” என்றார்.

இந்தப் பங்காண்மை நீடிப்பு தொடர்பில் யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், பாங்கசூரன்ஸ் என்பது வேகமாக வளர்ந்து வருவதுடன், வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்த்து, மேம்படுத்தப்பட்ட நிதியியல் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவும், நீண்ட கால பாதுகாப்பை இந்த நெருக்கடியான காலப்பகுதியில் வழங்குவதாக அமைந்திருக்கும் என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கியுடனான பங்காண்மை தொடர்ந்து உறுதியாக வளர்ச்சியடையும். இந்தக் கைகோர்ப்பினூடாக நாட்டின் முன்னணி பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராக திகழச் செய்துள்ளது. வங்கியியல் சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு எமது புத்தாக்கமான தீர்வுகளுடன் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு நிபுணத்துவம் மற்றும் சிறந்த நிதியியல் ஆலோசனைகளை வழங்குவோம்.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் – யூனியன் வங்கி பங்காண்மையினூடாக இரு நிறுவனங்களின் இலாகாப் பெறுமதி மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைபேறான வியாபார வளர்ச்சிக்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது. ஒரே கூரையின் கீழ் பரந்தளவு புத்தாக்கமான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை அணுகுவதற்கு வங்கியின் வாடிக்கையாளர் இருப்புக்கு வலுச் சேர்த்துள்ளதுடன், ஒரே கூரையின் கீழ் தமது வங்கித் தேவைகளை நிவர்த்தி செய்யும் தீர்வுகளையும் வழங்குகின்றது.

இலங்கையின் உயர் மூலதன இருப்பைக் கொண்ட வங்கிகளில் ஒன்றாக யூனியன் வங்கி திகழ்வதுடன், சர்வதேச முதலீட்டு நிறுவனமான TPG இன் வலிமையினூடாக ஆதரவளிக்கப்பட்டு இயங்குவதுடன், 25 வருடங்களுக்கு அதிகமான சேவைச் சிறப்பைக் கொண்டுள்ளது. நிதியியல் உறுதித்தன்மை மற்றும் சர்வதேச தொடர்புகள் போன்றவற்றுடன் உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருப்பதுடன், தனிநபர், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் கூட்டாண்மை பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு நிதித் தீர்வுகளை வழங்குகின்றது. யூனியன் வங்கி மற்றும் அதன் தீர்வுகள் தொடர்பான மேலதிக தகவல்களை அதன 24 மணி நேர தொடர்பு நிலையத்துடன் 011 5800 800 ஊடாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.unionb.com எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும் முடியும்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 49.7 பில்லியனையும், 2022 மார்ச் மாதமளவில் முதலீட்டு இலாகாவாக ரூ. 58.5 பில்லியனைக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், பல வருடங்களாக தொடர்ச்சியாக Great Place to Work© இனால் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், இலங்கையில் மில்லியன் டொலர் வட்ட மேசையில் (MDRT) முதல்தரத்தில் திகழ்கின்றது.