Preloader images
Preloader icon

2020,உலகளாவிய ரீதியில் நாம் வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தொற்றுப் பரவல் என்பது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பாலும் சகல துறைகளும் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன. நிதிச்சூழலில், ஊழியர்களை பாதுகாப்பாக பேணவும், வாடிக்கையாளர்களுக்கு வழமையான சேவைகளை புதிய வழிமுறைகளை பின்பற்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை பேணுவதில் தனது செயற்பாடுகளை முடக்க நிலை அமுலிலிருந்த காலப்பகுதியில் சிறந்த வகையில் முன்னெடுத்திருந்தது என்பதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

இலங்கையின் மாபெரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் என்பதுடன், ஜோன் கீல்ஸ் குரூப்பின் பின்புலத்தில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொற்றுப் பரவல் காரணமாக எழுந்த சவால் நிலைகளுக்கு முகங்கொடுப்பதில் தனது நவீன தொழில்நுட்பம், பரிபூரண வாடிக்கையாளர் சென்றடைவு நிகழ்ச்சிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டங்களினூடாக பணியாற்றும் மாற்றியமைக்கப்பட்ட பணியாற்றல் சூழல் ஏற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், ”பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், மீண்டெழல் மற்றும் பின்பற்றலை வெளிப்படுத்த வேண்டிய காலமாக அமைந்துள்ளது. எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எமது வழிகாட்டல்களை பின்பற்றுவதுடன், எமது டிஜிட்டல் திறன் காரணமாக, எமக்கு பரீட்சியமில்லாத செயற்படும் மாதிரிக்கு எம்மால் மாறக்கூடியதாக இருந்தது. உங்கள் வாழ்க்கைக்கு எமது பலம் எனும் உறுதி மொழியின் பிரகாரம் எம்மால் செயலாற்ற முடிந்ததுடன், எமது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அவசியமான பொறுப்பு வாய்ந்த காப்புறுதி வழங்குநர் எனும் வகையில் அவசியமான சேவைகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது.” என்றார்.

பணியாற்றும் சூழலை மாற்றியமைத்துக் கொள்ள முடியாமை எனும் பிரச்சனைக்கு பெருமளவான நிறுவனங்கள் முகங்கொடுத்திருந்தன. யூனியன் அஷ்யூரன்சின் வியாபாரத் தொடர்ச்சித் திட்டம் என்பது, ஊழியர்களுக்கு வீடுகளிலிருந்தவாறு பணியாற்றுவதற்கு வசதியை ஏற்படுத்தியதுடன், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி, பணியாற்றும் சூழலை மாற்றியமைத்துக் கொண்ட ஒரு சில நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸை திகழச் செய்தது. ஒன்லைனில் சந்திப்புகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கு மாற்று முகாமைத்துவ செயன்முறைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், வெளியக சூழலினால் எழக்கூடிய தடங்கல்களை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாகவும் அமைந்திருந்தது.

சூழலில் நிலவிய உறுதியற்ற நிலை காரணமாக, டிஜிட்டல் மாற்றியமைப்பு செயன்முறையை துரிதமாக பின்பற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை வெளிக்கொணரும் வகையிலும், முகவர் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் செயற்பாட்டு மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வர்த்தக செயற்பாடுகளை தன்னியக்க மயப்படுத்தும் நடவடிக்கைகளை யூனியன் அஷ்யூரன்ஸ் மேற்கொண்ட வண்ணமிருந்தது. விற்பனை செயன்முறைகளுக்கு வினைத்திறனை பெற்றுக் கொடுக்கக்கூடிய அனுகூலங்கள் மற்றும் வெகுமதிகள் ஆகியன ஒன்றிணைக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் இதில் ஒன்றாகும். ஏனைய செயற்பாடுகளில் விற்பனை நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் ஊழியர் செயற்பாடுகள் மற்றும் வருமானமீட்டல் செயற்பாடுகள் ஆகியவற்றை டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக ஊக்குவித்தல், பயிற்சி இடைவெளிகளை நிவர்த்தி செய்தல் மற்றும் ஒட்டுமொத்த வினைத்திறனை கண்காணித்தல் மற்றும் விற்பனை செயலணிக்கு வாடிக்கையாளர் ஈடுபாடு தொடர்பான பரிபூரண பயிற்சிகளை பெற்றுக் கொடுத்தல் போன்றன இதில் அடங்கியுள்ளன.

வாடிக்கையாளர்களை மையப்படுத்திய, பல்திசை சார் பதிலளிப்புகளை பாதுகாப்பு தொடர்பில் அதிகரித்துச் செல்லும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் முதல் அங்கமாக, மும் மொழிகளிலும் அமைந்த 24/7 மணி நேர அழைப்பு நிலையம் மற்றும் இணைய செட் சேவை போன்றவற்றை குறிப்பிட முடியும். மேலதிக செயற்பாடுகளில், சகல காப்புறுதிதாரர்களுக்கும் இலவச கொவிட்-19 ஆயுள் காப்புறுதியும் அடங்கியிருந்தது. இலங்கையில் கொவிட் 19 தொற்றுப் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை அனுமதி பண அனுகூலத்தை அறிமுகம் செய்த முதலாவது ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. முன்னணி தொலைபேசி மருத்துவ தீர்வுகள் வழங்குநரான oDoc உடன் கைகோர்த்து காப்புறுதிதாரர்களுக்கு, சௌகரியமான முறையில் மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துப்பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை முடக்க நிலை அமுலிலிருந்த போது வழங்கியிருந்தது.

யூனியன் அஷ்யூரன்சின் புதிய வழிமுறையின் எதிர்காலம் தொடர்பாக ஜுட் கோம்ஸ் தொடர்ந்து தெரிவிக்கையில், ”வினைத்திறனான, ஈடுபாட்டுடன் கூடிய மூலோபாயங்களை நாம் தொடர்ந்து வடிவமைப்பதுடன், அதற்காக தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவோம். இவற்றினூடாக ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவையை பெற்றுக் கொடுப்பது எமது நோக்காகும். எமது பணிபுரியும் சூழலில் COVID 19 பல மாற்றங்களை ஏற்படுத்திய போதிலும், எமது வாடிக்கையாளர்களுக்கு தமது சேவைகளை வினைத்திறனான வகையில் பெற்றுக் கொள்ளவும், ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலையும் பெற நாம் வழியேற்படுத்தியுள்ளோம். தொற்றுப் பரவல் குறைந்த பின்னர் எழக்கூடிய புதிய வாய்ப்புகள் பற்றியும் நாம் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளதுடன், எமது வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவைகளை நிறைவேற்றும் எமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.” என்றார்.

இலங்கையின் அதிகளவு விருதுகளை தனதாக்கிய ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. மூன்று தசாப்த காலத்துக்கு அதிகமான அனுபவத்தையும், 18 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான சந்தை மூலதனத்தையும், 38 பில்லியன் ரூபாய் ஆயுள் நிதியத்தையும் மற்றும் ஜுன் 2020 இல் மூலதன போதுமை விகிதமான 405% ஐயும் கொண்டுள்ளது. இலங்கையர்களின் கனவை நனவாக்கிட யூனியன் அஷ்யூரன்ஸ் தனது ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதுடன், அதனூடாக கல்வி, சுகாதாரம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய தேவைகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்யவும் பங்களிப்பு வழங்குகின்றது. 76 கிளைகள் மற்றும் 3000 க்கும் அதிகமான உறுதியான பணியாளர்களுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் மக்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப தனது செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது