Preloader images
Preloader icon

பார்வயைாளர்களின் இதயங்களைத் தொடுவதற்கு உண்மையான உணர்வுகள் பிரதானமானவையாக அமைந்துள்ளதாக பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் தெரிவித்தார்.

 

யூனியன் அஷ்யூரன்ஸின் Sisumaga+ தொலைக்காட்சி விளம்பரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.08) தொலைக்காட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. கமல் அத்தர ஆரச்சி, ஷெயொலி ஜயரத்ன, நெத்மி ஹெட்டியாரச்சி மற்றும் சந்தலி பத்திரனகே ஆகியோரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரம் 2 நிமிடங்களுக்கு படமாக்கப்பட்டிருந்தது

பார்வைத்திறன் குறைந்த தந்தை ஒருவருக்கும், அவரின் மகளுக்குமிடையிலான உரையாடலை பிரதிபலிப்பதாக இந்த விளம்பரம் அமைந்திருந்தது. இளம் வயது முதல் பட்டதாரியாகும் வரை அவள் கடந்து வந்த பாதை, அதற்காக அவளின் தந்தையின் தியாகங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. உணர்வுபூர்வமான முறையில் தயாரிக்கப்பட்டிருந்த இந்த விளம்பரம், வாழ்க்கையில் காணப்படும் உறுதியற்ற தருணங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளது. குழந்தையின் எதிர்காலத்துக்காக பெற்றோரின் தியாகம் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டுள்ள நெறிமுறைகளும் இந்த விளம்பரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன

யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில்,எம்மைப் பொறுத்தமட்டில் இது ஒரு வழமையான பிரச்சாரத்திட்டத்திற்கு அப்பாலானது, நாம் நிலைத்திருக்கும் காரணமான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பது என்பதை பற்றியதாகும். பெற்றோர் தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் திட்டமிடும் போது, அவர்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் நினைவில் வர வேண்டும். ஏனெனில், அந்த கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பாதுகாப்பதே எமது கடமை. அந்த விளம்பரத்தில் தந்தையின் தியாகங்கள் என்பது, தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு பெருமளவான பெற்றோர்கள் மேற்கொள்ளும் தியாகங்களை பிரதிபலிக்கின்றது. இந்த ஈடுபாடு உணர்வுபூர்வமானது மற்றும் ஒப்பிடக்கூடியது. நேர்மையான வகையிலும், உண்மையான வகையிலும், இந்த உணர்வு என்பது ஒவ்வொரு பெற்றோரின் வாழ்க்கையிலும் காணப்படும். என்றார்.

இந்த விளம்பரத்தின் தொனிப்பொருள், தந்தையின் தியாகத்தினூடாக பிள்ளைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் தொடர்பான தோற்றத்தை வழங்குவதாக அமைந்திருந்தது. தமது பிள்ளைகளுக்கு சிறந்ததை பெற்றுக் கொடுப்பதற்கு பெற்றோர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை உணர்த்தியிருந்தது. பார்வை மூலம் கல்வியினூடாக பிள்ளை பெற்றுக் கொண்ட அறிவுப் பயணம் குறிக்கப்படுகின்றது. தந்தை மற்றும் மகள் ஆகியோர் ஒன்றிணைந்து எய்திய சாதனைகள் இறுதிக் காட்சிகளில் குறிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையில் எழும் சவால்களை முறியடித்து, மகளின் பட்டமளிப்புடன் உயர்ந்த நிலையை எய்தியதைத் தொடர்ந்து மகளும், தந்தையும் பெருமைக்குரிய தருணத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்தத் திட்டம் தொடர்பாக யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லுசில் டயஸ் கருத்துத் தெரிவிக்கையில், Sisumaga+ தொலைக்காட்சி விளம்பரத்தினூடாக மக்கள் மத்தியில் எதிர்பாராத சம்பவங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியன என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமைந்துள்ளது. இந்த தகவலை பரப்புவதற்கு, நாம் எமது திட்டத்தை மக்களுக்கு நெருக்கமான வகையில் வடிவமைத்திருந்தோம். பன்முகப்படுத்தப்பட்ட ஊடகங்கள் மற்றும் தகவல் வழங்கல் மூலோபாயத்துடன், பெற்றோர்களுக்கு இந்தத் தகவலின் அர்த்தத்தை ஆரம்ப கட்டத்தில் உணர்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமது பிள்ளைகளுக்கு பொருத்தமான முதலீட்டு தீர்மானங்களை மேற்கொள்ள உதவியாக அமைந்துள்ளது. என்றார்.

இன்றைய உலகில் காணப்படும் உறுதியற்ற நிலை காரணமாக, எதிர்காலம் தொடர்பாக புதிய வழியில் திட்டமிட வேண்டியுள்ள நிலையில், ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் உயர் கல்விக்கான செலவை பெற்றுக் கொள்ளும் சவாலுக்கு முகங்கொடுக்கின்றனர். Sisumaga+ ஊடாக பிரத்தியேகமாக, பாதுகாப்பு அடிப்படையிலான கல்வித் திட்டத்தை வடிவமைத்து, அடுத்த தலைமுறையின் எதிர்கால கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

இலங்கையின் அதிகளவு விருதுகளை தனதாக்கிய ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. மூன்று தசாப்த காலத்துக்கு அதிகமான அனுபவத்தையும், 18 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான சந்தை மூலதனத்தையும், 38 பில்லியன் ரூபாய் ஆயுள் நிதியத்தையும் மற்றும் ஜுன் 2020 இல் மூலதன போதுமை விகிதமான 405% ஐயும் கொண்டுள்ளது. இலங்கையர்களின் கனவை நனவாக்கிட யூனியன் அஷ்யூரன்ஸ் தனது ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதுடன், அதனூடாக கல்வி, சுகாதாரம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய தேவைகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்யவும் பங்களிப்பு வழங்குகின்றது. 76 கிளைகள் மற்றும் 3000 க்கும் அதிகமான உறுதியான பணியாளர்களுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் மக்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப தனது செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது.